Charger மாத்தி Use பண்ணா இதுதான் நிலைமை!

Charger
Charger
Published on

என் சார்ஜரில் போட்டா தான் போன் சார்ஜ் ஆகும் இதை கேட்டா காதுலயே வாங்காதீங்க.

வீட்டுக்கு வரும்  230V AC (Alternative current)  வோல்டேஜ் சப்ளையை மாற்றி போனுக்கேற்றபடி  (Direct Current) ஆக மாற்றுவது தான் சார்ஜர்களின் வேலை. 67W, 80W, 30W என சார்ஜர்களில் குறிப்பிடப்படுபவை அனைத்தும் அதனுடைய பவரை குறிக்கின்றன.

பவர் அதிகமாக இருந்தால் பேட்டரியும் சார்ஜ் அதிகமாக இருக்கும்.10W என குறிப்பிடப்பட்டிருந்தால் அதில் 5V(வோல்ட) 2A(ஆம்பியர்) இருக்கும். இந்த இரண்டையும் பெருக்கினால் 10W வாட்ஸ் என்பது தான் அதனுடைய பவர் .

பாஸ்ட் சார்ஜிங், சூப்பர் பாஸ்ட் சார்ஜிங், ஊக் சார்ஜிங், சூப்பர் வுட் சார்ஜிங், டர்போ சார்ஜிங் என்று குறிப்பிடப்படும் சார்ஜர்கள் அனைத்தும் வோல்டேஜ் ,கரண்ட் இரண்டையும் பொறுத்து செயல்படுகிறது.

இப்போது வரும் சார்ஜர்கள் அனைத்தும் மிகவும் விரைவாக சார்ஜ் ஆகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் முன்பு வந்த சார்ஜர்கள் தற்போது பயனற்றதாக இருக்கின்றன.

ஆனால் சூப்பர் ஊக் சார்ஜரிலேயே அதற்கு ஏற்ற மொபைலை சார்ஜ் செய்தாலும் அந்த மொபைலில் 80% சார்ஜர் இருந்தால் குறைவாகவே கரண்டை எடுத்துக் கொள்ளும். டிவைசில் சார்ஜர் குறைவாக இருந்து அதனை பயன்படுத்தும் போதுதான் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ள பவரின் படி விரைவாக சார்ஜ் ஏறும்.

Vooc சார்ஜருக்கான சப்போர்ட் இருந்து, போனும் vooc சார்ஜ் திறனாக இருந்தாலும்  vooc சார்ஜிங் நடக்காது. இதற்கு மிக முக்கிய காரணம் இரண்டையும் இணைக்கும் கேபிள். அந்த ஃபோனுடன் கொடுத்த கேபிளாக இருந்தால் மட்டுமே vooc சார்ஜிங் விரைவாக நடக்கும். வேறு கேபிளை பயன்படுத்தும் போது vooc சார்ஜிங் நடக்காது.

இதையும் படியுங்கள்:
அணியினர் விடுதியில் தங்கியிருக்க, பயிற்சிக்கு வீட்டிலிருந்து மைதானத்திற்கு வரும் கோலி!
Charger

ஆனால், போனுடன் வரும் பாக்சில் உள்ள கேபிள் நீண்ட நாட்கள் உழைக்காது. அப்போது நாம் கேபிளை வாங்கும் போது நாம் பயன்படுத்தும் சார்ஜரின் திறனை விட உதாரணமாக 67W,33W என குறிப்பிட்டு இருந்தால் அதைவிட அதிகமாக திறன் கொண்ட 100W கேபிளை வாங்க வேண்டும். அடாப்டரை வாங்கும்போதும் அதனுடைய வாட்சைப் பார்த்து வாங்குவதுதான் தான் சிறந்தது.

எந்த சார்ஜரை கொண்டு எந்த மொபைலில் போட்டாலும் அதில் உள்ள charging control circuit, micro control circuit பொறுத்தே சார்ஜ் ஏறும் நேரம் நிர்ணயிக்கப்படும். தற்போது வரும் சார்ஜர்களில் நிறைய லிமிடேஷன்கள் இருப்பதால் எந்த சார்ஜரை எந்த மொபைலில் கனெக்ட் செய்தாலும் மொபைலில் உள்ள பேட்டரியின் திறனை பொறுத்துத்தான் வேலை செய்யும். 

இதையும் படியுங்கள்:
பிரபல நிறுவனத்தில் 6 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்..!
Charger

என்னுடைய சார்ஜரில் போட்டால் தான் என்னுடைய டிவைஸ் வேலை செய்யும் என்பதும் தவறான கருத்தாகும். ஆகவே எந்த சார்ஜராக இருந்தாலும் அதனுடைய டிவைஸை பொறுத்துதான் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதால் எல்லா சார்ஜர்களையும் எந்த டிவைஸுக்கும் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com