Future Of Gaming: மாற்றங்களும், புதுமைகளும்!

Future Of Gaming
Future Of Gaming
Published on

தொழில்நுட்பத் துறையின் அதிதிவீர வளர்ச்சியால் கேமிங் துறையும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இதில் அதிக மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் வெளியே சென்று ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த நாம், இன்று முழு நேரத்தையும் ஸ்மார்ட் போன், கணினி, லேப்டாப் போன்றவற்றிலேயே கழித்துக் கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு நம் பொழுதுபோக்கிற்கு எக்கசக்கமான கேம்கள் வந்துவிட்டன. இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

VR & AR: கேமிங் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகுமென்ட்டட் ரியாலிட்டி ஆகியவை உள்ளன. இவை மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளன. VR ஒரு மெய்நிகர் உலகில் கேம் விளையாடுபவர்களை மூழ்கடிக்கிறது. அதே நேரத்தில் AR நிஜ உலகில் இருக்கும் எல்லா விஷயங்களையும் டிஜிட்டல் உலகில் கொண்டு வருகிறது. இந்த இரண்டு தொழில்நுட்பங்களும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் கேம் பிரியர்களை விளையாட்டு உலகில் மூழ்கடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. 

Cloud Gaming: Gaming On Demand என அழைக்கப்படும் கிளவுட் கேமிங், இணையம் வாயிலாகவே கேம் விளையாடும் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. முன்பெல்லாம் நீங்கள் ஒரு கேம் விளையாட வேண்டும் என்றால், அதற்கான தனி கன்சோல் வாங்க வேண்டும், அல்லது அதன் கோப்புகளை கணினி அல்லது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும். ஆனால் கிளவுட் கேம்மிங் வாயிலாக உங்கள் சாதனத்தில் எதையும் இன்ஸ்டால் செய்யாமல் இணையம் வழியாகவே நேரடியாக நீங்கள் கேம் விளையாட முடியும். இது விலை உயர்ந்த கன்சோல்கள் அல்லது விலையுயர்ந்த கணினிகளின் தேவையை முற்றிலுமாக நீக்குகிறது. 

eSports & Competitive Gaming: சமீபத்திய ஆண்டுகளில் eSports மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. மேலும் இதன் வளர்ச்சி எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது. லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு மத்தியில் நடத்தப்படும் கேமிங் போட்டிகள் ஒரு லாபகரமான தொழிலாக மாறியுள்ளன. எனவே இந்தத் துறை எதிர்காலத்தில் மிகப்பெரிய பொழுதுபோக்கு துறையாக மாறும் என நம்பப்படுகிறது. 

Cross Platform Gaming: இந்த விளையாட்டு முறையில் பிளேயர்கள் அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களைப் பொருட்படுத்தாமல், வெவ்வேறு சாதனங்களில் இருந்து ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ஒன்றாக கேம் விளையாட அனுமதிக்கிறது. அதாவது தொலைதூரத்தில் இருக்கும் உங்களது நண்பருடன் உங்கள் வீட்டில் இருந்தபடியே செஸ் விளையாட முடியும். Free fire, pubg போன்ற விளையாட்டுகளும் இதன் அடிப்படையிலேயே விளையாடப்படுகின்றன. இதன் மூலமாக உலகில் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் நீங்கள் கேம் விளையாடலாம். ஒரு தலை சிறந்த மல்டி பிளேயர் அனுபவத்தை இந்த விளையாட்டு முறை அனைவருக்கும் கொடுக்கிறது. 

AI Gaming: செயற்கை நுண்ணறிவு விளையாட்டு கேமிங் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக்கூடியதாகும். இது விளையாடுபவர்களின் மனநிலை, சிந்தனை, விளையாடும் தன்மைக்கு ஏற்ப கேமினுள் புதிய விஷயங்களை உருவாக்கி, நிகழ்நேரத்தில் விளையாட்டை சுவாரசியமாக மாற்றும் தன்மைகொண்டது. இதன் மூலமாக ஒரு முடிவில்லாத மற்றும் தனித்துவமான விளையாட்டு அனுபவங்கள் விளையாடுபவர்களுக்குக் கிடைக்கும். 

இதையும் படியுங்கள்:
5G தொழில்நுட்பம் என்றால் என்ன?.. இன்டர்நெட்டில் ஏற்படப்போகும் புரட்சி! 
Future Of Gaming

தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருவதால், கேமிங் துறையில் ஏற்படப்போகும் மாற்றத்தை யாரும் தவிர்க்க முடியாது. மேலும் இதனால் சில பாதக விஷயங்களும் நடக்கும் என்பதால், தொழில்நுட்பத்தை சரியான முறையில் கையாள வேண்டியது மிகவும் அவசியமாகும். காலம் செல்லச் செல்ல நம்மை அடிமைப்படுத்தும் விஷயங்கள் அதிகரித்துக் கொண்டு வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அதில் இத்தகைய கேம்கள் மிகப்பெரிய அளவில் நம்மை அடிமைப்படுத்தும் திறன் கொண்டவை. எனவே இதன் சாதக பாதகங்களைப் புரிந்து சரியானபடி பயன்படுத்த வேண்டியது நம் அனைவரது கடமையாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com