இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆளில்லா உளவு விமானம்!

The first unmanned spy plane made in India!
The first unmanned spy plane made in India!

அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆளில்லாமல் தொடர்ந்து 36 மணி நேரம் இயங்கும் அதிநவீன ட்ரோனை உருவாக்கி உள்ளது.

கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 40 நாட்களில் 35 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் இந்திய கப்பல்களும் இவ்வாறான தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.

இந்த நிலையில் அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆளில்லா அதிநவீன ட்ரோனை உருவாக்கி அதை இந்திய கடற்படை இடம் ஒப்படைத்து இருக்கிறது.

இந்த ட்ரோனுக்கு திருஷ்டி 10 ஸ்டார்லைனர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அதிநவீன கேமராக்கள், அதிநவீன சென்சார்கள், மேம்பட்ட தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் கருவி, இலக்குகளை துல்லியமாக அடையாளம் காணும் தொழில்நுட்பம், ஆயுதம் தாங்கும் செயல்திறன் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இது 36 மணி நேரம் தொடர்ந்து பறக்கூடியது. மேலும் இதனுடைய எடை 450 கிலோ ஆகும். இந்த ட்ரோன் மூலம் நுண்ணறிவு, கண்காணிப்பு, உளவு நடவடிக்கைகள் எளிதாக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஊட்டச்சத்து மிகுந்த 12 வகை Breakfast Bowl உணவுகள்!
The first unmanned spy plane made in India!

இதுகுறித்து இந்திய கடற்படை தெரிவித்திருந்தது, இந்த திருஷ்டி 10 ஸ்டார் லைனர் பல்வேறு வகைகளில் இந்திய கடற்படைக்கு உதவும். இது மிக முக்கியமான உளவு கருவியாக மாறி இருக்கிறது. மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்திய கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்து இருக்கிறது. மேலும் இது முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன் மூலம் இந்தியா வெளிநாடுகளிடமிருந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை குறையும், இது இந்தியாவிற்கு பொருளாதார ரீதியான பயனாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com