செவ்வாய் கிரகத்தில் மூன்று புதிய பள்ளங்கள்… இந்திய நகரங்களின் பெயரை சூட்டிய விஞ்ஞானிகள்!

Craters on Mars
Craters on Mars
Published on

செவ்வாய் கிரகத்தில் புதிதாக மூன்று பள்ளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தப் பள்ளங்களுக்கு உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள நகரங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2021ம் ஆண்டே அகமதாபாத்தைச் சேர்ந்த பி.ஆர்.எல்-ல் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களின் குழு இந்த பள்ளங்களை கண்டுபிடித்தது. இந்த மூன்று பள்ளங்களும் ரெட் பிளானட்டின் தர்சிஸ் எரிமலைப் பகுதியில் அமைந்துள்ளன. தர்சிஸ் என்பது செவ்வாய் கிரகத்தின் மேற்கு அரைக்கோளத்தில் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பரந்த எரிமலை பீடபூமி ஆகும். இப்பகுதி சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய எரிமலைகளின் தாயகமாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதனையடுத்து இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அந்தப் பள்ளங்களுக்கு பெயர்கள் வைத்து அங்கீகரிக்கப்பட்டன. பிஆர்எல்-ன் பரிந்துரையின் பேரில், கிரக அமைப்பு பெயரிடலுக்கான சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU)  ஜூன் 5-ம் தேதி அந்தப் பள்ளங்களுக்கு "லால்" பள்ளம், "முர்சன்" பள்ளம் மற்றும் "ஹில்சா" பள்ளம் என்று பெயரிட ஒப்புதல் அளித்தது.

1972 முதல் 1983 வரை பி.ஆர்.எல் நிறுவனத்தை வழிநடத்திய மறைந்த காஸ்மிக் கதிர் இயற்பியலாளர் (Cosmic ray physicist) தேவேந்திர லால் என்பவரின் பெயரை ஒரு பள்ளத்திற்கும் மற்ற இரு பள்ளங்களுக்கும் இந்திய நகரங்களான முர்சன் மற்றும் ஹில்சா ஆகியவற்றின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

லால் பள்ளம்:

-20.98°, 209.34° -ஐ மையமாகக் கொண்ட 65 கிமீ அகலமுள்ள பள்ளமாகும். 

முர்சன் பள்ளம் (Mursan Crater) 

லால் பள்ளத்தின் கிழக்கு விளிம்பில் 10 கிமீ அகலமுள்ள சிறிய பள்ளம், முர்சன் பள்ளம். PRL-ன் தற்போதைய இயக்குனரும் புகழ்பெற்ற கிரக விஞ்ஞானியுமான டாக்டர் அனில் பரத்வாஜ் பிறந்த இடம் என்பதால், அவரை கௌரவப்படுத்தும் விதமாக முர்சன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மயக்கும் வாசம் வீசும் தாழம்பூவின் மருத்துவ குணங்கள்!
Craters on Mars

ஹில்சா பள்ளம்:

மற்றொரு 10 கிமீ அகலமுள்ள பள்ளம் இது. லால் பள்ளத்தின் மேற்கு விளிம்பில் ஒன்றுடன் ஒன்றாக உள்ளது. ஹில்சா இந்தியாவின் பீகாரில் உள்ள ஒரு நகரத்தின் பெயராகும். 

செவ்வாய் கிரகத்தில் இந்த புதிய பள்ளங்களைக் கண்டுபிடித்த PRL விஞ்ஞானி டாக்டர் ராஜீவ் ரஞ்சன் பார்தியின் பிறந்த இடமாகும்.  அவரை கௌரவப்படுத்தும் விதமாக அவர் பிறந்த ஊரின் பெயரான ஹில்சா என்பதை பள்ளத்திற்குப் பெயராக வைக்கப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com