என்னது...? உங்கள் ஐபோனை 2 வினாடிகளில் சார்ஜ் செய்ய முடியுமா!

Swippitt Hub
Swippitt Hub
Published on

இதென்ன கற்பனையா. அறிவியல் புனைகதை போல் தெரிகிறது,  நம்ப முடிய வில்லையா?

ஆனால் அப்படி இல்லை… ஸ்விப்பிட் ஒரு புரட்சிகரமான டெஸ்க்டாப் சார்ஜரை வெளியிட்டுள்ளது. அதை பயன்படுத்தும் போது நீங்கள் நம்புவீர்கள்.

இது உங்கள் ஐபோனின் டெட் பேட்டரியை 2 வினாடிகளில் முழுமையாகச் சார்ஜ் செய்யும்.

இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்:

Swippitt Hub : இது ஐந்து தனிப்பட்ட 3,500-mAh பேட்டரி பேக்குகளைச் சேமித்துச் சார்ஜ் செய்யும் டெஸ்க்டாப் தொகுதி ஆகும்.

Swippitt இணைப்பு : இவை உங்கள் iPhone க்கான பாதுகாப்புக் கேஸ்கள் மற்றும் துணை பேட்டரிகள் ஆகிய இரண்டிலும் செயல்படும் ஆட்-ஆன் Add On packs ஆகும்.

இன்ஸ்டன்ட் பவர் சிஸ்டம் IPS (ஐபிஎஸ்) : இது ஸ்விப்பிட்டின் தனியுரிம தொழில்நுட்பமாகும். இது விரைவான பேட்டரி மாற்றத்தை செயல்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
செல்பேசி - 20%? / 80%? / 90%? / 100%? சார்ஜ் செய்யலாமா?
Swippitt Hub

உங்கள் ஐபோனை ஸ்விப்பிட் ஹப்பில் வைக்கும் போது, ​​அது தானாகவே டெட் பேட்டரி பேக்கை முழுமையாகச் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியுடன் மாற்றிவிடும். இந்தச் செயல்முறைக்கு 2 வினாடிகள் மட்டுமே ஆகும். நீங்கள் உடனே எடுத்துச் செல்லலாம்.

Swippitt Hub பல தொலைபேசிகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வசதியான தீர்வாக அமைகிறது.

கூடுதலாக, அதனுடன் இணைந்த பயன்பாடு பேட்டரி ஆயுள், கணினி மேலாண்மை மற்றும் தொலைபேசி இருப்பிடம் பற்றிய தகவலையும் வழங்குகிறது.

இருப்பினும், இந்தத் தொழில்நுட்பம் தற்போது iPhone 14, 15 மற்றும் 16 மாடல்களுடன் மட்டுமே உகந்ததாக உள்ளது .

2025 இறுதிக்குள் Android சாதனங்கள் மற்றும் பிற ஐபோன் தலைமுறைகளுக்கு விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விலையைப் பொறுத்தவரை, ஸ்விப்பிட் ஹப் மற்றும் லிங்க் பேட்டரி பேக்குகள் விரைவில், முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 2025 ல் சந்தைக்கு வர இருக்கும் இதன் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், நிச்சயம் இது ஒரு பிரீமியம் தயாரிப்பாக இருக்கலாம் என்கிற நம்பிக்கை உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com