அசத்தலான அம்சங்களுடன் போட்டோ பிரியர்களுக்கான சூப்பர் போன்... 'Vivo V60 5G' அறிமுகம்!

விவோ நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய ‘விவோ வி60 5ஜி’ என்ற புதிய ஸ்மார்ட்போனானது, பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
Vivo V60 5G
Vivo V60 5Gimg credit- financialexpress.com
Published on

சீன மின்னணுவியல் நிறுவனமான விவோ (vivo), ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பாகங்களை வடிவமைக்கிறது மற்றும் தயாரிக்கிறது. மேலும், இந்நிறுவனம் ஆடியோ சாதனங்கள் மற்றும் மென்பொருள்கள் தயாரிப்புகளையும் உள்ளடக்கியது.

உலகளவில் விற்கப்படும் விவோவின் தயாரிப்புகள், குறிப்பாக ஆசியா மற்றும் பிற வளர்ந்து வரும் சந்தைகளில் பிரபலமாக உள்ளது. விவோ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் தொழில்நுட்பம் மற்றும் ஃபேஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அந்த வகையில் விவோ இந்திய சந்தையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய வி-சீரிஸ் ஸ்மார்ட்போனான 'விவோ வி60 5ஜி' மொபைலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

விவோ நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய ‘விவோ வி60 5ஜி’ என்ற புதிய ஸ்மார்ட்போனானது, பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த போன் குறிப்பாக புகைப்பட பிரியர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமண புகைப்படங்கள் மற்றும் போர்ட்ரெய்ட் ஷாட்டுகளை சிறப்பாக எடுப்பதற்கு ஏற்றது. இந்த போன், 50 எம்.பி. குரூப் செல்பி கேமரா, 50 எம்.பி. மெயின் கேமரா, 50 எம்.பி. டெலிபோட்டோ கேமரா என மூன்று வித்தியாசமான கேமராக்களை கொண்டிருக்கிறது.

இந்த போனில் உள்ள 50MP Sony கேமரா மற்றும் ZEISS தொழில்நுட்பம் தரமான, துல்லியமான போர்ட்ரெய்ட் புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. கேமராவுடன் சேர்த்து அழகான வடிவமைப்பு, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் பல AI போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. மெல்லிய டிசைனில் கையாளுவதற்கு எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனில் நீர், தூசி எதிர்ப்பு தரச்சான்றான IP68 & IP69 ரேட்டிங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் உள்ள 5ஜி இணைப்பு அதிவேக இணைய வசதியை வழங்குகிறது. அதிகபட்சம் 16GB LPDDR4X RAM மற்றும் 512GB UFS 2.2 சேமிப்பு வசதியுடன் வருவதால் ஸ்டோரேஜ் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

அண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Funtouch OS 15 இயங்குதளத்துடன், 4 ஆண்டுகள் சாப்ட்வேர் அப்டேட் மற்றும் 6 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட் போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளது. 6500 எம்.ஏ.எச். பேட்டரியுடன் வரும் விவோ வி60, 90W ஃபாஸ்ட் சார்ஜை சப்போர்ட் செய்யும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
POCO F7 5G: கேமிங்கையும் கடினமான சவால்களையும் ஆளும் அசுர ஸ்மார்ட்போன்!
Vivo V60 5G

மேலும் 6.77 அங்குல தொடுதிரை, 5000 நிட்ஸ் திரை வெளிச்சம், 7 ஜென் 4 புராசசர், இவற்றுடன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. சேமிப்பு இடவசதி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சந்தைக்கு வந்திருக்கிறது.

விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போன் அசெடிக் கோல்டு (Ascetic Gold), மூன்லைட் ப்ளூ (Moonlight Blue) மற்றும் மிஸ்ட் கிரே (Mist Gray) போன்ற 3 கண் கவர் நிறங்களுடன் கிடைக்கிறது.

8GB RAM + 128GB சேமிப்பு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.36,999 தொடக்க விலையிலும், 8GB RAM + 256GB சேமிப்பு வசதி கொண்டது ரூ.38,999 விலையிலும், 12GB RAM + 256GB சேமிப்பு வசதி கொண்டது ரூ.40,999 விலையிலும், 16GB RAM + 512GB சேமிப்பு வசதி கொண்ட போன் ரூ.45,999 விலையிலும் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஓப்போவின் புதிய 'K13x 5G' ஸ்மார்ட்போன் அறிமுகம்...
Vivo V60 5G

விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போன், தற்போது Vivo ஆன்லைன் ஸ்டோர், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன், மலிவு விலையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த போனை வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com