Solar Machine that moves according to the sun.
Solar Machine that moves according to the sun.

சூரியனுக்கு ஏற்ப நகரும் சோலார் விவசாய இயந்திரம்!

Published on

நகரும் சோலார் விவசாய இயந்திரங்கள் செலவை குறைப்பதாகவும், திருடப்படாமல் பாதுகாத்துக் கொள்ள எளிதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

காலநிலை மாற்றம், வேலையாட்கள் குறைவு, நோய் தாக்குதல் அதிகரிப்பு, விளைச்சல் குறைவு என்று பல்வேறு வகையான பிரச்சனைகளினால் லாபம் குறைந்த தொழிலாக விவசாயம் மாறி இருக்கிறது. இந்த நிலையில் விவசாயம் செய்யும் நபர்களும் விவசாயத்தில் செலவை குறைக்க போதுமான முயற்சிகளை செய்ய முனைப்பு காட்டுகின்றனர். இதற்கு நவீன தொழில்நுட்பங்கள் தற்போது பெருமளவில் கை கொடுத்திருக்கின்றன. மேலும் தமிழ்நாடு அரசு பல்வேறு இயந்திரங்களை மானிய விலையிலும், வாடகைக்கும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

அதே நேரம் விவசாயிகள், விவசாய இயந்திரங்களை செயல்படுத்த பெட்ரோல் அல்லது டீசல் வாங்க அதிகம் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இவற்றிற்கான செலவை குறைக்க தற்போது அனைத்து வகை விவசாய கருவிகளும், சோலார் கருவிகள் பொருத்தப்பட்டு நவீன கருவிகளாக தற்போது பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சோலார் டிராக்டர்கள், சோலார் விதைக்கருவிகள், அறுவடை இயந்திரங்கள் என்று அனைத்தும் இயந்திரங்களிலும் சோலார் பொருத்தப்பட்டு வருகிறது. இவை விவசாயிகளின் செலவை மேலும் குறைப்பதால் விவசாயிகள் சோலார் பொருத்தப்பட்ட கருவிகளை மானிய விலையில் வாங்கவும் மற்றும் வாடகைக்கு வாங்கவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து தயாரிப்பாளராக மாறிய ‘ரெஜினா’ பட இசையமைப்பாளர்!
Solar Machine that moves according to the sun.

அதிலும் நடமாடும் வகையில் டயர் பொருத்தப்பட்டு அமைக்கப்பட்ட சோலார்கள் கருவிகள் விவசாயிகளுக்கு அதிகம் பயன்படுவதாகவும். இவற்றை நகர்த்தி எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்வதால் திருட்டு பிரச்சனை தீர்க்கப்படுவதாகவும். இவை சூரியன் இருக்கும் திசைக்கு ஏற்றவாறு நகர்த்திக் கொள்ளவும், சுழற்றிக் கொள்ளவும் முடிவதாலும் கூடுதல் பயன் அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் சோலார் பொருத்திய இயந்திர கருவிகளுக்கு விவசாயத் துறையில் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com