ஆர்டிக் கடலில் மறைந்திருக்கும் ஆபத்து! அணுசக்தி கலங்கரை விளக்கங்களின் இருண்ட பக்கங்கள்!

nuclear-powered lighthouses)
nuclear-powered lighthouses
Published on

அணுசக்தியால் இயங்கும் கலங்கரை விளக்குகள் (nuclear-powered lighthouses) என்பது ரஷ்யாவில் சோவியத் யூனியன் 1970களில் வடிவமைத்த ஒரு சிறப்பு திட்டம். இதற்குப் பெயர்: RTG-powered Lighthouses – RTG என்பது Radioisotope Thermoelectric Generator எனப்படும் அணுக்கழிவுகளால் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனம்.

முதல் அணுசக்தி கலங்கரை விளக்கு Russia – Arctic Region

உலகின் முதல் அணுசக்தி கலங்கரை விளக்கை Arctic Ocean பகுதியில் சோவியத் ஒன்றியம் அமைத்தது. இது Cape Zhelaniya, Novaya Zemlya, Russiaவில் அமைந்ததாக என கருதப்படுகிறது. இதில் எரிபொருளாக Plutonium-238 அல்லது Strontium-90 ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.

இவை செயல்படும் விதம்

RTG -யை பயன்படுத்தி, அணுவின் உரிதல் (radioactive decay) மூலம் வெப்பம் உருவாகிறது. அந்த வெப்பம் மின்சாரமாக மாற்றப்படுகிறது. அதன் மூலம் கலங்கரை விளக்கு, ரேடியோ நிலையம், மின்னொளி ஆகியவை செயல்படுகின்றன.

அணுசக்தியை ஏன் பயன்படுத்தினர்?

ஆர்க்டிக் பகுதியில் சூரிய ஒளி குறைவாகவே இருக்கும். பனியால் மூடப்பட்ட இடங்களில் மின் இணைப்பு இல்லை. டீசல் எரிபொருள் கொண்டு மின்சாரம் உருவாக்க இயலாது. பழுதுபார்க்கும் நபர்கள் தூர இடங்களை அடைய முடியாது. அதனால், ஆண்டுகள் தோறும் வேலை செய்யும், பராமரிப்பு தேவை இல்லாத, நீண்ட காலத்துக்கு சக்தி தரும் RTG அணுசக்தி சாதனங்களை பயன்படுத்தினர்.

இவற்றின் தற்போதைய நிலை

சுமார் 100–150 RTG கலங்கரை விளக்குகள் சோவியத் ஒன்றியம் அமைத்ததாக கருதப்படுகிறது. பெரும்பாலானவை தற்போது செயலிழந்துள்ளன. Russia, IAEA (International Atomic Energy Agency) ஆகியவை இவற்றைப் பாதுகாப்பது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
உடனே விண்ணப்பீங்க..! உங்கள் ஊரில் இந்தியன் வங்கியில் அப்ரண்டிஸ் வேலை – 1500 காலியிடங்கள்..!
nuclear-powered lighthouses)

அணுசக்தி கலங்கரை விளக்கு என்பது மனித சமூகத்தின் அறிவியல் சாதனைகளில் ஒரு வித்தியாசமான முயற்சி. கடுமையான இயற்கை சூழ்நிலைகளிலும் தன்னிச்சையாக இயங்கும் இவ்வகை RTG கலங்கரை விளக்குகள், பாதுகாப்பு குறைகளை உணர்த்திய பயணமாக இருந்தது. இவை தற்போது ஒரு காலத்தைச் சுட்டும் அறிவியல் சின்னங்களாகவே இருக்கின்றன.

நன்மைகள்: நீண்ட கால சக்தி வழங்கல். RTG ஆனது 20–30 ஆண்டுகள் வரை மின்சாரம் வழங்கும் திறன் உடையது. இடைஞ்சலின்றி, நீடித்த வேலைசெயலுக்கு ஏற்றது.

ஆர்க்டிக் போன்ற குளிர், மின்சாரம் இல்லாத இடங்களில் நம்பகமான சக்தி மூலமாக இது இருந்தது. சூரிய சக்தி குறைவாக இருக்கும் இடங்களில் இது ஒரு சிறந்த மாற்று.

இயக்கி விடுவதைத் தவிர, தொடர்ந்த பராமரிப்பு தேவையில்லை. மனிதர் இல்லாத இடங்களில் சுயமாக இயங்க முடிகிறது. கலங்கரை விளக்கு மட்டுமின்றி, ரேடியோ ஒலிபரப்பி, காலநிலை கண்காணிப்பு, நட்சத்திர வெளி சேவைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்பட்டது.

தீமைகள்: அணு கதிர்வீச்சு ஆபத்து: RTG-வில் Plutonium-238 அல்லது Strontium-90 போன்ற அதி விஷமமான கதிர்வீச்சு பொருட்கள் உள்ளன. கசிவாக இருந்தால் சுற்றுச்சூழல் மற்றும் மனித வாழ்வுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அணு கழிவுகள் (radioactive leakage) கூட சில இடங்களில் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
பன்றி போல் கத்தும் முயல்! தாவரத்தைத் தொட்டால் மரணம்! ருவேன்ஜோரியின் மர்மங்கள்!
nuclear-powered lighthouses)

சில RTG கலங்கரை விளக்குகள் முறையாக பாதுகாக்கப்பட வில்லை. வனவாசிகள் அல்லது திருடர்கள் அதன் உதிரிகள் (radioactive parts) எடுத்து சென்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் வியாதி, மரணம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது.

பழைய RTG-களை அகற்றாமல் விட்டால், அணுக்கழிவுகள் நிலத்திலும் நீரிலும் கலந்து நச்சுத்தன்மை ஏற்படும். இது வனவிலங்குகள், கடல் உயிரினங்கள் மற்றும் மனிதர்களின் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக்கூடும்.

இத்தகைய RTG அமைப்புகளை உருவாக்கவும், பராமரிக்கவும் அணு நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com