சூப்பர் சார்ஜரை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்... இனி 10 நிமிடத்தில் கார் பேட்டரியை சார்ஜ் செய்யலாம்!

super charger
Scientists invented a super charger.
Published on

பேட்டரிகளை அதிவிரைவாக சார்ஜ் செய்யக்கூடிய சூப்பர் சார்ஜரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இந்த சார்ஜரைப் பயன்படுத்தி ஒரு கார் பேட்டரியை 10 நிமிடத்தில் சார்ஜ் செய்துவிடலாம். இதுகுறித்த முழு விவரங்களை பதிவில் பார்க்கலாம். 

இந்த அற்புதமான சார்ஜரை கண்டுபிடித்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான அங்கூர் குப்தா மற்றும் அவரது குழுவினர். அவர்கள் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சார்ஜரைப் பயன்படுத்தி தொலைபேசி அல்லது மடிக்கணினியை ஒரே நிமிடத்தில் ஃபுல் சார்ஜ் செய்துவிடலாம். அதேநேரம் வெறும் 10 நிமிடங்களில் எலக்ட்ரிக் காரை முழு சார்ஜ் செய்துவிட முடியும் என்கின்றனர். 

இவர்களது ஆய்வானது நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ் ஜெர்னலில் வெளியாகியுள்ளது. அயணிகள் நுண்ணிய துளைகளின் வளையமைப்பிற்குள் எப்படியெல்லாம் நகர்கிறது என்பதை முழுமையாக விளக்குகிறது அவர்களது ஆய்வு. இதுகுறித்து அமெரிக்கா கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரான குப்த கூறியதாவது, 

இந்த சூப்பர் சார்ஜரானது பேட்டரிகள் மிக வேகமாக சார்ஜ் ஆக அனுமதிக்கும். இவை எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மற்றும் வாகனங்களில் ஆற்றலை சேமிப்பதற்கு மட்டுமின்றி மின் தேவையின் ஏற்ற இறக்கங்களின்போது மின் தேவையை மிகத் திறமையாக பூர்த்தி செய்ய உதவும். மின்சார இருக்கும்போதே வேகமாக சார்ஜ் செய்துவிடும் என்பதால், வேகமான மின்சார விநியோகத்திற்கு இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது. இந்த சூப்பர் கெப்பாசிட்டர்கள் பேட்டரிகளை வேகமாக சார்ஜ் செய்யவும், அதன் நீண்ட ஆயுளை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பானது எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகன துறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எலக்ட்ரிக் வாகனங்களில் உள்ள மிகப்பெரும் சிக்கலே அதன் சார்ஜிங் நேரம்தான். என்னதான் ஆற்றல் மிக்க பேட்டரிகளை நாம் பயன்படுத்தினாலும், அது சார்ஜ் ஏறுவதற்கு நேரம் பிடிக்கும் என்பதால், தொலைதூரத்திற்கு மின்சார வாகனங்களை இயக்குவது கடினமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த கண்டுபிடிப்பு மூலம், வெறும் பத்து நிமிடத்தில் பேட்டரியை சார்ஜ் செய்துவிடலாம் என்பதால், தொலைதூர பயணத்திற்கு, இந்த கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
Gemini AI: சாதகங்களும், பாதகங்களும்!
super charger

இருப்பினும் இது எந்த அளவுக்கு ஆற்றல் மிக்கது? இதனால் பேட்டரிகளுக்கு ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டால், மின்சார வாகனத் துறையில் பெரும் மைல்கல்லாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி, மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும் இது வரப்பிரசாதமாக அமையலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com