Stolen Device Protection: இனி iPhone தகவல்களைத் திருட முடியாது!

No more stealing iPhone data!
No more stealing iPhone data!

ஐபோன் பயனர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஐபோன் சாதனங்களில் Stolen Device Protection என்ற புதிய பாதுகாப்பு அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

ஐபோன் என்றாலே முதலில் அனைவருக்கும் மனதில் தோன்றுவது அதில் உள்ள பாதுகாப்பு அம்சம்தான். ஆப்பிள் நிறுவனமும், அவர்களின் சாதனங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது என்ற நம்பிக்கை மூலமாகவே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். இருந்தாலும் சில நேரங்களில் அந்நிறுவன சாதனங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, ஐபோனின் தரவுகளை கொள்ளையர்கள் திருடும் வாய்ப்புள்ளது. குறிப்பாக iphoneஐ தொலைத்தவர்கள் இத்தகைய பாதுகாப்பு சிக்கலை சந்திக்கின்றனர். 

ஆனால் இதை நினைத்து இனி யாரும் கவலைப்பட வேண்டாம். ஆப்பிள் நிறுவனம் தொலைந்து போன ஐபோன்களை பாதுகாக்கும் விதமாக பாதுகாப்பு அம்சம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக உங்கள் ஐபோன்கள் தொலைந்து போனாலும் அதில் உள்ள தரவுகளை யாரும் திருட முடியாது. Stolen Device Protection என்ற இந்த அம்சமானது உரிமையாளரிடம் அவர்களின் ஐபோன் சாதனம் இல்லாத போது தானாகவே ஆக்டிவேட் ஆகிவிடும். அந்த சாதனத்தை பயன்படுத்திய பயனர் முறையாக ஃபேஸ் ஐடி, பாஸ்வேர்ட் தகவல்களை உள்ளடவில்லை என்றால், தன்னை சாதனத்தை இயக்குவது உண்மையான பயனர் இல்லை என எடுத்துக்கொண்டு, இந்த அம்சம் உடனடியாக செயல்படுத்தப்படும். 

இதன் மூலமாக உங்கள் ஐபோனில் உள்ள தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது. முன்பெல்லாம் திருடப்பட்ட ஐபோன் சாதனங்களை எளிதாக அதன் பாஸ்வேர்டு கிராக் செய்து பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் மூலமாக மேலும் பாதுகாப்பான சாதனமாக ஐபோன்கள் மாறியுள்ளன. இதையும் மீறி ஒருவர் ஐபோனை திறக்க முயன்றால், அதில் உள்ள தரவுகள் அனைத்தும் தானாகவே அழிந்து விடும்படி ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளது. 

இதையும் படியுங்கள்:
கூடுதல் கதிர்வீச்சை வெளியிடும் iphone!
No more stealing iPhone data!

இப்போது இந்த அம்சத்தை பீட்டா iOS 17.3 வெர்ஷனில் அனைவரும் பயன்படுத்தக் கிடைக்கிறது. இதை முயற்சிக்க விரும்புபவர்கள் உங்களுடைய சாதனத்தை உடனடியாக அப்டேட் செய்து ட்ரை செய்து பாருங்கள். விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com