
உலக விண்வெளியில் தொழில்நுட்பம் (space technology) என்பது தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் மற்றும் தொலைநோக்கிகள் போன்ற தொழில்நுட்பங்கள், பூமி மற்றும் பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்தி, மனிதகுலத்தின் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன.
அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் பங்கு:
விண்வெளி பயணம் என்பது பெரும்பாலானவர்களுக்கு ஒரு தொலைதூரக் கனவாகும். ஆனால் விண்வெளி தொழில்நுட்பம் ஏற்கனவே நம்முடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது அன்றாட வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
1) தகவல் தொடர்பு:
செயற்கைக்கோள்கள் மூலம் இணையம், தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி சேவைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களை இணைக்கின்றது.
2) வானிலை மற்றும் காலநிலை:
வானிலை முன்னறிவிப்பு, காலநிலை மாற்றத்தை கண்காணிப்பது மற்றும் இயற்கைப் பேரழிவுகளை கண்டறிவதில் விண்வெளி தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. வானிலை முன்னறிவிப்பிற்கு செல்லும் பெரும்பாலான தரவுகள் விண்வெளியில் இருந்து பெறப்படுகின்றன. அதேபோல் காலநிலை மாற்றத்தைப் புரிந்து கொள்ள நாம் கண்காணிக்கும் தரவு புள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்டவை இங்கிருந்தே பெறப்படுகின்றன.
3) வழி செலுத்தல்:
செயற்கைக்கோள் வழி செலுத்தல் திறன்கள் தொலைத்தொடர்புகளைப் போலவே விண்வெளியில் இருந்து வரும் தரவை சார்ந்துள்ளது. வாகனங்கள் மற்றும் தனி நபர்களுக்கான துல்லியமான திசை மற்றும் இருப்பிடத் தகவலை ஜி.பி.எஸ் (GPS) போன்ற தொழில்நுட்பங்கள் வழங்குகின்றன.
4) கல்வி மற்றும் ஆராய்ச்சி:
விண்வெளி ஆய்வு திட்டங்கள், விஞ்ஞானிகளுக்கு புதிய சோதனைகளைச் செய்யவும், பிரபஞ்சம் பற்றிய அறிவை விரிவுபடுத்தவும் உதவுகின்றது.
உலக விண்வெளியில் தொழில் நுட்பத்தின் பங்கு - பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம்:
5) தேசிய பாதுகாப்பு:
ராணுவப் படைகள் உளவு, இலக்கு நிர்ணயம் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளுக்காக செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துகின்றன.
6) பொருளாதார வளர்ச்சி:
விண்வெளி தொழில்நுட்பம், நவீன சமூகங்களின் செயல்பாட்டிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்குவதற்கும் முக்கியமாகும்.
7) புவியியல் மற்றும் புவி கண்காணிப்பு:
பூமியின் வளங்களை ஆய்வு செய்வதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை கண்காணிப்பதற்கும் ரிமோட் சென்சிங் (remote sensing) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
விண்வெளியில் உள்ள தொலைதூர பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை ஆய்வு செய்ய விண்கலங்கள், தொலைநோக்கிகள் மற்றும் விண்வெளி ஆய்வகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.