Upload high quality photos and videos on Instagram.
Upload high quality photos and videos on Instagram.

இன்ஸ்டாகிராமில் High Quality போட்டோ, வீடியோ எப்படி அப்லோடு செய்வது தெரியுமா?

இன்றைய தலைமுறையில் எல்லா வயதினரும் சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது செலவழிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களும் அதற்கு ஏற்றவாறு நாட்டு நடப்புகளை நொடிப் பொழுதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதால், இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

இதில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம் முதலிடம் வகிக்கிறது. இன்ஸ்டாகிராம் வாசிகள் தங்களது அன்றாட நிகழ்வுகளை போட்டோ, வீடியோ, ஸ்டேட்டஸ் என பகிர்ந்து கொள்வதால் இந்த சமூக வலைதளம் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஆனால் இப்படி போட்டோ அல்லது வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றும்போது நாம் அப்லோட் செய்யும் ஒரிஜினல் தரத்திலிருந்து குறைந்த தரத்திலேயே இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. 

இதனால் நாம் துல்லியமாக எடுத்த போட்டோவும் இன்ஸ்டாகிராமில் போடும்போது மங்கலாகவே உள்ளது. இன்ஸ்டாகிராம் அப்லோடு செய்யும் பதிவுகளின் தரத்தைக் குறைப்பது மூலமாக லோடிங் வேகத்தை அதிகரிக்க முடியும் என்பதால் அப்படி செய்கிறார்கள். ஆனால் இது இன்ஸ்டாகிராம் பயனர்களை திருப்திப் படுத்துவதில்லை. இப்படி மோசமான புகைப்பட தரத்தால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்கு சில தந்திரங்களை சொல்லித் தருகிறேன். அதைப் பயன்படுத்தி போட்டோ மற்றும் வீடியோவின் தரத்தை இன்ஸ்டாகிராமில் மேம்படுத்த முடியும். 

  1. முதலில் உங்களது இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்ளே செல்லுங்கள். பின்னர் உங்கள் ப்ரொபைல் பக்கத்தில் வலது மேல் புறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளைத் தொடவும். 

  2. அதில் Settings & Privacy என்பதை கிளிக் செய்து Media Quality என்பதைத் தேர்வு செய்யுங்கள். 

  3. பின்னர் அதில் காட்டப்படும் ஆப்ஷனில் Upload at the Highest Quality என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

  4. இறுதியாக உங்களுடைய இன்ஸ்டாகிராம் செயலியை க்ளோஸ் செய்துவிட்டு மீண்டும் உள்ளே வந்து புகைப்படமோ அல்லது காணொளியையோ அப்லோடு செய்தால், அதன் தரம் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இரவில் ஜொலிக்கும் மாயாஜால கடற்கரைகள்!!
Upload high quality photos and videos on Instagram.

இப்படி நீங்கள் தேர்வு செய்வதால் உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் காட்டப்படும் பதிவுகளும் ஹை குவாலிட்டியில் காட்டப்படும். எனவே உங்களது டேட்டா வீணாகலாம். உங்களது இணையவேகம் குறைவாக இருக்கும் போது இந்த அம்சத்தை ஆப் செய்து வைப்பது நல்லது. ஏதேனும் அப்லோடு செய்யும்போது மட்டும் இந்த வசதியைப் பயன்படுத்திவிட்டு மீண்டும் நிறுத்தி விடுங்கள். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com