
வானில் ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். இதில் சூரியனிலிருந்து நான்காவதாக அமைந்திருக்கும் ஒரு கிரகம் செவ்வாய். செய்வாய் கிரகத்தைப் பற்றிய பல தகவல்களை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுவோமா?
செவ்வாய் கிரகத்தை கி.பி.1877 ஆம் ஆண்டில் ஹால் என்பவர் கண்டுபிடித்தார். செவ்வாய் கிரகம் பாறைகள் மற்றும் உலோகங்களால் ஆனது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறி வசிக்கலாம் என்ற கொள்கை சிலகாலமாக வலுத்துக் கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் செவ்வாய் கிரகத்தின் பருவநிலை பூமியை ஒத்ததாக இருக்கிறது.
மேலும் செவ்வாய் கிரகம் பூமியைப் போல சூரியனை அதே அளவிற்கு அச்சில் திரும்பியுள்ளது. இதன் காரணமாகவே பூமியில் இருப்பது போலவே பருவநிலை மற்றும் சூழ்நிலைகள் செவ்வாய் கிரகத்திலும் காணப்படுகின்றன. பூமியின் அச்சானது சூரியனை நோக்கி 23.45 டிகிரி திரும்பியுள்ளது. செவ்வாயின் அச்சானது சூரியனை நோக்கி 25.17 டிகிரி திரும்பியுள்ளது. இதுவே இந்த இரண்டு கிரகங்களும் ஒத்த அமைப்புடையதாக கருதப்படுவதற்குக் காரணமாகும்.
செவ்வாய் கிரகத்தில் ஏற்கெனவே உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆனால் இந்த கருத்து உறுதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இதுகுறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
செவ்வாய் கிரகத்தின் பகல் நேர வெப்பநிலை பத்து டிகிரி சென்டிகிரேடாகவும் இரவு நேரங்களில் மைனஸ் 85 டிகிரி சென்டிகிரேடாகவும் உள்ளதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தகைய வெப்பமான சூழ்நிலையில் உயிர்களும் பயிர்களும் பிழைத்து வாழ முடியாது என்றே தோன்றுகிறது.
செவ்வாய் கிரகத்தின் நிறையும் ஈர்ப்பு விசையும் பூமியின் நிறை மற்றும் ஈர்ப்பு விசையைவிட குறைவாகும். செவ்வாய் கிரகம் அளவில் பூமியைவிட சற்று சிறிய கிரகமாகும்.
இந்த கிரகம் சூரியனிலிருந்து சுமார் 225 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வரும் போது அது பூமியிலிருந்து மூன்றரை கோடி மைல் தூரத்தில் அமைகிறது. ஆனால் பூமியிலிருந்து தொலையில் இருக்கும் போது அது பூமியிலிருந்து இருபத்து மூன்றரை கோடி மைல் தூரத்தில் அமைகிறது.
செவ்வாய் கிரகத்தின் விட்டம் 6,755 கிலோமீட்டர்களாகும். செவ்வாய் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றிவர 687 நாட்களை எடுத்துக் கொள்ளுகிறது. பூமியைப் போன்றே செவ்வாய் கிரகமும் ஒரே நாளில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு விடுகிறது. செவ்வாய் கிரகத்தில் பருவகாலங்கள் பூமியில் நிலவும் பருவகாலத்தைவிட இரண்டு மடங்கு காணப்படுகிறது.
செவ்வாய் கிரகம் சூரியனைச் சுற்றிவர பூமி சுற்றுவதைப் போல இரண்டு மடங்கு எடுத்துக்கொள்கிறது. இதனாலேயே பருவகாலங்கள் இரண்டு மடங்கு காணப்படுகிறது. உதாரணமாக பூமியில் கோடைக்காலம் இரண்டு மாதங்கள் என்றால் செவ்வாயில் நான்கு மாதங்கள் காணப்படும். செவ்வாய் கிரகத்தின் வட மற்றும் தென் துருவங்களில் பனிப்படலம் மூடியுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு செந்நிறத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே செவ்வாய் கிரகம் 'சிவப்பு கிரகம்' என்று அழைக்கப்படுகிறது.
செவ்வாயின் வளிமண்டத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயு நிறைந்துள்ளது. வளிமண்டலத்தில் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் காணப்படுவதில்லை.
புவியீர்ப்பு தன்மை பூமிக்கும் மார்ஸ்க்கும் 5:2 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. ஒரு மனிதனின் எடை பூமியில் 80 கிலோ இருந்தால் அவனுடைய எடை மார்ஸ்சில் 30 கிலோ இருக்கும். ஒரு மனிதனால் பூமியில் 5 அடி உயரம் தாண்ட முடிந்தால் அதே அளவு சக்தியைப் பயன்படுத்தி அவனால் மார்ஸில் 13 அடி உயரம் தாண்ட முடியும்.
பூமிக்கு நிலா ஒரு இயற்கை துணைக்கோள். இதுபோலவே செவ்வாய்க்கு போபோஸ் மற்றும் டிமோஸ் என்ற இரண்டு துணைக்கோள்கள் அமைந்துள்ளன. இந்த இரண்டு துணைக்கோள்களும் மிகவும் சிறிய துணைக்கோள்களாகும். போபோஸின் விட்டம் பத்து மைல்களாகும். டிமோஸின் விட்டம் நாற்பது மைல்களாகும். இது செவ்வாய் கிரகத்திலிருந்து ஐயாயிரத்து எண்ணூறு மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த துணைக்கோள் செவ்வாயை ஒரு முறை சுற்றிவர ஏழரை மணிநேரம் ஆகிறது.