

சாதாரணமாக வானில் தெரியும் அழகான நட்சத்திரங்கள் சூரியன் நிலவு போன்றவைகள் குறித்து அறியும் ஆவல் அனைவருக்கும் உண்டு. வானியலாளர் ஆராய்ச்சிகள் ஏதேனும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர்.
நமக்கு தெரிந்தது நமது சொந்தக் குடும்பம் தான். ஆனால் வானில் ஒரு குடும்பம் உள்ளது.அதுதான் சூரிய குடும்பம். இந்தக் குடும்பத்தில் மொத்தம் 8 கிரகங்கள் உறுப்பினர்களாக உள்ளன. புதன் (Mercury) ,சுக்கிரன் (Venus), பூமி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn) ,யுரேனஸ் (Uranus),
நெப்டியூன் (Neptune) ஆகிய 8 கிரகங்களில் சனி கிரகம் மிகவும் தனித்துவமானது.
சனியைச் சுற்றி அழகான, தெளிவான பனி, கற்கள், தூசுத் துகள்களால் ஆன வளையங்கள் (Rings) உள்ளன. இது பெரும்பாலும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் பெரிய வாயுக் கிரகம் (Gas Giant) ஆகவும், நீரில் வைக்கப்பட்டால் மிதக்கும் அளவுக்கு மிகக் குறைந்த அடர்த்தி மிக்கதாகவும் பல சிறப்புகளை கொண்டுள்ளது.
100ற்றுக்கும் மேற்பட்ட நிலவுகள் இருப்பது இதன் முக்கிய சிறப்பாக உள்ளது. அதிலும் கிரகத்தை போல் வாயுமண்டலம் உள்ள டைட்டன் (Titan) மிகப்பெரிய நிலவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பல அழகிய நிலவுகள் ஆச்சரியம் தரும் விதமாக இருந்ததால் ஆய்வுகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தது.
சமீபத்தில் இந்த ஆய்வுகள் மூலம் சனி கிரகத்தைச் சுற்றி 128 புதிய நிலவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய முக்கியமான விண்வெளி அறிவியல் செய்தியாக பேசப்படுகிறது.
வானியலாளர்கள் ஒரு சர்வதேச வானியல் குழு Canada-France-Hawaii Telescope (CFHT) மூலம் சனியைச் சுற்றியுள்ள களம் (Hill sphere)-ஐ பல ஆண்டுகள் (2019-2021) கவனித்தபின் 2023-இல் மீண்டும் ஆய்வு நடத்தி சுமார் 5 வருடங்களுக்கு பின் 2025 மார்ச் 20 அன்று ஒரே இரவில் 128 நிலவுகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தது.
ஏற்கனவே இருந்த 146 நிலவுகளுடன் சேர்ந்து இவையும் சேர்ந்து மொத்தம் 274 நிலவுகள் இருக்கும் காரணத்தினால் சனியை "நிலவுகளின் அரசன்" என குறிப்பிடப்படுகிறார்கள். இது சூரிய மண்டலத்தில் எந்த கிரகமும் இல்லாத அளவு மிக அதிகமான நிலவுகளைக் கொண்டிருப்பதைத் தெரிவிக்கிறது.
கண்டறியப்பட்ட பெரும்பாலான புதிய நிலவுகள் அனைத்தும் சிறு விண்கற்கள் போன்று மிகவும் சிறியவை (சுமார் 2–4 கிலோமீட்டர் வரை அகலம்). அனைத்தும் irregular moons என்று அழைக்கப்படும் பொடேடோ ஷேப் அதாவது ஒழுங்கற்ற கோணல் மாணலான வகை சார்ந்து. சனியின் பெரிய நிலவுகளைப் போல் இன்றி பெரிய வளைவு மற்றும் சாய்ந்த (inclined) பாதைகளில் பயணிக்கும் குறும்பொருட்களாக உள்ளன.
இவை பெரும்பாலானவை நீண்ட காலங்களுக்கு முன்பு அதாவது
10, 000 கோடி ஆண்டுகள் முன்பே பெரிய நிலவுகள் அல்லது பொருட்கள் மோதிய போது உருவான உடைந்த துண்டுகளாக இருக்கலாம் என்பது அறிவியலாளர்கள் கருத்து.
சனி கிரகம் தன்னைச் சுற்றியுள்ள நிலவுகளை அழித்தே புதுப்புது வளையங்களை உருவாக்கிக் கொள்வதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்த குட்டி நிலவுகளை யும் மாறுதலுக்கு ஆளாகுமா என அடுத்து வரும் ஆராய்ச்சிகளே அறியும்.
சரி.. இந்த நிலவுகளை நாம் பார்க்க முடியுமா? என்றால் நிச்சயமாக டெலஸ்கோப் போன்ற கருவிகள் கொண்டும் காண முடியாது என்பதுதான் பதில். இதன் மூலம் மற்ற கிரகங்களைச் சுற்றி (குறிப்பாக ஜூபிடர்) புரியாத புதிர்களும் , மர்மங்களும் , ஆச்சரியங்களும் வான்வெளி ஆராய்ச்சிக்காக காத்திருக்கிறது என அறியலாம்.