வானத்தைத் தொடும் இந்தியச் சாலை: லடாக்கின் 'உம்லிங் லா' படைத்த உலக சாதனை!

highest motorable road
highest motorable road
Published on

னிதன் எப்போதும் இயற்கையை ஆராய்ந்து, அதன் எல்லைகளைத் தாண்ட முயன்றவன். கடல் ஆழம் முதல் ஆகாய உயரம் வரை மனிதனின் முயற்சிகள் தொடர்கின்றன. அந்த முயற்சியின் ஒரு முக்கிய சாதனையாக, உலகிலேயே மிக உயரத்தில் வாகனங்கள் செல்லக்கூடிய சாலை உருவாக்கப்பட்டுள்ளது. பனிமலைகள், கடும் குளிர், ஆக்சிஜன் குறைபாடு போன்ற சவால்களை வென்று உருவான இந்தச் சாலை, மனித புத்திசாலித்தனத்தையும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.

உலகிலேயே மிக உயரமான வாகனச் சாலை (“Highest motorable road in the world”) என்றால், உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக அதிக உயரத்தில் அமைந்தும், சாதாரண வாகனங்கள் (கார்கள், லாரிகள், இராணுவ வாகனங்கள்) செல்லக்கூடிய சாலை என்பதாகும். இந்தச் சாலை வெறும் பயணப் பாதை மட்டுமல்ல; அது மனித உறுதி, பொறியியல் திறன் மற்றும் இயற்கையை எதிர்கொள்ளும் துணிச்சலின் சின்னமாகும்.

உலகிலேயே மிக உயரமான வாகனச் சாலை இந்தியாவின் லடாக் (Ladakh) பகுதியில் அமைந்துள்ளது. இந்தச்சாலை உம்லிங் லா (Umling La Pass) என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் 5,800 மீட்டருக்கும் மேற்பட்ட உயரத்தில் அமைந்துள்ளது. இத்தகைய உயரத்தில் மனிதர்கள் சுவாசிப்பதே கடினமான ஒன்றாகும். ஆனால் அத்தகைய இடத்திலும் சாலை அமைத்தது இந்தியாவின் பெருமைக்குரிய சாதனையாகும்.

தேசிய பாதுகாப்பு: எல்லைப் பகுதிகளில் இராணுவ வீரர்கள் விரைவாகச் செல்ல இந்தச் சாலை பெரிதும் உதவுகிறது. கடும் பனிப்பொழிவு மற்றும் மலைப் பாதைகளால் முன்பு கடினமாக இருந்த பயணம் இப்போது எளிதாகியுள்ளது. உயரமான வாகனச் சாலை அமைக்கப் பட்ட பிறகு, இராணுவ வாகனங்கள் நேரடியாக எல்லைப் பகுதிகளுக்கு செல்ல முடிகிறது. ஆயுதங்கள், உணவுப் பொருட்கள், மருத்துவ உதவிகள் ஆகியவை விரைவாகக் கொண்டு செல்லப்படுகின்றன. அவசர காலங்களில் பாதுகாப்புப் படைகள் உடனடியாகச் செயல்பட இந்தச் சாலை பெரிதும் உதவுகிறது.

போக்குவரத்து வசதி: தொலைதூர மலை கிராமங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல இந்தச் சாலை உதவுகிறது. உலகின் மிக உயரமான வாகனச் சாலை உருவான பிறகு, போக்குவரத்து வசதி எளிதாகவும் வேகமாகவும் மாறியுள்ளது. இதனால் மக்களின் தினசரி வாழ்க்கை எளிதாகியுள்ளது.

சுற்றுலா வளர்ச்சி: உலகின் மிக உயரமான வாகனச் சாலையைப் பார்க்க உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இது அந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. இயற்கையின் அழகையும், மனிதன் செய்த சாதனையையும் ஒரே நேரத்தில் காணும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது.

சாலை அமைப்பதில் ஏற்பட்ட சவால்கள்: இந்தச் சாலை அமைப்பது எளிதான காரியம் அல்ல. பல சவால்களை எதிர்கொண்டனர். கடும் குளிர் நிலை (−30°C வரை), ஆக்சிஜன் குறைபாடு, அடிக்கடி ஏற்படும் பனிச்சரிவு, கடினமான மலைப்பாறைகள். இந்தச் சவால்களை மீறி, இந்திய பொறியாளர்களும் தொழிலாளர்களும் அபாரமான உழைப்புடன் இந்தச் சாலையை அமைத்தனர்.

இதையும் படியுங்கள்:
பெட்ரோல், டீசல் எல்லாம் ஓரம்போ... உலகையே அதிர வைத்த புதிய லேசர் டெக்னாலஜி!
highest motorable road

மனிதன் மற்றும் இயற்கை: இந்தச் சாலை மனிதன் இயற்கையை வென்றதாகக் காட்டுவதல்ல; இயற்கையுடன் ஒத்துழைத்து வாழக் கற்றுக் கொண்டதற்கான எடுத்துக்காட்டாகும். மலைகளை சேதப்படுத்தாமல், சுற்றுச்சூழலைக் கவனத்தில் கொண்டு சாலை அமைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.

உலகிலேயே மிக உயரமான வாகனச்சாலை என்பது ஒரு சாலை மட்டுமல்ல; அது மனித அறிவு, துணிச்சல், உழைப்பு மற்றும் தேசப்பற்று ஆகியவற்றின் அடையாளமாகும். இயற்கையின் கடும் சவால்களை எதிர்கொண்டு உருவான இந்தச்சாலை, எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கம் அளிக்கும் ஒரு வரலாற்றுச் சாதனையாக விளங்குகிறது. மனிதன் முயன்றால் எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்தச்சாலை உலகிற்கு உணர்த்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com