மனித மூளை போல செயல்படும் தொழில்நுட்பம்.. அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல்!

Technology that works like the human brain.
Technology that works like the human brain.
Published on

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச அளவில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தை சிறப்பாக்கும் நோக்கத்திற்காகவே கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் காண முடிகிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் தேவையை கணக்கிட்டு அறிமுகம் செய்யப்படும் கண்டுபிடிப்புகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை. 

அப்படிதான் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மனித மூளை போலவே செயல்படும் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். அதாவது இந்த புதிய கண்டுபிடிப்பால் மனித மூளை போல செயல்பட முடியும். இதை ஒரு செயற்கை மூளை என்று கூறலாம். நமது மனித மூளையின் மிகப்பெரிய செயல்களில் ஒன்று நரம்புகளுக்கு இடையே சிக்னல்களை கடத்துவதாகும். செயற்கையாக நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளை கணித்து, மூளையின் சிக்னல்களை சரியாக கைப்பற்றி, அதை நாம் நினைக்கும் வகையில் மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். 

இந்த முதற்கட்ட தொழில்நுட்பத்தால் முழுவதுமாக மனித முலையால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்ய முடியாது. அதேபோல இதைப் பயன்படுத்தி நம்முடைய நினைவுகளை புரிந்து கொள்ளலாம் என நினைக்க வேண்டாம். ஆனால் நரம்புகள் வழியே கடத்தப்படும் தகவல்களை சேகரித்து அதற்கு ஏற்றவாறு எப்படி செயல்படலாம் என்பதை புரிந்து கொள்ளும் வகையில் இதை உருவாக்கியுள்ளனர். 

இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் முதற்கட்டம் வெற்றியடைந்த நிலையில், இதன் திறன்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்ட மேம்படுத்தல்களை அடையும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்களின் கூற்றுப்படி இன்னும் சில பல ஆண்டுகளில், மனித மூளை போலவே செயல்படும் ஒரு ஆர்ட்டிஃபிஷியல் மூளையை விஞ்ஞானிகள் உருவாக்கி விடுவார்கள் என்பதை நாம் உணர முடிகிறது.

இதையும் படியுங்கள்:
இரத்த சோகை நீங்க, மூளை சுறுசுறுப்பாக இயங்க உடலுக்கு என்ன சத்து தேவை தெரியுமா?
Technology that works like the human brain.

எனினும் இப்படி செயற்கையாக மூளை உருவாக்கப்பட்டால் அதனால் எதுபோன்ற பாதிப்புகள் மனித குலத்திற்கு ஏற்படும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். தொழில்நுட்பங்கள் முன்னேற முன்னேற, புது வடிவிலான ஆபத்துகளும் நமக்கு வருகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com