ஸ்மார்ட்போன் இப்போது அனைவரின் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. இன்றைய அவசர உலகில் மெதுவாக செயல்படும் போன் எரிச்சலை உண்டாக்குகிறது. பைல்களையும் ஆப்களையும் டெலிட் செய்வதுதான் போனின் செயல் திறனை கூட்டுவதற்கான ஒரே வழி என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இவற்றை நீக்காமல் போனின் வேகத்தை கூட்டுவதற்கான 3 வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. ஃபோனை தொடர்ந்து ரீஸ்டார்ட் செய்யவும்
ஃபோனின் பின்னணியில் இயங்கும் செயலிகள் மற்றும் தற்காலிக கோப்புகள் போனை நீண்ட நேரம் பயன்படுத்தும் போது அதனுடைய வேகத்தை குறைக்கின்றன. ஃபோனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம், ரேம் (RAM) சுத்தப்படுத்தப்படுகிறது. இதனால் சிஸ்டம் புதுப்பிக்கப்பட்டு தேவையற்ற பின்னணி ஆப்கள் நிறுத்தப்படுகின்றன. சில வினாடிகள் போனை ஆப் செய்து மீண்டும் ஆன் செய்வதன் மூலம் போன்கள் சீராக இயங்க உதவுவதோடு செயல்திறனை மேம்படுத்துகின்றன.
2. சாப்ட்வேர் & ஆஃப்களை புதுப்பிக்கவும்
அப்டேட் செய்யப்படாத செயலிகள் மற்றும் பழைய சாஃப்ட்வேர் ஆகியவை போனின் வேகத்தை குறைக்கும். மென்பொருள் அப்டேட்கள் மற்றும் பிழைத் திருத்தங்கள் செயல்திறன் மேம்பாடுகளுடன் வருவதால், உங்கள் ஃபோன் வேகமாகச் செயல்படும். ஆகையால் ஃபோனின் Settings > Software Update பகுதிக்குச் சென்று, கிடைக்கும் புதுப்பிப்புகளை இன்ஸ்டால் செய்யவும். Google Play Store அல்லது App Store ஐத் திறந்து, 'My Apps & Games' பகுதிக்குச் சென்று அனைத்து ஆப்ஸ்களையும் அப்டேட் செய்வதன் மூலம் ஆப்களும் அப்டேட் ஆகி போனை ஸ்பீடாக இயங்க வைக்க உறுதுணையாக இருக்கும்.
3. கேச் (Cache) பைல்களை நீக்கவும்
செயலிகள் வேகமாக இயங்குவதற்காகச் சேமிக்கப்படும் தற்காலிகத் தரவுகளாக கேச் பைல்கள் உள்ளன. அதிகமாக சேமிக்கப்படும் இந்தக் கோப்புகள் காலப்போக்கில் ஃபோனை மெதுவாக்குகின்றன. முக்கியமான கோப்புகளை நீக்காமல் கேச் கோப்புகளை நீக்குவது ஃபோனின் இடத்தை அதிகரித்து, அதன் செயல்திறனை மேம்படுத்தி போனை ஸ்பீடாக்க உதவி புரிகின்றன. Settings > Storage > Cached Data பகுதிக்குச் சென்று ஆண்ட்ராய்டு போன்களில் அவற்றை சுத்தப்படுத்தவும். சஃபாரி பிரவுசரின் கேச்சை நீக்க ஐபோன்களில் Settings > Safari > Clear History and Website Data பகுதிக்குச் சென்று நீக்கினால் போனின் செயல் திறன் மேம்படும்.
மேற்கூறிய மூன்று எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் எந்த முக்கியமான டேட்டாவையும் இழக்காமல் பாதுகாத்து போனை வேகமாக செயல்பட வைக்க முடியும்.