விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க சூரிய மின்சக்தி கருவி!

Device to protect crops from animals.
Device to protect crops from animals.
Published on

விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து விளைநிலங்களை பாதுகாக்கும் சூரிய மின்சக்தியில் இயங்கும் கருவி அறிமுகம்.

அதிக இடர்பாடுகளை சந்திக்கக்கூடிய முக்கிய துறையாக இருப்பது விவசாயம். இதனால் பல நேரங்களில் விவசாயிகள் இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக அதிநவீன தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் தொடர்ச்சியாக புகுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது விவசாய நிலங்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினையான விலங்குகள் மற்றும் பறவைகள் இடமிருந்து விளைநிலங்களை பாதுகாக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து பஞ்சுர்லி எனும் சூரிய ஒளியில் இயங்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த இயந்திரம் சூரிய ஒளி மூலம் மின்னாற்றலை பெற்று, பேட்டரியில் சேகரித்துக் கொண்டு 24 மணி நேரமும், அனைத்து வகை கால சூழலிலும் இயங்கக்கூடியது. ஒரு இயந்திரத்தின் மூலம் 5 ஏக்கர் விளை நிலத்தை பாதுகாக்க முடியும். இது மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை ஒலி எழுப்பும் தன்மை கொண்டது. மேலும் இரவு நேரத்தில் 800 மீட்டர் வரை டார்ச் லைட் போன்ற வெளிச்சத்தை ஏற்படுத்தும். இதனால் விலங்குகள் அச்சப்படும், விளைநிலங்களில் வருவது தடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
விவசாயிகள் ட்ரோன் வாங்க தமிழ்நாடு அரசு நிதி உதவி!
Device to protect crops from animals.

ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் மற்றும் விலங்குகளால் அதிக அளவிலான விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு பாதிக்கப்படும் விளைநிலங்களுக்கு காப்பீடு பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விலங்குகளை மற்றும் பறவைகளை விரட்ட மக்கள் நெருப்புகளை காட்டி, பட்டாசுகளை வெடித்து மற்றும் ஒரு சிலர் தடை செய்யப்பட்ட மின்வெளிகளை அமைத்தும் விளை நிலங்களை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர். இதனால் பல விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிரிழப்பு ஏற்படுகிறது. இவற்றை தடுக்கவும் மக்கள் நஷ்டம் அடையாமல் பாதுகாக்கவும் பஞீசுர்லி இயந்திரம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com