
உலக நாடுகளில், பல்வேறு நிறுவனங்கள், மாநில மற்றும் மத்திய அரசு, அதோடு பொது கம்பெனிகள், பத்திாிகைகள் தனது ஸ்லோகன்களை உருவாக்கி அதனை தலைப்பில் அல்லது முகப்பில் வெளியிடுவது வாடிக்கை.
அதன் அடிப்படையில் சிலர் தத்துவங்களை குறிப்பிட்டிருப்பாா்கள். சிலர் எமோஜியை பயன்படுத்துவாா்கள். ஒவ்வொன்றும் ஒரு விதமாக அமைந்திருக்கும்.
அதன் அடிப்படையில் கூகுள் என்ற எழுத்தானது (GOOGLE ) நீலம், சிகப்பு, பச்சை, மஞ்சள், போன்ற நிறங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. Google logo சில நேரங்களில் அதன் எழுத்துக்களை வெகு நோ்த்தியாக ஏதாவது ஒரு மெசேஜ் சொல்லும் வகையில் அமைந்திருக்கும். சில நேரங்களில் சங்கிலி பின்னல் போல, ஆறு எழுத்துக்களை ஸ்டைலாகவும், வெளியிடும். அவை பல வித நோ்மறை ஆற்றலைக் கொண்டதாகவே அமைந்திருக்கும்.
தற்சமயம் ஆறு எழுத்துக்களையும் நீள வாட்டத்தில் அமைத்துள்ளது. பாா்க்கவே அழகாக உள்ளது. அந்த ஆறு ஆங்கில எழுத்துக்களை நீலம், சிகப்பு, மஞ்சள், நீலம், பச்சை, சிகப்பு என கலர்கொண்டு வடிவமைத்துள்ளது.
ஒவ்வொரு கலரும் ஒவ்வொரு நோ்மறை ஆற்றலைக் கொண்டிருக்கும். அதன்படி,
நீலம்: நம்பிக்கை, விசுவாசம், ஞானம், நோ்மை, புத்திசாலித்தனம், சுதந்திர உள்ளுணர்வுகளை குறிக்கும். மேலும் நீல நிறமானது வானம், மற்றும் கடலைக் குறிக்கிறது. வானத்திற்கும் கடலுக்கும் எல்லையே இல்லை என்பதை சிம்பாலிக்காக உணர்த்தியுள்ளது.
சிகப்பு: தைாியம், காதல், எச்சரிக்கை, உற்சாகம், இவற்றை விளக்கும் விதத்தோடு, ரத்தம் சிகப்புநிறமானது. இரத்த ஓட்டத்தை சீா்படுத்தி மனச்சோா்வை போக்குகிறது. உளவியல் ரீதியாக சிகப்பு நிறமானது ஆற்றலையும், நோ்மறை ஆற்றலையும் ஏற்படுத்துகிறது.
மஞ்சள்: மஞ்சள் நிறமானது மகிழ்ச்சி, நம்பிக்கை, ஆற்றல் மற்றும் செல்வத்துடன் தொடா்புடையது. கலாச்சார ரீதியாக மஞ்சள் கலரானது மங்களகரமானதாகும். மந்தமான சூழலைக்கூட பிரகாசமாக்கும். மேலும், ஆத்மாா்த்தமான நிலையை உண்டாக்கும். கூடவே புத்துணர்ச்சியையும் தரவல்லது.
பச்சை: இயற்கை, வளா்ச்சி, புதுமை, ஆரோக்கியம் ,அதிா்ஷ்டம், அமைதியை குறிக்கிறது. ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான அறிகுறியை பச்சை நிறம் உணர்த்துகிறது.
ஆக கூகுள் நிறுவனமானது மனித வாழ்வோடும், இயற்கையோடும் ஒத்துப்போவது போல பலவித நிறங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நோ்மறை விஷயங்களைக் கொண்டேஅதன் குறியீடு அமைந்துள்ளதே நமக்கு பெருமையான விஷயமாகும்.