ஒரு கிரிக்கெட் மேட்சின் ஒளிபரப்பிற்குப் பின்னால் இயங்கும் கேமராக்களின் மாயாஜாலம்!

Cricket ground cameras
Cricket ground cameras

ந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, கோடானு கோடி கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் கலாசார நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இது இந்திய மக்களின் நாட்டுப்பற்று மற்றும் அவர்களுக்கு கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது. இப்படி இந்திய மக்களின் உயிர்நாடியாக இருக்கும் விளையாட்டை திரைகளில் உயிர்ப்புடன் காட்டுவதற்கு பலதரப்பட்ட அதிவேக கேமராக்களின் நுணுக்கமான இயக்கம் அவசியம். இந்த பதிவில் இந்திய கிரிக்கெட் மைதானங்களில் எதுபோன்ற கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன? அவை எப்படி கட்டுப்படுத்தப்படுகின்றன? என்பதனைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம். 

கிரிக்கெட் மைதானத்தில் பயன்படுத்தப்படும் கேமராக்கள்:

ஒரு கிரிக்கெட் போட்டியை முழுமையாக கேப்சர் செய்ய எத்தனை கேமராக்கள் தேவை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நவீன காலத்து கேமரா கவரேஜ் முறையில் 45-50 அதிவேக கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, ஆட்டத்தின் ஒவ்வொரு கோணமும் முழுமையாக படம் பிடிக்கப்படுகிறது.

1. High Angle Birds Eye Cameras: 

பார்வையாளர்களுக்கு காட்டப்படக்கூடிய மிக முக்கிய கேமராக்களில் ஸ்டேடியத்திற்கு மேலே உயரமான நிலையில் வைக்கப்பட்டிருக்கும் High Angle Birds Eye கேமராக்களும் ஒன்று. இவை ஒட்டுமொத்த மைதானத்தையும் முழுமையாக படம் பிடிக்கின்றன. இந்த கேமராக்கள் பெரும்பாலும் உயர்ந்த கோபுரங்களில் அமைக்கப்பட்டு கழுகுப் பார்வையில் அனைத்தையும் படம் பிடிக்கின்றன.  இது ஒட்டுமொத்த மைதானத்தின் அளவு மற்றும் விளையாட்டு வீரர்களின் நிலையை தெரிந்துகொள்ள உதவுகிறது. 

2.        Boundary and Pitch Side Angle Cameras: 

 பேட்ஸ்மேன் பந்தை அடித்ததும் அது எல்லையை நோக்கி ஓடும்போது அல்லது ஒரு பந்துவீச்சாளர் பந்தை வேகமாக ஓடி வந்து போடும்போது 

Boundary and Pitch Side Angle கேமராக்கள் அதன் விறுவிறுப்பான காட்சிகளை படம் பிடித்துக் காட்டுகின்றன. இதனால் ஆட்டத்தின் எந்த ஒரு விவரமும் தவறவிடப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இவை போட்டியின் தீவிரத்தன்மையை துல்லியமாக படம் பிடிக்க உதவுகிறது. 

3.        Spider Cam: 

கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பில், மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கக்கூடியவற்றில் இந்த ஸ்பைடர் கேமும் ஒன்று. இந்த கேமராக்கள் மைதானத்திற்கு நடுவே அங்கும் இங்குமாக செல்லும்வகையில், கம்பிகளால் உயரத்தில் தொங்கவிடப்பட்டு, தனித்துவமான கோணங்களிலிருந்து விளையாட்டின் தீவிரத்தை படம் பிடித்து, டைனமிக் காட்சிகளை வழங்குகின்றன. இது பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் கேமராவாகும். 

Cricket ground cameras
Cricket ground cameras

4.        Player Centric Cameras: 

சிகர்களுக்கு அவர்களது கிரிக்கெட் ஹீரோக்களை மிக அருகாமையில் Zoom செய்துகாட்ட, சில கேமராக்கள் அவ்வீரர்களின் மிக அருகிலேயே பொருத்தப்பட்டிருக்கும். இந்த கேமராக்கள் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், அம்பயர், ஸ்டம்ப்ஸ்  அல்லது பீல்டர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளையும் உணர்ச்சிகளையும் வழங்குகின்றன. இது பார்வையாளர்கள், விளையாட்டு வீரர்களின் உணர்ச்சிகள் மற்றும் அவர்களின் எதிர்வினைகளைத் தெரியப்படுத்தும் வகையில், விளையாட்டின் சுவாரஸ்யத்தைக் கூட்ட உதவுகின்றன.

5.        Ultra slow motion & Reply cameras:

கிரிக்கெட் விளையாட்டின் உணர்ச்சியும் சுவாரஸ்யமும் அதன் நிகழ்நேர செயல்பாட்டில் மட்டுமல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து செல்லும் சில சிக்கலான விவரங்களிலும் உள்ளது. அல்ட்ரா ஸ்லோ மோஷன் கேமராக்கள் ஒரு பந்துவீச்சாளரின் சீம் நிலை, கிரிக்கெட் பேட்டில் இருந்து பந்து விலகிச் செல்லுதல் அல்லது ஒரு பீல்டரின் நுட்பமான அசைவுகளை நுணுக்கமாக படம் பிடிக்கின்றன. மேலும், ரிப்ளை கேமராக்கள் பார்வையாளர்களை ஒரு குறிப்பிட்ட தருணத்தை மீண்டும் மீண்டும் பகுப்பாய்வு செய்து ரசிக்க வைத்து, விளையாட்டின் புரிதலை மேலும் அதிகரிக்கிறது. 

கிரிக்கெட் மைதான கேமராக்கள் எப்படி கட்டுப்படுத்தப்படுகின்றன?

ற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு கிரிக்கெட் போட்டியை படம் பிடிப்பது கொஞ்சம் கடினமானது. ஏனென்றால் அது 360° கோணத்திலும் படம் பிடிக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஃபுட்பால் விளையாட்டை எடுத்துக்கொண்டால் அது ஒரு புறத்தில் இருந்து மட்டுமே படம் பிடிக்கப்படும். ஆனால், கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு ஓவருக்கும் பக்கங்கள் மாற்றி விளையாடப்படும். எனவே அதை ஒரு புறத்தில் இருந்து மட்டுமே படம் பிடிக்க முடியாது. இருபுறங்களிலுமிருந்து கேமராக்கள் இயங்க வேண்டும். எனவேதான் இதற்கு அதிகப்படியான கேமராக்களின் தேவை உள்ளது. 

மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள எல்லா கேமராக்களும் BCR (Broadcast Control Room) என்கிற இடத்தில் இணைக்கப்பட்டிருக்கும். அங்குதான் கிரிக்கெட்டை படம் பிடிக்கும் கேமராக்களின் ஒட்டுமொத்த மாயாஜாலமும் நிகழ்த்தப்படுகிறது. அந்த இடத்தில்தான் கேமரா டைரக்டர் அமர்ந்துகொண்டு ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியையும் கவனித்துக் கொண்டிருப்பார். அவருக்கு எதிரே மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களின் திரையும் இருக்கும். 

Cricket ground cameras
Cricket ground cameras

அதில் பார்த்தவாரே எந்தெந்த நேரத்தில் எதுபோன்ற விஷயங்களை ஒளிபரப்பில் காட்ட வேண்டும் என்கிற அறிவிப்புகள், கேமராவை கண்ட்ரோல் செய்பவர்களுக்கும், BCR-ல் அமர்ந்திருப்பவர்களுக்கும்  கேமரா டைரக்டரால் கொடுக்கப்படும். இவை அனைத்தும் ஒன்றாக இணைந்துதான் டிவி ஸ்கிரீனில் கிரிக்கெட்டை நாம் மொத்தமாக கண்டு ரசிக்கிறோம். 

இதையும் படியுங்கள்:
மதிய உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதில் இத்தனை நன்மைகளா?
Cricket ground cameras

ஒரு போட்டியின் ஒளிபரப்பை மிக சுவாரஸ்யமாக்குவதில் கேமரா டைரக்டரின் பங்கு மகத்தானது. நேரில் சென்று ஆட்டத்தைப் பார்க்கும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறும் விஷயங்கள் பலவற்றை நாம் ‘மிஸ்’ பண்ணி விடுவோம். இதையே படம் பிடித்து மீண்டும் மீண்டும் பல கோணங்களிலிருந்து ஒளிபரப்பி காட்டும்போது அது மிக ‘த்ரில்லிங்’கான அனுபவமாகிறது.   இதை சாதிப்பவர் ககமரா டைரக்டரும் அவரது குழுவும்தான் என்றால் மிகையாகாது.

எனவே, அடுத்தமுறை ஒரு கிரிக்கெட் போட்டியை நீங்கள் பரபரப்பாக டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நாம் அனைவரும் விரும்பும் இந்த விளையாட்டின் மகத்துவத்தையும் நுணுக்கங்களையும் நாம் உணரும் வகையில் காட்சிகளை சிறப்பாக வழங்கும் கேமராக்கள் மற்றும் அதன் பின்னால் செயல்படும் குழுக்களின் மிகச்சிறந்த செயல்பாடுகளை பாராட்ட சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com