செயற்கை நுண்ணறிவால் வேலை இழப்பு ஏற்படாத மூன்று துறைகள் - பில்கேட்சின் கணிப்பு!

Bill Gates
Bill Gates
Published on

செயற்கை நுண்ணறிவால் வேலை இழப்பு ஏற்படாத மூன்று துறைகள் குறித்த பில்கேட்சின் கணிப்பு.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப் பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வருவது துல்லியம் மற்றும் புதுமை போன்றவற்றை உறுதி செய்தாலும் பல வேலைகளை நிச்சயம் பதம் பார்க்கவே செய்யும். இயந்திரமயமாவதால் தற்போதுள்ள பல வேலைகள் இல்லாமல் போகலாம். அதே நேரத்தில் அனைத்து வேலைகளையும் பாதிக்காது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவால் வேலை இழப்பு ஏற்படாத மூன்று துறைகள் என்று பில்கேட்ஸ் கணித்திருப்பத்தை இப்பதிவில் காண்போம்.

1. கம்ப்யூட்டர் கோடிங்

வேலை இழப்பு ஏற்படாத துறைகளில் முதலில் வருவது கணினி வடிவமைப்புத் துறை என்ற 'கோடிங்'. இந்தத் துறையில் பணியாற்றுவோர்க்கு பாதிப்பு இருக்காது. செயற்கை நுண்ணறிவு தானாகவே கோடிங் செய்தாலும், மனிதர்கள் அளவுக்கு அதனால் சிந்திக்க முடியாது. அதனால், கோடிங் செய்வதில் AI தொழில்நுட்பம் உதவலாம். ஆனால், முழுமையாக அதுவே இந்த துறையை ஆக்கிரமிக்க முடியாது.

2. எரிசக்தி துறை

பெட்ரோலியப் பொருட்கள், பசுமை எரிசக்தி என எதுவாக இருந்தாலும், இந்த துறையில் உள்ள சவால்கள் அனைத்துக்கும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முழுமையான தீர்வு கொடுக்க முடியாது. இந்த துறையிலும், தேவையான உதவிகளை செயற்கை தொழில் நுட்பம் வழங்கலாமே தவிர முற்றிலும் ஆக்கிரமிக்க முடியாது.

3. மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உயிரி தொழில்நுட்பம்

மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட உயிரி தொழில் நுட்பத்திலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்போதும் நிபுணராக முடியாது. தகவல்களின் தொகுப்பே செயற்கை நுண்ணறிவு. ஆனாலும், மருத்துவத் துறையில் இதையும் தாண்டி செயல் பட வேண்டும். அதனால், செயற்கை நுண்ணறிவு என்பது மிகவும் வலுவான ஒரு கருவியாக இருக்கும். ஆனால், மாற்றாக இருக்க முடியாது.

தொழில்நுட்பம் பல வேலைகளுக்கு வேட்டு வைத்தாலும், வேலைகளை தொடர் மாற்றங்களுக்கு உட்படுத்தும் வாய்ப்பும் ஏற்படும். ஆகவே இந்த மூன்று துறையினருக்கு தற்போதைக்கு பாதிப்பு இருக்காது. மற்றவர்கள், இந்த தொழில்நுட் பத்தை ஏற்றுக் கொண்டு, புதுமையை புகுத்தி, எதிர்காலத்துக்கு தயாராக வேண்டும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு போட்டியாளராக வரக்கூடும் என்பதால் அதற்கேற்ப தயாராக வேண்டும் என்றும் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
அனைவரையும் நேசிக்கும் நெஞ்சம் நமக்கு இருக்கவேண்டும்!
Bill Gates

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com