6G தொழில்நுட்பம் வந்தால், ஸ்மார்ட் போன்களே இருக்காது… எல்லாம் சிப் தான்! 

6G Technology
6G Technology

தற்போது எங்கு சென்றாலும் கைகளில் ஸ்மார்ட்போன் உடனையே வலம் வரும் நாம், இன்னும் சில ஆண்டுகளில் கைகளுக்குள் ஸ்மார்ட்போனை வைத்திருப்போம் என்கின்றனர் டெக் நிபுணர்கள். குறிப்பாக 5ஜி தொழில்நுட்பத்திற்கு பின்பு வரக்கூடிய 6ஜி தொழில்நுட்பம் அதை சாத்தியப்படுத்தும் என சொல்லப்படுகிறது. 

தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மனிதர்கள் செல்போன் தொழில்நுட்பதற்கு மாற கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலானது. ஆனால் செல்போனிலிருந்து ஸ்மார்ட் போனுக்கு மாறியதற்கான காலம் மிகவும் குறுகியது. இந்த நிலையில் 6G தொழில்நுட்பத்தால் மனித உடலே ஸ்மார்ட் ஃபோனாக மாறிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பலவிதமான பொருட்களில் பொருத்தப்படும் சிப்கள், பொருட்களின் இருப்பிடத்தை அறிய, அவற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. 

கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளாக மாறிவிட்ட சிப்கள் தற்போது உடலிலும், உடைகளிலும் பொருத்தும் வகையில் பல விதங்களில் அறிமுகமாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வீடன் நாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் உடலில் சிப்கள் பொருத்தப்பட்டன. அடையாள அட்டைகளுக்கு பதிலாக அவர்களது கைகளில் பொருத்தப்பட்டன அரிசி அளவிலான சிறிய சிப்கள். 

இந்த பயோ சிப் பொருத்திக் கொண்ட ஊழியர், நிறுவனத்தின் கதவருக்கே சென்றால் தானாகவே கதவு திறந்து விடும். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தாமலேயே அலுவலகக் கேண்டீனில் உணவு வாங்கிக் கொள்ளலாம். ஊழியரின் வருகை மற்றும் செல்லும் நேரம் துல்லியமாக பதிவு செய்யப்படும் என்பதால் பல நிறுவனங்களிலும் இந்த தொழில்நுட்பம் பிரபலமானது.

பயோ சிப்
பயோ சிப்

இந்த சிப்களில் ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் மட்டுமின்றி அவர்களது பாஸ்போர்ட் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களும் அடக்கம். ஆகவே டிக்கெட் எடுத்தல், சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குவது என எல்லா விதமான இடங்களிலும் இந்த சிப்பை பயன்படுத்தலாம். இதே தொழில்நுட்பத்தை அண்மைக்காலமாக அமெரிக்காவில் உள்ள சில நிறுவனங்களும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதேபோல் ஸ்மார்ட்போனையும் உடலிலேயே பொருத்திக் கொள்ளும் காலம் வர இருப்பதாக கூறுகின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள். 

2030 ஆம் ஆண்டிற்குள் 6ஜி தொழில்நுட்பம் வந்துவிடும் என்பதால் அப்போது நமது கைகளில் ஸ்மார்ட்போன்கள் இருக்க வாய்ப்பு இல்லை என்பது அவர்களின் வாதம். தற்போது ஸ்மார்ட் ஃபோன்களுக்கு பதிலாக ஸ்மார்ட் கண்ணாடி மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று நமது கைகளில் விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் ஃபோன்கள் நமது கைகளுக்குள் சிப்களாக பொருத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. 

நியூராலிங்க்
நியூராலிங்க்

ஏற்கனவே மனித மூளைக்குள் சிப்களை பொருத்தும் தொழில்நுட்பத்தை நியூராலிங்க் வெற்றிகரமாக செய்து முடித்துள்ள நிலையில், மூளையிலிருந்து வரும் சிக்னல்களை பதிவு செய்து கம்ப்யூட்டர் போல செயல்படும் இந்த சிப்கள், இன்னும் சில ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டு, பரவலாக பலரது மூளையில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
Top 5 புதிய மற்றும் நம்பிக்கைக்குறிய AI தொழில்நுட்பங்கள்!
6G Technology

இதுபோன்ற தொழில்நுட்பங்கள் தற்போது வேகமெடுத்து வருவதால், எதிர்காலத்தில் ஸ்மார்ட் ஃபோன்களை நாம் நமது கைகளிலோ பாக்கெட்டுகளிலோ தூக்கிக்கொண்டு திரிய வேண்டாம். எல்லாம் நமது முக அசைவு, உடல் அசைவு, வாய்மொழி உத்தரவு போன்றவற்றால் இயங்கக்கூடிய வகையில் மாறிவிடும் என கணிக்கின்றனர் நிபுணர்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com