உடல் சீராக இயங்கவும், நோய்களில் இருந்து காக்கவும் வைட்டமின்கள் அவசியம். ஆரோக்கியமான உடலுக்கு பல்வேறு வகையான வைட்டமின்கள் தேவைப்பட்டாலும், வைட்டமின் பி12 இன்றியமையாதது. ஏனெனில், இது மிகவும் அடிப்படையான கட்டமைப்பான டிஎன்ஏவை பராமரிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே, இயற்கையான முறையில் வைட்டமின் பி12ஐ போதுமான அளவு உட்கொள்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
மனித உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக செயல்பட வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. உடலில் பி12 இல்லாதபோது, அது சாதாரண இரத்த சிவப்பணுக்களின் தொகுப்பைக் குறைக்கிறது. இதனால் இரத்த சோகை ஏற்படுகிறது. இது இரத்தத்தில் ஆக்ஸிஜன் சென்று சேர்வதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், இதன் நன்மைகளைக் காண்போம்.
1. மூளை மற்றும் நரம்பு மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.
2. உடலின் பிறவிக் குறைபாடுகளைக் குறைக்க உதவுகிறது.
3. டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் ஒழுங்குமுறைக்கு உதவுகிறது.
4. மாகுலர் சிதைவிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
5. தெளிவாக சிந்திக்கும் திறனை வழங்குகிறது.
வைட்டமின் பி12 பின்வரும் காய்கறிகளில் நிறைந்துள்ளது:
1. பீட்ரூட்: பீட்ரூட்டில் பி12, தாதுக்கள், கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட வைட்டமின்கள் அதிகம் உள்ளன.
2. உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் பொட்டாசியம், உப்பு மற்றும் வைட்டமின்கள் பி12, ஏ மற்றும் டி உள்ளது. இதில் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் அதிகமாக உள்ளன.
3. ஸ்குவாஷ் (பட்டர்நட்): இதில் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம். இதில் அதிக அளவு வைட்டமின் பி12 உள்ளது.
4. காளான்: காளான் ஒரு வகை பூஞ்சை. இதில் வைட்டமின் பி12, இயற்கையான வைட்டமின் டி, புரதம், கால்சியம் மற்றும் தாமிரம், நியாசின், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளன.
வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்:
மனித உடலால் வைட்டமின் பி12 ஐ உருவாக்க முடியாது. எனவே, இறைச்சி, பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற பிற மூலங்களிலிருந்து அதைப் பெறுவது அவசியம். அதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உடல் கல்லீரலில் அதிகமாகச் சேமித்து வைக்கும். இது ஐந்து ஆண்டுகள் வரை அங்கேயே இருக்கும். இருப்பினும், வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகளாக, மூச்சுத் திணறல், படபடப்பு, பலவீனம், சோர்வு அல்லது தலைச்சுற்றல், மனச்சோர்வு, நினைவாற்றல் இழப்பு மற்றும் நடத்தை மாற்றங்கள், மெலிந்த சருமம், மென்மையான நாக்கு, உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு மற்றும் தசை பலவீனம் போன்ற நரம்பு பிரச்னைகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, பசியின்மை அல்லது வாயு கோளாறு, நடப்பதில் சிரமம், பார்வை இழப்பு போன்றவை இருக்கும்.
எனவே வைட்டமின் பி12 உள்ள உணவுகளை உண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.