1 கிமீக்கு 6 லிட்டர் டீசலா? இந்திய ரயில்களின் மைலேஜ் குறித்து பலரும் அறியாத உண்மை இதோ!

train mileage
train mileage
Published on

நாம் புதிதாக வாங்கும் வாகனங்களின் மைலேஜ் பற்றி தெரிந்து கொண்டால் தான் அதனை முழு திருப்தியுடன் வாங்குவோம். இன்று வீட்டுக்கு வீடு இருசக்கர வாகனம் இருக்கிறது. வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும் பட்சத்தில், மைலேஜ் குறையவும் வாய்ப்புள்ளது. மைலேஜ் குறையாமல் இருக்க அடிக்கடி வாகனங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். நம்முடைய சொந்த வாகனங்களின் மைலேஜ் பற்றி சிந்திக்கும் நாம், என்றாவது பொதுத்துறை வாகனங்களான பேருந்து, விமானம் மற்றும் ரயிலின் மைலேஜை (train mileage) பற்றி சிந்தித்து இருக்கிறோமா? அப்படி சிந்திக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இப்போது நடுத்தர மக்களின் தொலைதூரப் பயணத்திற்கு பெரிதும் உதவும் ரயிலின் மைலேஜ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வாகனம் ஒரு லிட்டர் எரிபொருளில் எவ்வளவு தொலைவு பயணிக்கும் என்பதைத் தான் மைலேஜ் என சொல்கிறோம். பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மைலேஜ் வேறுபடும். ரயிலின் மைலேஜ் (train mileage) கூட மற்ற வாகனங்களைப் போலவே சில காரணிகளைப் பொறுத்து அமைகிறது. புறநகர்ப் பகுதிகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொலைதூரப் பயணங்களுக்குத் தான் டீசல் என்ஜின் கொண்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஒரு ரயில் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு இத்தனை கிமீ தான் மைலேஜ் கொடுக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் எக்ஸ்பிரஸ், அதிவிரைவு மற்றும் பயணிகள் போன்ற மூன்று வகையான ரயில்களில் ஒவ்வொன்றும் வேகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு விதமாகத் தான் மைலேஜ் கொடுக்கும். மேலும் இருப்புப் பாதை மற்றும் ரயிலில் இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் மைலேஜ் வேறுபடும். ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பின், என்ஜின் இழுக்கும் சுமை குறைவாக இருக்கும்.

ஒரு டீசல் என்ஜின் கொண்ட ரயிலின் மைலேஜ் ஒரு மணி நேரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 24 முதல் 25 பெட்டிகளைக் கொண்ட ரயில்களின் என்ஜின் 1 கிமீ தொலைவைக் கடக்க 6 லிட்டர் டீசலை எடுத்துக் கொள்கிறது. பயணிகள் ரயில்களை விடவும், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் குறைவான டீசலைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
இந்த ரயில்ல போனா மூணு வேளையும் சாப்பாடு இலவசம் தெரியுமா?
train mileage

பயணிகள் ரயில் என்ஜின் 1 கிமீ தொலைவைக் கடக்க 5 முதல் 6 லிட்டர் டீசலை எடுத்துக் கொள்ளும். பயணிகள் ரயில்கள் பெரும்பாலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தான் இதற்குத் தேவைப்படும் டீசல் அதிகமாக உள்ளது. சுமார் 12 பெட்டிகளை இழுத்துச் செல்லும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் 1 கிமீ தொலைவைக் கடக்க 4.5 லிட்டர் டீசலை எடுத்துக் கொள்ளும். ஆக, சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் ஒரு லிட்டர் டீசலில் தோராயமாக 230 மீட்டர் தொலைவையும், பயணிகள் ரயில் தோராயமாக 180 முதல் 200 மீட்டர் வரையிலான தொலைவையும் கடக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com