பூமி எதிர்திசையில் சுற்றத் தொடங்கியுள்ளது… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Earth
Earth
Published on

பூமியின் மையமானது எதிர்புறமாக சுற்றத்தொடங்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த மொத்த பூமியானது Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உட்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக உள்ளது. உலகம் அதன் பாதையில் சுற்றும் வேலையில், பூமியின் மையத்தில் உள்ள திடமான மெட்டல் மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆன INNER CORE என அழைக்கப்படும் பந்து போன்ற அமைப்பு தனிச்சையாக சுற்றி வருகிறது. நிலவின் அளவில் 70 சதவீதம் உள்ள இந்த உட்புற மைய உலோக பந்தின் சுழற்சி குறித்து கடந்த நூற்றாண்டு முதலே விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பூமியின் மைய உலோக அடுக்கின் சுழற்சி குறித்து பல வருடங்களாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சமீபக்காலமாக உலோக அடுக்கின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது. சுழற்சி மட்டுமின்றி இந்த மையப் பகுதியின் சுழற்சி வேகத்திலும் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன்னர் வெவ்வேறு கால கட்டங்களிலிலும் தற்போதும் பூமியில் உள்ள கடல் அலைகள் வீசுகின்ற தன்மைகளையும், பூமியில் ஏற்பட்ட பெரிய அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் தரவுகளையும் கணக்கிட்டு பூமி அடுக்கில் உள்ள மையப்பகுதி எதிர்புறமாக சுழலத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  

சென்ற ஆண்டு இதுகுறித்து தெளிவாக தெரியவில்லை என்பதால், பல பேர் பல கதைகளை கூறினார்கள். அதாவது பல வருடங்களுக்கு ஒருமுறை இப்படித்தான் சுற்றும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், இப்போது முழுமையாகவே எதிர்திசையில் சுற்ற ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
டைனோசர்கள் அழிந்த நாள் எப்படி இருந்திருக்கும் தெரியுமா? 
Earth

கடந்த ஜூன் 12ம் தேதி வெளியான ஆய்வு இதழின் கட்டுரை ஒன்றிலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமியின் மைய சுழற்சியின் திசையில் ஏற்படும் மாற்றத்தால், பூமி வெடிக்காது அல்லது எந்த ஒரு பேரழிவையும் ஏற்படுத்தாது. இச்சம்பவத்தால் பூமிக்கோ, இப்பூவுலகில் வாழும் உயிரினங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இது 1936ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது டச்சு நில அதிர்வு நிபுணர் இங்கே லெஹ்மன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com