தொழில்நுட்ப சாதனங்கள்: நவீன வாழ்க்கையை மாற்றும் நன்மைகள், சவால்கள் பொறுப்பான பயன்பாட்டின் அவசியம்!

தகவல் தொடர்பு, கல்வி, மருத்துவம் வரை வாழ்க்கையை எளிதாக்கும் தொழில்நுட்ப சாதனங்கள்; அதே நேரத்தில் திரை அடிமை, உடல்நல பாதிப்பு, சைபர் ஆபத்துகள் அதிகரிக்கும் நிலையில் பொறுப்பான பயன்பாடு கட்டாயம்
technology-gadgets
technology-gadgets
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தொழில்நுட்ப சாதனங்கள் என்பவை அன்றாட வாழ்வை எளிதாக்கவும், தகவல்களைப் பரிமாறவும், பணிகளை வேகப்படுத்தும் உதவும் மின்னணு மற்றும் இயந்திரக் கருவிகளாகும். ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், அணியக்கூடிய சாதனங்கள் (Smart watches), IoT கருவிகள் மற்றும் உதவி தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவை நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கங்களாகும்.

 1) தொழில்நுட்ப சாதனங்கள்: 

 *தகவல் தொடர்பு மற்றும் கம்ப்யூட்டிங்: 

மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆடியோ-வீடியோ சாதனங்கள். 

 *அணியக்கூடிய சாதனங்கள் 

ஸ்மார்ட் வாட்சுகள், ஃபிட்னஸ் டிராக்கர்கள், ஸ்மார்ட் கண்ணாடிகள். 

 *உதவி தொழில்நுட்ப சாதனங்கள் 

சக்கர நாற்காலிகள், காது கேட்கும் கருவிகள், பிரெய்லி கருவிகள். 

 *IoT சாதனங்கள்: 

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படும் ஸ்மார்ட் கருவிகள்.

 2) இவற்றின் நன்மைகள்

*உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் நொடிகளில் வீடியோ அழைப்பு மூலம் பேசமுடிகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் நொடிப்பொழுதில் தொடர்பு கொள்ள முடிகிறது. சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோ அழைப்புகள் தூரத்தை குறைத்துள்ளன.

 *தானியங்கி (Automation) கருவிகள் மூலம் நீண்ட நேரம் எடுக்கும் வேலைகளைக் கூட மிகக் குறுகிய நேரத்தில் செய்து முடிக்க முடிகிறது. மணிக்கணக்கில் செய்ய வேண்டிய வேலைகளை நிமிடங்களில் முடிக்க உதவுவதுடன் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கிறது. 

 *ஆன்லைன் வகுப்புகள், கல்வி செயலிகள் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. 

 *கூகுள் (google) போன்ற தேடுபொறிகள் மூலம் எந்த ஒரு தலைப்பிலும் தகவல்களை உடனேப் பெறமுடிகிறது. 

 *ஆன்லைன் ஷாப்பிங், பணப் பரிவர்த்தனை (Net banking) ஆகியவை நேரத்தை மிச்சப்படுத்தி அன்றாட  வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளன.

 *அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொலைதூர மருத்துவ வசதி (Telemedicine) மூலம் நோய்களைக் கண்டறிந்து குணப்படுத்துவது மேம்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
புத்தகம் வேண்டாம்... வகுப்பறை வேண்டாம்! VR இருந்தால் போதும். கல்வியில் நடக்கும் மெகா புரட்சி!
technology-gadgets

 3) சவால்கள்: 

*தகவல் தொடர்பு எளிமை, ஆரோக்கிய கண்காணிப்பு, வேலைத்திறன் அதிகரிப்பு போன்ற நன்மைகள் அதிகம் இருந்தாலும் பல சவால்களையும் கொண்டுள்ளன.

 *அதிக நேரம் திரை (screen) பார்ப்பதால் கண் எரிச்சல், கண் சோர்வு, மன அழுத்தம், கழுத்து மற்றும் கை வலி போன்ற உடல்நல பாதிப்புகள், கவனச் சிதறல் மற்றும் தூக்கமின்மை போன்றவை ஏற்படுகின்றன. 

 *சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதால், நேருக்கு நேர் பேசுவது குறைந்து மனித உறவுகளில் விரிசல் மற்றும் தனிமை உணர்வு போன்றவை உருவாகிறது.

*சைபர் தாக்குதல்கள், தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுதல் மற்றும் ஹேக்கிங் ஆபத்துகள் அதிகரித்துள்ளன.

 *செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரமயமாக்கல் காரணமாக பல மனித வேலைகள் தானியங்கி மயமாக்கப்பட்டு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

 *தொழில்நுட்பம் ஒரு கூர்மையான கத்தி போன்றது. அதை முறையாகவும், கட்டுப்பாடுடனும் பயன் படுத்தினால் அது ஒரு சிறந்த கருவி; இல்லையெனில் அதுவே ஒரு சவாலாக மாறிவிடும். தொழில்நுட்ப சாதனங்கள் மனித வாழ்வின் வசதியை மேம்படுத்தினாலும், அவற்றை அளவோடு பயன் படுத்துவது ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.

logo
Kalki Online
kalkionline.com