வீட்டில் பயன்படுத்தக் கூடிய கம்பளம் தயாரிக்கும் சிறிய மிஷின் (Mini Carpet Making Machine) என்பது கைவினைப் பாணியில் கம்பளங்கள், பாய்கள், மற்றும் வண்ண வடிவங்களுடன் கூடிய துணி தயாரிக்கப் பயன்படும் ஒரு எளிய இயந்திரம்.
சிறிய கம்பளம் தயாரிக்கும் மிஷின்களின் வகைகள்
1. டஃப்டிங் கன் (Tufting Gun): இது தற்போது மிகவும் பிரபலமான வகை. கையில் பிடித்து இயக்கலாம். இது கம்பளத்தின் அடிப்படை துணியில் நூலை ஊசி வழியாக தள்ளி வடிவம் உருவாக்கும்.
வேலை செய்யும் விதம்: கம்பள வடிவத்தை துணியில் வரைந்து வைக்கவும். டஃப்டிங்களை மின்சாரத்தில் இணைத்து, வரைபடத்தின் வழியே நூலை தள்ளவும். கம்பளத்தின் மேற்பரப்பை வெட்டி சமமாக்கவும். பின்புறத்தில் லேடெக்ஸ் ஒட்டுகோல் பூசி உறைக்கவும். இறுதியாக துண்டை வெட்டி அழகாக முடித்திடவும்.
2. ஹேண்ட் லூம் (Hand Loom Frame): இது முழுக்க கைமுறை அமைப்பு. சிறிய அளவில் பாய்கள், வண்ணப் பாணிகள் நெய்யலாம். மரத்தாலோ அல்லது உலோகத்தாலோ செய்யப்பட்ட நெசவு கட்டமைப்பு கொண்டது.
வேலை செய்யும் விதம்: முதலில் “வார்ப்பு நூல்கள்” (நீளமாக செல்லும் நூல்கள்) லூமின் இரண்டு முனைகளில் கட்டப்படும். இதுவே கம்பளத்தின் அடிப்படை வடிவமைப்பைத் தரும் base frame. பொதுவாக பருத்தி, பஞ்சு அல்லது ஜூட் நூல் பயன்படுத்தப்படும். வேப் (Weft) நூல் கம்பளத்தின் அகலம் நோக்கி செல்லும் நூல். ஒரு ஷட்டில் என்ற சிறிய கருவியில் நூலை வைக்கிறார்கள். கையைப் பயன்படுத்தி ஷட்டிலை இடது-வலது திசைகளில் நகர்த்தி, நூலை வார்ப்பு இடைவெளிகளில் நுழைக்கிறார்கள்.
ஒவ்வொரு நூல் வரியும் செருகப்பட்ட பிறகு, பட்டம் (Beater) என்ற கருவியைப் பயன்படுத்தி அதை அழுத்தி இறுக்கமாக்குகிறார்கள். இதனால் கம்பளம் உறுதியானதாக மாறுகிறது. வடிவமைப்புக்கேற்ப வண்ண நூல்கள் பயன்படுத்தப் படுகின்றன. கைவினைஞர் முன்கூட்டியே வரைந்த வடிவத்தைப் பார்த்து ஒவ்வொரு வரியையும் அமைக்கிறார். இது “கைத் தையல் வடிவமைப்பு” போல கம்பளத்தின் தோற்றத்தை அழகாக்கும். நெய்து முடிந்தபின், கம்பளத்தை லூமிலிருந்து வெட்டி பின்புறத்தில் இருக்கும் நூல்களை வெட்டி சமமாக்கி, சிலர் ஒட்டும் பொருள் (Latex backing) பூசி உறுதியை கூட்டுவார்கள். அதன் பிறகு விளிம்புகளை தைத்து முடிப்பர்.
3. சிறிய டேபிள் லூம் (Table Loom): இது மேசை மேல் வைக்கக் கூடிய நெசவு மிஷின். துல்லியமான வடிவமைப்புகளை(weaving Techniques) உருவாக்கலாம்.
வேலை செய்யும் முறை: வார்ப்பு நூல்கள் லூமின் பின் மற்றும் முன் சிலிண்டர்களில் (warp beam & cloth beam) சுருட்டி வைக்கப்படும். நூல்கள் சரியான இடைவெளியில் செல்ல reed எனப்படும் இரும்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இது கம்பளத்தின் “எலும்புக்கூடு” போல செயல்படுகிறது.
ஒவ்வொரு வார்ப்பு நூலும் ஹெடில் எனப்படும் சிறிய கண்ணி வழியாக செல்கிறது. ஹெடில்கள் Shaft எனப்படும் பிரேம்களில் கட்டப்பட்டிருக்கும். பெடல் (foot pedal) அழுத்தும்போது, சில ஹெடில்கள் மேலே போகும் — சில கீழே போகும். இதனால் “ஷெட்” (shed) எனப்படும் இடைவெளி உருவாகிறது.
இந்த இடைவெளியே வேப் நூலை (weft yarn) நுழைக்க உதவும் பாதை. ஷட்டில் என்பது நூல் சுருட்டப்பட்ட ஒரு சிறிய கருவி. அதை “ஷெட்” வழியாக இடது-வலது திசையில் நகர்த்தி, நூலை வார்ப்பு இடைவெளியில் நுழைக்கிறோம்.
ஒவ்வொரு வரியும் சேர்க்கும் போது ஒரு புதிய நூல் அடுக்கு உருவாகும். ஒவ்வொரு நூல் வரி முடிந்ததும், பட்டம் (Beater) பயன்படுத்தி வேப் நூலை முன்னே தள்ளி இறுக்கமாக அடிக்கிறோம். இதனால் கம்பளம் உறுதியானதாகவும், செம்மையான தட்டையாகவும் இருக்கும்.
நெய்து முடிந்தபின், கம்பளத்தை லூமிலிருந்து வெட்டி எடுக்கிறோம். விளிம்புகளை தைத்து முடித்து, பின்புறத்தில் தேவைப்பட்டால் ஒட்டும் பொருள் (latex) பூசி உறுதி அளிக்கலாம்.