உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இவைதான்!

Mobile hacked
Mobile hacked

இப்போதெல்லாம் இணையத்தைத் திறந்தாலே அந்த மோசடி இந்த மோசடி என மோசடி செய்திகள்தான் தென்படுகிறது. அதிலும் குறிப்பாக போனை ஹேக் செய்து பணத்தை திருடி விட்டார்கள் என்பது போன்ற செய்திகளை நாம் அதிகம் கேட்டு வருகிறோம். அந்த நேரங்களில் ஒருவேளை நம்முடைய போனும் ஹேக் செய்யப்படுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும். 

சமீபத்தில்கூட ஆப்பிள் ஐபோனை ஹேக் செய்ய அரசு ஆதரவு மோசடிக்காரர்கள் முயற்சிப்பதாக பரவிய தகவல் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உங்கள் ஃபோன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள சில வழிமுறைகள் உள்ளது. இந்த அறிகுறிகள் உங்கள் சாதனத்தில் இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.

பேட்டரி நிலையை கவனியுங்கள். உங்கள் சாதனம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் எளிய வழிகளில் இதுவும் ஒன்று. உங்கள் போனின் பேட்டரி வழக்கத்தை விட வேகமாக தீர்ந்துவிட்டால் ஜாக்கிரதையாக இருங்கள். அது உங்களுக்கே தெரியாமல் பேக்ரவுண்டில் மால்வேர் ஓடுவதன் விளைவாக இருக்கலாம். 

சாதாரண நேரத்திலும் போன் அதிக சூடானால் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக நாம் அதிகமாக கேமிங் மற்றும் திரைப்படம் பார்க்கும்போது போன்கள் சூடாகும். இதைத் தவிர சாதாரண நேரத்தில் கூட வெப்பமடைந்தால் ஏதோ தவறு என அர்த்தம்.

இன்றைய இணைய உலகில் அனைவருக்குமே சமூக வலைதளக் கணக்குகள் உள்ளது. அதில் நீங்கள் பதிவிட்ட பதிவுகளைத் தவிர வேறு ஏதாவது உங்களுக்குத் தெரியாத பதிவுகள் உங்கள் பெயரில் போடப்பட்டிருந்தால், அது உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

உங்கள் சாதனத்தில் மின்னஞ்சல் அனுப்பவோ பெறவோ முடியவில்லை என்றால், ஹேக்கர்கள் உங்கள் சாதனத்தை கட்டுப்படுத்துகிறார்கள் என அர்த்தம்.

திடீரென உங்கள் போன் வித்தியாசமாக வேலை செய்தால், அடிக்கடி செயலிகள் தானாக செயலிழப்பது மற்றும் செயல்படுவதில் தோல்வி அடைவது போன்றவை நடந்தால் அது மால்வேரின் விளைவாக இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஆப்பிள் சாதனங்களில் சைபர் தாக்குதல் நடத்த முடியுமா? 
Mobile hacked

நீங்கள் அடிக்கடி உங்கள் போனில் வைரஸ் எச்சரிக்கை மற்றும் மற்ற அச்சுறுத்தல் புஷ் மெசேஜ்கள் பெற்றால், உங்கள் போன் வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அந்த சமயத்தில் திரையில் தோன்றும் பாப் அப்களைத் தொட வேண்டாம். அப்போது கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள்.

உங்கள் சாதனத்தின் டேட்டா பயன்பாடு திடீரென அதிகரித்தால், தீங்கிழைக்கும் செயலிகள் அல்லது சாஃப்ட்வேர்கள் பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கிறது என அர்த்தம். 

இதுபோன்று மேலும் பல அறிகுறிகள் மூலமாக உங்கள் சாதனம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என நீங்கள் அறிய முடியும். ஒருவேளை உங்கள் சாதனம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக உங்கள் சாதனத்தை ரீசெட் செய்வது நல்லது. மேலும் நீங்கள் பயன்படுத்தும் கணக்குகளின் பாஸ்வேர்டையும் உடனடியாக மாற்றிவிடுங்கள். தேவையில்லாத செயல்களை பயன்படுத்துவதை தவிருங்கள். மேலும் நம்பிக்கையில்லாத வலைதளங்களுக்கு உள்ளே சென்று எதையும் கிளிக் செய்து பார்க்க வேண்டாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com