விமானப் போக்குவரத்தில் சாம்ராஜ்யம் நடத்தும் முதல் 5 நாடுகள்!

விமானப் போக்குவரத்தில் சாம்ராஜ்யம் நடத்தும் முதல் 5 நாடுகளை பற்றியும் அந்த நாடுகளில் உள்ள விமான நிலையங்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
Airplane
Airplane
Published on

உலகில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகள் சில உள்ளன. இந்த நாடுகளில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் வளர்ச்சி பெற்றதுடன் தனி மனித போக்குவரத்திற்காக சிறிய விமானங்களை பயன்படுத்தும் போக்கும் இங்கு மிக அதிகம். இதை நாம் நமது நாட்டுடன் ஒப்பிட முடியாது. இதை ஒப்பிடவும் கூடாது, ஒப்பீட்டளவில் அமெரிக்காவில் சிறிய ரக விமானங்கள் ₹20 லட்ச ரூபாயில் இருந்து ₹50 லட்சத்திற்குள் பல வகைகளில் கிடைக்கிறது.

இது இந்தியர்களுக்கு அடிப்படை சொகுசு கார் வாங்கும் விலை தான். ஆனால், இந்தியாவில் விமானம் வாங்கவும் இயக்கவும் ஏராளமான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிகள் அதிகம் உள்ளன. இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகளில் பெரும்பாலும் தனி நபர் விமானங்கள் வாங்க அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு விதிகள் மற்றும் வரிகள் குறைவு என்பதால் அங்கு நடுத்தர மக்களும் சொந்த விமானத்தை பயன்படுத்த முடிகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் - 16,116 விமான நிலையங்கள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சுமார் 16,116 விமான நிலையங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ஆனால், சர்வதேச விமான நிலையங்கள் 80 மட்டுமே உள்ளது. அமெரிக்கா பரப்பளவில் மிகப் பெரிய நாடாக இருப்பதாலும், பல இடங்களில் பாலைவனங்களில், அடர்ந்த காடுகளில் சாலை போக்குவரத்துகள் இல்லாததாலும் அவர்களுக்கு விமான போக்குவரத்து முக்கியமானதாக உள்ளது.

இங்கு விமான நிலையம் என்பது குட்டி விமானம் இறங்க தேவையான அளவு கொண்ட மைதானம் ஆகும். அங்கு பெரும்பாலும் விமான நிலைய வசதிகளை எதிர்பார்க்க முடியாது. அமெரிக்காவில் வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் குறிப்பிட்ட சில ஊர்களின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு குட்டி பிளைட் வாசலில் நிற்கும் என்பது தான்.

பிரேசில் - 5,297 விமான நிலையங்கள்

வளர்ந்து வரும் நாடான பிரேசிலில் 5,297 விமான நிலையங்கள் இருப்பது மிகவும் ஆச்சர்யமான செய்தியாக தான் இருக்கும். ஏராளமான தொலை தொடர்பு பகுதிகள் பிரேசிலில் இருப்பதால், அங்கு நேரடி சாலைப் போக்குவரத்துகள் கடினமாக இருப்பதாலும் விமான நிலையங்கள் அதிகமாக உள்ளன. வனப்பகுதிகள் மற்றும் மலை உச்சிகளில் தான் பல விமான நிலையங்கள் உள்ளன, பெரும்பாலும் அவை தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானது.

இதையும் படியுங்கள்:
'திக் திக் திக்' அனுபவத்தை ஏற்படுத்தும் 10 விமான நிலையங்கள்!
Airplane

ஆஸ்திரேலியா - 2,257 விமான நிலையங்கள்

சிறிய கண்ட தீவான ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியை தவிர உள்பகுதிகளில் மக்கள் குடியேற்றங்கள் இல்லை. மிகப் பெரிய பரப்பளவில் உள்ள இந்த நாட்டில் பயணங்களை எளிதாக்க அதிகளவில் விமான நிலையங்கள் உள்ளன. ஏராளமான விவசாய பண்ணைகளில் சிறிய விமான நிலையங்கள் தனிநபர் பயன்பாட்டிற்கு உள்ளன. மொத்தமாக இங்கு 2,257 விமான நிலையங்கள் உள்ளன.

மெக்சிகோ - 1,580 விமான நிலையங்கள்

மெக்சிகோவில் பதிவு செய்யப்பட்ட 1,580 விமான நிலையங்கள் இருந்தாலும் அதில் அங்கீகரிக்கப்பட்டது 80 விமான நிலையங்கள் மட்டும் தான். 64 விமான நிலையங்கள் வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன. 37 சர்வதேச விமான நிலையங்களும் உள்ளன. மீதமுள்ளவை தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதையும் படியுங்கள்:
மலைப்பிரதேசங்களை சிரமமில்லாமல் சுற்றிப்பார்க்க உதவும் 6 இந்திய விமான நிலையங்கள்
Airplane

கனடா - 1,459 விமான நிலையங்கள்

மிகப்பெரிய பரப்பளவு கொண்ட கனடாவில் மக்கள் தொகை மிகவும் குறைவு தான். இதனால் பெரும்பாலும் அமெரிக்காவை போன்ற பாதுகாப்பற்ற நெடுந்தொலைவு சாலைகள் உள்ளன. கனடாவில் 1,459 விமான நிலையங்கள் நாட்டை பல வழிகளில் இணைக்கிறது. இதில் 500க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் தனியார் வசம் உள்ளன. கனடாவில் ஏராளமான தனிநபர்களும் சொந்த விமானம் வைத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com