
நீர் விமானம் என்றால் என்ன? என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அதாவது இத்தகைய விமானம் நிலத்தின் மூலமும் செல்லும் நீர் வழியாகவும் செல்லும். நிலத்தின் மூலம் செல்லும்போது சக்கரங்கள் உதவி மூலமாகவும், நீரில் செல்லும்போது படகு போன்ற அடித்தளம் கொண்டது. இதன் வாயிலாக நீரிலும் செல்லும் தன்மை உடையது.
இது பெரும்பாலும் கரீபியன் தீவுகளில் உள்ள கடற்கரையில் பெருமளவில் காணப்படுகிறது. பொதுவாக இது ஆறுகள், ஏரிகள், பெரிய குளங்கள் இவற்றில் பயணிக்க கூடியது. சிறிய அளவிலான தனியார் சரக்குகளை இதன் மூலம் கொண்டு செல்லலாம். விமான விபத்து அவசர காலங்கள் இயற்கை இடர்பாடுகள் இவற்றில் இதன் செயல்பாடுகள் பாராட்டும்படி உள்ளது. கடல் வழி ரோந்து கடல் சார் பயணம் இவற்றுக்கு ரேடார் மூலம் இவை பயன்படுத்தப்படுகிறது.
நீர்வழிப் போக்குவரத்து மிகக் குறைந்த செலவில் பயன்பாட்டில் உள்ளது சிறப்பு அம்சமாகும். எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. கனமான பொருட்களை இதன் மூலம் எடுத்துச் செல்ல முடியாது. குறைவான எடை உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும். பராமரிப்பு செலவும் குறைவாக உள்ளது. பாதுகாப்பு காரணம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவை நீரில் மெதுவான வேகத்தில் செல்லும். தற்போது 14500 கிலோமீட்டர் நீளமுள்ள உள்நாட்டு நீர் வழிகள், 5200 கிலோமீட்டர் நீளமுள்ள ஆறுகள், 4000 கிலோமீட்டர் கால்வாய்கள் இதன் மூலம் செயல்பாட்டில் உள்ளன. இயந்திரங்கள் உதவியால் சரக்குகள் ஏற்றி இறக்க முடிகிறது. உள்நாட்டில் கங்கை, பகிரதி ஹூக்லி ஆறுகள், பிரம்மபுத்திரா, கோவா ஆறுகள் கேரளாவில் உள்ள காயல்கள், கோதாவரி, கிருஷ்ணா போன்ற டெல்டா பகுதிகளிலும் நீர்வழி விமானங்களை காணலாம்.
இந்தியாவில் 7517 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர் வழிகளை கொண்டுள்ளது. நீர்வழிப் பாதையில் உலக அளவில் இந்தியா 19வது இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் சுற்றுலாவை மேம்படுத்த சிக்கந்தூரில் உள்ள லிங்கன மக்கி அணையில் நீர் விமான போக்குவரத்து துவங்கல் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணை பகுதியில் பிரபலமான சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. தற்போது பக்தர்கள் படகுகள் மூலம் சென்று வருகின்றனர். இனி நீர் விமானம் மூலம் செல்லலாம்.
மத்திய அரசின் உதான் திட்டத்தின் உதவியுடன் லிங்கன மக்கி அணை, உடுப்பியில் உள்ள பைந்து மால்பே கடற்கரை பகுதிகள், கார்வாரின் காளி நதி, மைசூர் கபினி அணைப்பகுதி போன்ற இடங்களில் நீர்வழி விமானங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.