ஈக்களின் மூளை சார்ந்த ரகசியம் வெளியானது… அதிர்ந்து போன விஞ்ஞானிகள்! 

The secret of the brain of flies
The secret of the brain of flies
Published on

உலகின் மிகச் சிறிய உயிரினங்களில் ஒன்றான ஈ தனது சிறிய மூளையைக் கொண்டு எவ்வளவு சிக்கலான செயல்களை செய்கிறது என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. நடப்பது, வட்டமிடுவது, இணையை ஈர்க்கும் பாடல்களைப் பாடுவது என பல செயல்களை அது எவ்வாறு செய்கிறது என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஈயின் மூளையின் வடிவம் அதில் உள்ள செல்கள் மற்றும் அவற்றிற்கிடையேயான இணைப்புகள் குறித்து நடத்தப்பட்ட முழுமையான ஆய்வு ஒன்று முதன் முறையாக வெளியாகியுள்ளது. 

ஊசி முனையை விட சிறிய ஈயின் மூளையில், 1,30,000 செல்கள் மற்றும் ஐந்து கோடி இணைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிறு உயிரினத்தின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த இந்த ஆய்வு மனித மூளையின் செயல்பாடு குறித்த நமது புரிதலை மேம்படுத்தும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 

மூளை எவ்வாறு செயல்படுகிறது? 

மனித மூளையின் நரம்பணுக்கள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன என்பது குறித்த தெளிவான புரிதல் இதுவரை நமக்கு இல்லை. ஆனால், ஈயின் மூளையின் விரிவான ஆய்வு இந்தக் கேள்விக்கான பதிலை நோக்கி நம்மை ஒரு படி நெருங்க வைத்துள்ளது. ஈ மூளை எவ்வாறு தகவல்களை செயலாக்கி பதிலளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் மனித மூளையின் செயல்பாட்டைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள முடியும். 

ஈயின் மூளை மிகவும் சிக்கலானது. அதன் வடிவம் மற்றும் அமைப்பு, இவ்வளவு சிறிய உறுப்பு எவ்வாறு பல சக்தி வாய்ந்த கணக்கிட்டுப் பணிகளைச் செய்ய முடியும் என்பதை விளக்குகிறது. ஈக்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் ஒரு கசகசா அளவு கொண்ட மூளை கட்டுப்படுத்துவது அறிவியலின் திறனுக்கு அப்பாற்பட்டது. 

ஆய்வு: இந்த ஆய்வில் ஈயின் மூளையை மிகச்சிறிய துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு தூண்டின் படமும் எடுக்கப்பட்டது. பின்னர், இந்த படங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு ஈயின் மூளையின் முழுமையான 3D மாதிரி உருவாக்கப்பட்டது. இந்த மாதிரியைப் பயன்படுத்தி ஈயின் மூளையில் உள்ள ஒவ்வொரு மரபணுவும் எவ்வாறு மற்ற நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது துல்லியமாகக் கணக்கிடப்பட்டது. 

இதையும் படியுங்கள்:
பாம்பு கடித்ததும் சிகிச்சை எடுக்காமல் அதனை ஆராய்ச்சி செய்து இறந்த ஆராய்ச்சியாளர்!
The secret of the brain of flies

ஆராய்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்புகள்: 

  • ஈயின் மூளை மிகவும் சிக்கலான வளையமைப்பைக் கொண்டுள்ளது.‌ 

  • ஈயின் மூளையில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு உள்ளது. 

  • ஈயின் மூளை தகவல்களை மிக வேகமாக செயலாக்கி பதில் அளிக்கிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் மனித மூளையின் செயல்பாட்டைந் பற்றிய புரிதலை அதிகரித்துள்ளது. 

ஈயின் மூளையின் விரிவான ஆய்வு மனித மூளையை பற்றிய ஆராய்ச்சிக்கு புதிய வழிகளைத் திறந்துள்ளது. எதிர்காலத்தில் மனித மூளையில் ஏற்படும் நோய்கள் குறிப்பாக அல்சைமர் நோய் போன்ற நரம்பியல் நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு, இந்த ஆய்வு பெரிதும் உதவும். மேலும், கணினி அறிவியல் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் இந்த ஆய்வு உதவும் என நம்பப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com