தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் எச்சரிக்கை: மக்களை சுரண்டாதீங்க ப்ளீஸ்! 

TRAI
TRAI
Published on

இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் சேவைகளின் விலை மற்றும் தரம் குறித்த புகார்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டேட்டா பயன்பாடு இல்லாத அல்லது குறைவாக உள்ள பயனர்களுக்கு அதிக விலை கொண்ட திட்டங்கள் திணிக்கப்படுவதாகப் பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிராய் சமீபத்தில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டும் வழங்கும் பிரத்யேக திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நோக்கம், குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் 2ஜி போன் உபயோகிப்பாளர்கள் போன்ற டேட்டா தேவைப்படாத பயனர்களுக்கு மலிவு விலையில் சேவைகளை வழங்குவதாகும். டிராயின் இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்தது.

ஆனால், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ) போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிராயின் உத்தரவை முறையாகப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய குரல் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்கள் அதிக விலையில் இருந்ததால், டிராயின் நோக்கமே கேள்விக்குறியானது. இதனால், டிராய் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
காலை நேர காபி, மக்கள் அனைவரும் ஹேப்பி… புதிய ஆய்வில் வெளிவந்த உண்மை! 
TRAI

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு டிராய் இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிராயின் உத்தரவை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று டிராய் தெரிவித்துள்ளது. அதிக விலையுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி, குறைந்த வருவாய் பயனாளர்களைச் சுரண்டுவதாகப் பல புகார்கள் டிராய்க்கு வந்த வண்ணம் உள்ளன.

இந்த சூழ்நிலையில், டிராய் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு கடுமையான கெடு விதித்துள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்குள், நிறுவனங்கள் தங்கள் குரல் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்களின் விலைகளை மறுபரிசீலனை செய்து, குறைந்த விலையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. டிராயின் இந்த நடவடிக்கையால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனாளர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
சீனாவை அச்சுறுத்தும் சுவாச நோய்: இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
TRAI

டிராயின் இந்த கடுமையான நடவடிக்கை, தொலைத்தொடர்பு சந்தையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குறைந்த வருவாய் பயனாளர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் மலிவு விலையில் தொலைத்தொடர்பு சேவைகளைப் பெற இது வழிவகுக்கும். டிராயின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிராயின் உத்தரவை ஏற்று, நியாயமான விலையில் சேவைகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இந்த நடவடிக்கை மூலம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனாளர்களின் நலனை புறக்கணிக்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com