மின்னல் ஆபத்து: நீங்கள் செய்யக்கூடாத 3 முக்கிய தவறுகள்! உயிர் தப்ப உதவும் வழிகாட்டி!

உயிரிழப்புகளையும் பொருள் சேதத்தையும் தவிர்க்க மழைக்காலத்தில் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறியவேண்டிய அவசியமான முன்னெச்சரிக்கைகள்.
மின்னல் பாதுகாப்பு - Thunderstorm Tips
மின்னல் பாதுகாப்பு - Thunderstorm Tips
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 

இயற்கையின் விசித்திரமான மற்றும் பேராற்றல்மிக்க நிகழ்வுகளில் இடி, மின்னல் மிக முக்கியமானவை. மழைக்காலங்களிலும் புயல் நேரங்களிலும் தோன்றும் மின்னல், கண்ணிமைக்கும் நேரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் திறன்கொண்டது. இடி மின்னல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் பல உயிர் இழப்புகளும் பொருள் சேதங்களும் ஏற்படுகின்றன.

எனவே, இடி மற்றும் மின்னல் தாக்கும் தருணங்களில் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளப் பின்பற்ற வேண்டிய அத்தியாவசிய நடைமுறைகளை அறிவது அவசியமாகும்.

இடி மின்னலின்போது (மின்னல் பாதுகாப்பு) செய்ய வேண்டியவை:

உறுதியான கட்டிடத்திற்குள் தஞ்சமடைதல்: இடி சத்தம் கேட்டவுடனேயே திறந்தவெளியில் இருப்பதைத் தவிர்த்து, கான்கிரீட் கூரையமைக்கப்பட்ட உறுதியான கட்டிடத்திற்குள் செல்லவேண்டும். வாகனத்தில் பயணிப்பவராக இருந்தால், கதவுகள் மற்றும் கண்ணாடிகளை முழுமையாக மூடிவிட்டு வாகனத்திற்குள்ளேயே இருப்பது பாதுகாப்பானது. “30-30 விதி”யைப் பின்பற்றி, மின்னல் கண்ட 30 வினாடிகளுக்குள் இடி கேட்டால் உடனே வீட்டிற்குள் செல்லவேண்டும்; கடைசி இடி சத்தம் கேட்டு 30 நிமிடங்கள் கழிந்த பிறகே வெளியே வரவேண்டும்.

மின்சார சாதனங்களின் இணைப்பைத் துண்டித்தல்: மின்னலின்போது வீட்டின் மின் இணைப்புகள் வழியே அதிக மின்னழுத்தம் பாய வாய்ப்புள்ளது. இதனால் தொலைக்காட்சி (TV), கணினி, குளிர்சாதனப் பெட்டி போன்ற மின்சார சாதனங்களை சுவிட்ச் போர்டில் இருந்து கழற்றி (Unplug) வைக்கவேண்டும். ஃபேன் சுவிடச்சையும் போடாமல் இருப்பது நல்லது.

வீட்டின் பாதுகாப்பான மையப்பகுதியில் இருத்தல்: கதவுகள், ஜன்னல்கள், பால்கனி மற்றும் திறந்தவெளிப் பகுதிகளை விட்டுத் தள்ளி, வீட்டின் உட்புற மையப் பகுதியில் இருக்கவேண்டும். மேலும், கான்கிரீட் சுவர்கள் மற்றும் தூண்களில் கம்பிகள் பயன்படுத்தப் பட்டிருக்கும் என்பதால், அவற்றின் மீது சாய்ந்து நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

மின்னல் பாதுகாப்பு - Thunderstorm Tips
மின்னல் பாதுகாப்பு - Thunderstorm Tips

இடி மின்னலின்போது செய்யக் கூடாதவை: மரங்கள் மற்றும் உயரமான பொருட்களின் கீழ் நிற்காமை உயரமான மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் கோபுரங்கள் மின்னலை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே, மழைக்கு ஒதுங்க மரங்களின் அடியில் நிற்பது மிகவும் ஆபத்தானது. திறந்தவெளியில் மாட்டிக் கொண்டால் தரையில் படுக்காமல், கால்களைச் சேர்த்து வைத்துத் தலையைக் குனிந்து முழங்கால்களில் கைகளை வைத்து அமரவேண்டும்.

தண்ணீர்ப் பயன்பாட்டை முழுமையாகத் தவிர்த்தல்: தண்ணீர் மின்சாரத்தை மிக வேகமாகப் பாய்ச்சும் கடத்தியாகும். அதனால், இடி மின்னல் நேரத்தில் குளிப்பது, பாத்திரம் கழுவுவது அல்லது குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவது கூடாது. ஏரி, குளம், ஆறு அல்லது நீச்சல் குளங்களில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும்.

வயர் லேண்ட்லைன் போன்களைப் பயன்படுத்தாமை: சுவருடன் இணைக்கப்பட்ட வயர்டு லேண்ட்லைன் தொலைபேசிகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெளிப்புறக் கம்பிகளில் மின்னல் தாக்கினால் போன் வழியே மின்சாரம் பாயக் கூடும். ஆனால், வயர்லெஸ் முறையில் இயங்கும் செல்போன்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

இதையும் படியுங்கள்:
இதெல்லாம் தெரியாம போச்சே! வாழ்க்கையை எளிதாக்கும் 15 லைஃப் ஹேக்ஸ்!
மின்னல் பாதுகாப்பு - Thunderstorm Tips

இயற்கைச் சீற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்றாலும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் அவற்றின் பாதிப்பில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். இடி மின்னல் காலத்தில் மேற்கண்ட பாதுகாப்பு விதிகளைச் சரியாகப் பின்பற்றுவதுடன், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்.

logo
Kalki Online
kalkionline.com