Urban Cruiser Taisor: வெளியானது Toyota-வின் அடுத்த படைப்பு… மைலேஜ் அடிச்சுக்கவே முடியாது! 

Urban Cruiser Taisor
Urban Cruiser Taisor
Published on

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் urban Cruiser Taisor இறுதியாக சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 3ம் தேதி இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

டொயோட்டா நிறுவனம் நீண்ட காலமாகவே Maruti Suzuki Fronx போன்ற அம்சங்கள் கொண்ட காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த முயற்சியின் பலனாக காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தைச் சேர்ந்த வாகனமாக Toyota Urban Cruiser Taisor உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த வடிவத்தைப் பொறுத்தவரை இரண்டு கார்களும் ஒரே மாதிரியாக தான் தோற்றமளிக்கின்றன. எனவே டொயோட்டா நிறுவன கார், மாருதி பிராங்க்ஸின் ரீபேட்ச் செய்யப்பட்ட பதிப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் Taisor-ல் சில மாற்றங்கள் செய்துள்ளனர். முன்பக்கத்தில் LED DRL-கள் கொடுக்கப்பட்டுள்ளன. சக்கரங்களின் அளவு ஒரே மாதிரி இருந்தாலும் அதன் வடிவமைப்பு புதிதாக உள்ளது. மேலும் நிறங்களைப் பொறுத்தவரை Taisor சற்று பளிச்சென்ற இரட்டை நிறங்களில் கிடைக்கிறது. 

பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், ESP சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் போன்ற சில வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனம் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் பொருட்டப்பட்ட இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. ஆனால் CNG எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் அதிக மைலேஜ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி காரில் CNG இன்ஜின் ஒரு கிலோவுக்கு 28.51 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே அளவுக்கு டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைஸரும் மைலேஜ் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். 

இதையும் படியுங்கள்:
Morning Habits: உடனடியாக கைவிட வேண்டிய 5 தவறுகள் - ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டி!
Urban Cruiser Taisor

இப்படி பல அம்சங்கள் பொருந்திய டொயோட்டா அர்பன் குரூஸர் டைஸர் காரின் தொடக்க விலை 7.74 லட்சம் ரூபாயாகும். இதன் டாப் வேரியண்டின் விலை 13.04 லட்ச ரூபாயாக உள்ளது. இது வெறும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. விலை குறைவாகவும் பல அம்சங்களையும் கொண்டிருப்பதால், இந்த கார் சந்தையில் பெரும் தாக்கத்தைக் கொண்டு வரும் என சொல்லப்படுகிறது. அதாவது இனி இந்தக் காரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com