ஸ்மார்ட் போனில் இருக்கும் Flight Mode இத்தனை விஷயங்களுக்கு பயன்படுமா?

Flight Mode Uses.
Flight Mode Uses.

உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் பிளைட் மோடை நீங்கள் எதற்கெல்லாம் பயன்படுத்துகிறீர்கள்? பெரும்பாலானவர்கள் திடீரென்று ஏதாவது நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டால் பிளைட் மோடில் போட்டு எடுப்பார்கள். இதற்கு மட்டும்தான் இது பயன்படும் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் பல சூழ்நிலைகளில் பிளைட் மோட் உதவியாக இருக்கும். 

வேகமாக சார்ஜ் ஏற்ற: அவசர நேரங்களில் வேகமாக போனை சார்ஜ் ஏற்ற வேண்டும் என்றால், ஸ்மார்ட்போனைட் மோடில் போட்டு சார்ஜ் ஏற்றலாம். இதனால் போனின் பல இயக்கங்கள் முடக்கப்பட்டு, வேகமாக சார்ஜ் ஏற உதவும்.

நெட்வொர்க்கை சரி செய்ய: நீங்கள் ஏதாவது புது இடத்திற்கு சென்றால், அங்கே நெட்வொர்க் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுபோன்ற தருணங்களில் ஒரு முறை பிளைட் மோட் போட்டு மீண்டும் அணைக்கும் போது, சிறந்த நெட்வொர்க்கை மீட்டமைக்க உதவும். அதுமட்டுமின்றி வைபை, ப்ளூடூத் போன்றவற்றையும் மீட்டெடுக்க இது உதவும். இதனால் உங்களுடைய நெட்வொர்க் பிரச்சனை தீரும். 

பேட்டரியை சேமிக்க: சாதனத்தை பிளைட் மோடில் போடும்போது, அதன் பேட்டரி அதிகம் சேமிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் நீங்கள் அதிக நேரம் உங்களுடைய போனை பயன்படுத்த முடியும். நீங்கள் எங்காவது வெளியே பயணம் செய்யும்போது, சார்ஜ் செய்ய முடியாத சூழலில் இதைப் பயன்படுத்தலாம். 

தனியுரிமை காரணத்திற்காக: பிளைட் மோடை சாதனத்தில் ஆன் செய்யும்போது, அது போனிலிருந்து வெளிவரும் தேவையில்லாத சிக்னல்களைத் தடுக்கும். இதனால் சில தனியுரிமை பாதுகாப்பு காரணங்களுக்காக, நூலகம் மருத்துவமனை போன்ற பொது இடங்களில் பிளைட் மோடை ஆன் செய்து உங்கள் வயர்லெஸ் இணைப்புகளை முடக்கலாம். நீங்கள் விமானத்தில் பயணம் செய்யும்போது உங்கள் சாதனத்தை பிளைட் மோடில் போட்டு பயன்படுத்தச் சொல்வது இதற்காகத்தான். 

இதையும் படியுங்கள்:
போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட உதவும் 'Focus Mode'!
Flight Mode Uses.

மேலும் நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள் என்றால், ரோமிங் கட்டணங்களைத் தவிர்க்கவும் பிளைட் மோடைப் பயன்படுத்தலாம். இப்படி பல இடங்களில் பிளைட் மோட் உங்களுக்கு பாதுகாப்பானதாகவும் உதவியாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com