சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் சூரியனிலிருந்து மிக தொலைவில் உள்ள கிரகம் நெப்டியூன். பார்ப்பதற்கு அழகான நீல நிறத்தில் இருக்கும் இந்த கோள், விஞ்ஞானிகளின் ஆர்வத்தை எப்போதுமே தூண்டி வருகிறது. இந்தப் பதிவில் நெப்டியூன் கிரகம் பற்றிய சுவாரசியமான உண்மைகளை விரிவாகக் காண்போம்.
நெப்டியூன் விஞ்ஞானிகளால் கணித கணக்கீடுகளில் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அபூர்வமான கிரகம். யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட சில ஒழுங்கற்ற தன்மைகளைக் கண்டறிந்த விஞ்ஞானிகள், அதற்குக் காரணம் யுரேனஸுக்கு அப்பால் இருக்கும் ஒரு பெரிய பொருளின் ஈர்ப்புவிசை எனக் கருதினர். பிரெஞ்சு வாணியாளர்கள் இதற்காக தனித்தனியாக கணக்கீடுகளை மேற்கொண்டு நெப்டியூன் கிரகம் இருக்கும் இடம் குறித்த தோராயமான ஒரு புள்ளியைக் கணித்தனர்.
1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று ‘ஜோஹான் காலே’ என்ற ஜெர்மன் வாணியையாளர், கணிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்தார். இந்த புதிய கிரகத்திற்கு ரோமானியக் கடல்களின் கடவுளான நெப்டியூனியன் பெயர் சூட்டப்பட்டது.
நெப்டியூனின் சிறப்பம்சங்கள்:
--நெப்டியூனின் அடையாளமே அதன் நீல நிறம்தான். இது வளிமண்டலத்தில் உள்ள மீத்தேன் வாயுவால் ஏற்படுகிறது. சூரிய ஒளியில் உள்ள சிவப்பு நிற ஒளியை மீத்தேன் உறிஞ்சி கொண்டு, நீல நிற ஒளியை பிரதிபலிப்பதால் வெளியே இருந்து பார்ப்பதற்கு நீல நிறமாகத் தோன்றுகிறது.
--நெப்டியூன் கிரகத்தில் சூரியக் குடும்பத்தில் எந்த கிரகத்திலும் காணப்படாத அளவுக்கு வலுவான காற்று வீசுகிறது. இந்த காற்று மணிக்கு 2100 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.
--நெப்டியூனின் வளிமண்டலத்தில் பெரிய இருண்ட புள்ளிகள் காணப்படுகின்றன. இவை ஜூப்பிட்டரில் காணப்படும் பெரிய சிவப்பு புள்ளியைப் போன்றவை. இந்த புள்ளிகள் வளிமண்டலத்தில் ஏற்படும் பெரிய புயல்களால் உருவாகின்றன.
--சனி கிரகத்தைப் போலவே நெப்டியூன் கிரகத்திலும் மிக மெல்லிய வளையங்கள் உள்ளன. இந்த வளையங்கள் மிகவும் மங்கலாக இருப்பதால், அவற்றை தொலைநோக்கியின் மூலம் பார்க்க முடியாது.
--நெப்டியூன் கிரகம் சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும் அதன் உள்பகுதி மிகவும் வெப்பமாக உள்ளது. இந்த உள் வெப்பம் எவ்வாறு உருவாகிறது என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது.
--நெப்டியூன் கிரகத்தை நேரடியாக ஆய்வு செய்த ஒரே விண்கலம் வாயேஜர் 2 ஆகும். 1981 ஆம் ஆண்டு வாயேஜர் 2 விண்கலம் நெப்டியூனை அடைந்து, அதன் புகைப்படங்கள் மற்றும் தரவுகளை பூமிக்கு அனுப்பியது. இந்தத் தரவுகளின் மூலம் நெப்டியூனைப் பற்றிய நமது அறிவு பெரிதும் விரிவடைந்தது.
நெப்டியூன் கிரகம் பற்றிய சில சுவாரசிய உண்மைகள்:
நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 வருடங்கள் ஆகும்.
இந்த கிரகத்தில் ஒரு நாள் என்பது பூமியில் 16 மணி நேரத்திற்கு சமம்.
நெப்டியூன் கிரகத்திற்கு இதுவரை 14 நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தனது அச்சில் மிக வேகமாக சூழலும் கிரகங்களில் நெப்டியூனும் ஒன்று.
நெப்டியூன் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் ஈலியம் மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்கள் அதிக அளவில் உள்ளன.
நெப்டியூன் பல அதிசயங்களை உள்ளடக்கிய ஒரு அற்புதமான கிரகமாகும். இதன் கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியது. நெப்டியூன் கிரகம் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் நாம் நெப்டியூனைப் பற்றி மேலும் பல சுவாரசியமான உண்மைகளை அறிந்துகொள்ளலாம்.