எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! 

buying an electric bike
buying an electric bike
Published on

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அவற்றின் குறைந்த பராமரிப்பு செலவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர்புற போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு சிறந்த தீர்வு என்பதால் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இருப்பினும், பல்வேறு வகையான மாடல்கள், பிராண்டுகள் கிடைப்பதால் சரியான எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை தேர்ந்தெடுப்பது சவாலாக இருக்கலாம். இந்தப் பதிவில் ஒரு மின்சார இருசக்கர வாகனம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம். 

  • மின்சார வாகனம் வாங்க முடிவெடுப்பதற்கு முன் உங்களது தேவையை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். அது உங்களது தேவைக்கு சரிப்பட்டு வருமா என்பதைத் தெரிந்துகொண்டு மின்சார வாகனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 

  • ஒருமுறை சார்ஜ் போட்டால் எவ்வளவு தூரம் அந்த வாகனம் பயணிக்கும் என்ற வரம்பை பார்க்க வேண்டும். உங்கள் தினசரி பயணத் தேவைகளை பொறுத்து இந்த வரம்பைத் தேர்ந்தெடுக்கவும். இத்துடன் அதிகபட்ச வேகம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளவும். 

  • இரண்டாவது நீங்கள் கவனிக்க வேண்டியது, வாகனத்தின் பேட்டரி. இப்போது பெரும்பாலான எலக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் ஆயுள், சார்ஜிங் நேரம், விலை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவும். ஒரு பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எடுக்கும் நேரம் எவ்வளவு?, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறதா? என்றும் சரிப்பாருங்கள். 

  • எலக்ட்ரிக் வாகனங்களில் பிரஷ் மோட்டார், பிரஷ்லெஸ் மோட்டார் ஆகியவை பொதுவாக பயன்படுத்தப்படும் மோட்டார் வகைகள். பிரஷ்லெஸ் மோட்டார்கள் அதிக செயல் திறன் மற்றும் நீண்ட ஆயுள் கொண்டவை. அதேபோல மோட்டாரின் பவர் என்ன என்பதையும் சரிபார்க்கவும். 

  • எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் விலை, மாடல், பிராண்ட், பேட்டரி திறன், புதிய அம்சங்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். எனவே, உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வாகனங்களை தேர்ந்தெடுக்கவும். மத்திய மாநில அரசுகள் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. இந்த சலுகைகளைப் பற்றி விசாரித்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

  • புதிய அம்சங்கள் என்று பார்க்கும் போது பிரேக் சிஸ்டம், டிஜிட்டல் திரை, ஜிபிஎஸ், மொபைல் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் பல மாடல்களில் கிடைக்கின்றன. சைடு ஸ்டாண்ட் அலாரம், ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் உள்ளதா? என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள். 

  • வாகனத்தின் எடை, அதை கையாளும் தன்மை மற்றும் ஆற்றலை பாதிக்கும். இத்துடன் உங்களது பார்க்கிங் இடம் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அந்த அளவுக்கு ஏற்ற வாகனத்தைத் தேர்ந்தெடுக்கவும். 

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிடும் நபரா நீங்கள்? போச்சு!
buying an electric bike
  • நீங்கள் வாங்கும் வாகனத்தின் சேவை மையங்கள் குறித்து நன்கு விசாரிக்கவும். வாகனத்துக்கு அருகில் சேவை மையங்கள் இருப்பது முக்கியம். மேலும், வாகனம் ஏதேனும் பழுதானால் உதிரி பாகங்கள் எளிதாகக் கிடைக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

  • வாகனத்தை வாங்குவதற்கு முன்பாக நிச்சயம் ஒரு முறை டெஸ்ட் ரைட் எடுத்துப் பாருங்கள். வாகனம் எப்படி செல்கிறது, அதன் செயல்திறன் ஆகியவற்றை நீங்களே உணர்ந்து சரி பார்க்கலாம். 

  • இறுதியாக நீங்கள் வாங்க விரும்பும் வாகனத்தின் வாடிக்கையாளர் மதிப்புறையை இணையத்தில் தேடிப் பார்த்து, வாகனம் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். 

எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு முன் மேற்கூறப்பட்ட அனைத்து காரணிகளையும் கவனத்தில் கொண்டு, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சரியான வாகனத்தை தேர்ந்தெடுங்கள். எலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நீண்ட காலத்தில் பணத்தை மிச்சப்படுத்துவதற்கும் உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com