
இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் வைத்து கேமரா பயன்படுத்தி எடுப்பது போன்று தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். சமூக ஊடகங்களுக்காகவோ, நினைவுகளைப் பாதுகாக்கவோ அல்லது ஒரு பொழுதுபோக்காகவோ ஸ்மார்ட்போன் மூலம் நீங்களும் ஒரு PRO போலப் புகைப்படம் எடுக்க முடியும் (Mobile Photography Tips). விலையுயர்ந்த கேமராக்கள் தேவையில்லை. இந்த எளிய 10 டிப்ஸைப் பின்பற்றி உங்கள் புகைப்படங்களின் தரத்தை உயர்த்துவது எப்படி என்று காணலாம்.
1. லென்ஸை முதலில் சுத்தம் செய்யுங்கள்:
இது மிகவும் அடிப்படையான விஷயம், ஆனால் அடிக்கடி மறந்துவிடுகிறோம். உங்கள் லென்ஸில் இருக்கும் ஒரு சிறு கைரேகையும் புகைப்படத்தின் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். நிறங்களைக் மங்கச் செய்யும். படமெடுக்கும் முன் ஒரு மென்மையான துணியால் (microfiber cloth) லென்ஸைத் துடைக்க மறக்காதீர்கள்.
2. Gridlines-சைப் பயன்படுத்துங்கள்:
உங்கள் கேமரா செட்டிங்கில் உள்ள Gridlines அம்சத்தை ஆன் செய்யுங்கள். இது 'மூன்றில் ஒரு பங்கு விதி' (Rule of Thirds) என்ற அடிப்படை அமைப்பைப் பயன்படுத்த உதவும். முக்கியப் பொருளைப் படத்தின் மையத்தில் இருந்து சற்று விலக்கி வைப்பது பார்ப்பதற்கு அழகான சமநிலையை கொடுக்கும்.
3. ஃபோகஸ் மற்றும் வெளிச்சத்தை (Exposure) நீங்களே சரிசெய்யுங்கள்:
நீங்கள் எதைப் படமெடுக்கிறீர்களோ, அதன் மீது தட்டினால் (Tap)அது ஃபோகஸ் ஆகும். அத்துடன், விரலை மேலும் கீழும் ஸ்லைடு செய்வதன் மூலம் வெளிச்சத்தையும் (exposure) மாற்றலாம். இது உங்கள் படம் (photo) தெளிவாகவும், சரியான வெளிச்சத்திலும் இருப்பதை உறுதி செய்யும்.
4. இயற்கை ஒளியைப் பயன்படுத்துங்கள்:
முடிந்தவரை ஃபிளாஷைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிகாலை மற்றும் மாலை நேரம் (Golden Hours) உங்கள் புகைப்படங்களுக்கு ஒரு சூடான, மென்மையான ஒளியைக் கொடுக்கும். ஜன்னல் ஓரம் அல்லது வெளியில் படமெடுப்பது சிறந்த அழகான புகைப்படங்களைத் தரும்.
5. டிஜிட்டல் ஜூமைத் தவிருங்கள்:
உங்கள் கேமராவில் ஜூம் செய்யும்போது படத்தின் தெளிவு குறையும். அதற்குப் பதிலாக, நீங்களே பொருளுக்கு அருகில் செல்லுங்கள் அல்லது படமெடுத்த பிறகு அதை கிராப் (Crop) செய்யுங்கள்.
6. கைகளை உறுதிப்படுத்துங்கள்:
கைகள் அசைந்தால் படம் மங்கலாகிவிடும். இரு கைகளையும் பயன்படுத்துங்கள்; முழங்கைகளை ஒரு மேற்பரப்பில் தாங்கிக் கொள்ளுங்கள் அல்லது ஒரு சிறிய ட்ரைபாடைப் பயன்படுத்துங்கள். இது குறைந்த வெளிச்சத்தில் படம் எடுக்க மிகவும் அவசியம்.
7. வித்தியாசமான கோணங்களைப் பரிசோதனை செய்யுங்கள்:
சாதாரணமான கண் மட்டத்தில் மட்டுமே படம் (photo) எடுக்காமல், குனிந்து பாருங்கள், மேலே இருந்து எடுங்கள் அல்லது கேமராவைச் சற்றே சாய்த்துப் பாருங்கள். வித்தியாசமான கோணங்கள் சாதாரண விஷயங்களையும் தனித்துவமாகக் காட்டும்.
8. எடிட்டிங் ஆப்களைப் பயன்படுத்துங்கள்:
Snapseed, Lightroom Mobile, VSCO போன்ற எடிட்டிங் ஆப்களைப் பயன்படுத்தி உங்கள் படங்களை மேம்படுத்தலாம். வெளிச்சம், கான்ட்ராஸ்ட், நிறம் மற்றும் தெளிவு ஆகியவற்றைச் சரிசெய்வது உங்கள் புகைப்படத்துக்கு உயிர் கொடுக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக எடிட் செய்ய வேண்டாம்.
9. Portrait & Night Mode பயன்படுத்தவும்:
உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் Portrait Mode பின்னால் இருக்கும் பின்னணியைக் மங்கச் செய்யும்போது (Bokeh effect) அழகிய படங்களை எடுக்கும். அதேபோல், Night Mode குறைந்த வெளிச்சத்தில் கூடத் தெளிவான படங்களை எடுக்க உதவும்.
10. பயிற்சி மற்றும் கற்றல்:
நீங்கள் எவ்வளவு அதிகமாகப் படமெடுக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக மாறுவீர்கள். நீங்கள் எடுத்த படங்களை விமர்சன ரீதியாகப் பார்த்து, எது சரியாக வந்தது என்று கற்றுக்கொள்ளுங்கள். இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் மொபைல் புகைப்படக் கலைஞர்களைப் பின்தொடர்ந்து உத்வேகம் பெறுங்கள்.
நீங்கள் எடுக்கும் படங்கள் துல்லியமாகவும், பார்க்க அழகாகவும் இருக்க, உங்களுக்கு ஒரு தொழில்முறை கேமரா தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் இந்த எளிய நுட்பங்கள் போதும்.