உங்க ஸ்மார்ட்போன் மெதுவா சார்ஜ் ஏறுதா? அதற்கான தீர்வு இதோ! 

Slow Smartphone Charging?
Slow Smartphone Charging?

எவ்வளவுதான் சார்ஜ் போட்டாலும் உங்களது ஸ்மார்ட்போன் மெதுவாக சார்ஜ் ஏறுதா? அதை சரி செய்வதற்கான அட்டகாசமான டிப்ஸ் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. 

நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போனை வாங்கி நீண்ட காலம் ஆனால், சார்ஜிங் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். இது சில முக்கியமான நேரங்களில் சார்ஜ் வேகமாக ஏறாமல் அதிக எரிச்சலை உண்டாக்கும். ஆனால் இந்த சிக்கலை நீங்களே எளிதாக சரி செய்ய முடியும். 

சார்ஜிங் கேபிள் மற்றும் அடாப்டரை சரிபார்க்கவும்: உங்கள் ஸ்மார்ட் ஃபோனின் சார்ஜிங் வேகத்தில் சார்ஜிங் கேபிள் மற்றும் அடாப்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு ஏற்ற உயர்தர சார்ஜிங் கேபிள் மற்றும் அடாப்டரை பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறைந்த தரம் அல்லது சேதமடைந்த கேபிள்கள் மெதுவான சார்ஜிங் வேகத்தை ஏற்படுத்தும். எனவே இவற்றை முதலில் சரி பார்க்கவும். 

சார்ஜிங் போர்ட்டை சுத்தம் செய்யவும்: சில நேரங்களில் சார்ஜிங் போர்ட்டில் அதிகமாக தூசி, பஞ்சு அல்லது குப்பைகள் படிந்திருந்தால், அது சார்ஜிங் வேகத்தைக் குறைக்கலாம். எனவே சார்ஜிங் போர்ட்டை நீங்களே பரிசோதித்து, அதை சேதப்படுத்தாமல் சுத்தப்படுத்துங்கள். 

ஸ்மார்ட் போனை ரீஸ்டார்ட் செய்யவும்: சில நேரங்களில் மென்பொருள் சார்ந்த பிரச்சினைகள் அல்லது சில தேவையற்ற செயலிகள் காரணமாக சார்ஜிங் வேகம் பாதிக்கப்படலாம். இத்தகைய சிக்கல்களை, ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வது மூலமாக தீர்க்க முடியும். உங்களது ஸ்மார்ட்போனின் பவர் பட்டனை அழுத்திப் பிடித்தால் சாதனத்தை ரீஸ்டார்ட் செய்வதற்கான ஆப்ஷன் காட்டப்படும். அதைப் பயன்படுத்தி ரீஸ்டார்ட் செய்ததும் உங்கள் சார்ஜிங் வேகம் அதிகரிக்கிறதா என சரிப்பாருங்கள். 

தேவையற்ற செயலிகளை நீக்குங்கள்: உங்கள் ஸ்மார்ட்போனில் அதிகப்படியான தேவையற்ற செயலிகள் பின்புறத்தில் இயங்கிக் கொண்டிருந்தால் கூட, சார்ஜிங் பிரச்சனை ஏற்படலாம். எனவே உங்களது சார்ஜிங் செயல்முறையை மேம்படுத்த, எல்லா தேவையற்ற செயலிகளையும் நீக்குங்கள். இது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தேவையில்லாத அழுத்தத்தைக் குறைத்து வேகமாக சார்ஜ் ஏற உதவும். 

Flight Mode-ஐ இயக்கவும்: உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் பிளைட் மோடை இயக்குவது மூலமாக, நெட்வொர்க் தரவுகள், வைபை மற்றும் ப்ளூடூத் உட்பட அனைத்து வயர்லெஸ் இணைப்புகளையும் தற்காலிகமாக முடக்கி வைக்க முடியும். சார்ஜ் செய்யும்போது பிளைட் மோடை இயக்கினால், சார்ஜிங் வேகம் அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
6G தொழில்நுட்பம் வந்தால், ஸ்மார்ட் போன்களே இருக்காது… எல்லாம் சிப் தான்! 
Slow Smartphone Charging?

பேட்டரி ஆரோக்கியத்தை கண்காணிக்கவும்: காலப்போக்கில் ஸ்மார்ட்போனின் பேட்டரிகள் சிதைந்து, மெதுவான சார்ஜிங் வேகத்திற்கு வழிவகுக்கும். எனவே ஸ்மார்ட்போனின் பேட்டரி செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, உங்கள் சாதனத்தின் பேட்டரி ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது என்பதை சரி பார்க்கவும். உங்கள் ஸ்மார்ட் போனில் அந்த அம்சம் இல்லை என்றால், அதற்காகவென்றே பிரத்தியேகமாக இருக்கும் செயலிகளை பயன்படுத்தி சரிபார்க்கவும். பேட்டரியின் ஆரோக்கியம் குறைவாக இருந்தால், பேட்டரியை மாற்றுவதே சிறந்தது.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றி உங்கள் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் வேகத்தை அதிகரிக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com