அளவில் சின்னது, எடையில் பெரியது… அது என்னது? 

Neutron stars
Neutron stars
Published on

பிரபஞ்சம் என்பது பல மர்மங்களாலும் அதிசயங்களாலும் நிறைந்த ஒரு விசித்திரமான இடம். நாம் வாழும் பூமி போன்ற கோள்கள், சூரியன் போன்ற நட்சத்திரங்கள் என பல அற்புதமான பொருள்கள் இதில் உள்ளன.‌ அவற்றுள் மிகவும் சுவாரசியமான ஒன்றுதான் நியூட்ரான் நட்சத்திரங்கள். ஒரு பெரிய நட்சத்திரம் தனது ஆயுட்காலம் முடிந்து வெடித்து சிதறும்போது, மிகவும் அடர்த்தியான ஒரு பொருள் உருவாகிறது. இதுதான் நியூட்ரான் நட்சத்திரம் (Neutron Star). இது ஒரு சிறிய வெளிபரப்பில் மிகப்பெரிய நிறையைக் கொண்டிருக்கும். ஒரு கையடக்க அளவுள்ள நியூட்ரான் நட்சத்திரத்தின் எடை எவரெஸ்ட் மலையின் எடைக்கு சமமாக இருக்கும்.‌ இந்த அதிசயமான பொருட்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.‌ 

ஒரு நட்சத்திரம் தனது மையத்தில் உள்ள ஹைட்ரஜனை எரித்து முடித்த பின்னர், ஈர்ப்புவிசையின் காரணமாக சுருங்கத் தொடங்கும்.‌ இந்த சுருங்குதல் மிகவும் வேகமாக நடைபெறும் போது ஒரு சூப்பர் நோவா வெடிப்பு நிகழும். இந்த வெடிப்பின் போது நட்சத்திரத்தின் வெளிப்புறப பகுதிகள் வெளியே தள்ளப்படும். ஆனால், நட்சத்திரத்தின் மையப்பகுதி மிகவும் அடர்த்தியாக சுருங்கி நியூட்ரான் நட்சத்திரமாக மாறும். 

நியூட்ரான் நட்சத்திரங்கள் நியூட்ரான்களால் ஆனவை. நியூட்ரான்கள் என்பவை அணுக்கருவில் காணப்படும் நடுநிலைத் துகள்கள். நியூட்ரான் நட்சத்திரங்களில் நியூட்ரான்கள் மிகவும் நெருக்கமாக அமைந்திருப்பதால், அவை மிகவும் அடர்த்தியானவை. இதன் காரணமாகவே ஒரு சிறிய வெளிபரப்பில் மிகப்பெரிய நிறையைக் கொண்டிருக்கின்றன.‌ 

இதையும் படியுங்கள்:
எதற்காக இந்த விண்வெளி மற்றும் பிரபஞ்ச ஆராய்ச்சிகள்?
Neutron stars

நியூட்ரான் நட்சத்திரங்களின் பண்புகள்: 

நியூட்ரான் நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் அடர்த்தியான பொருட்களில் ஒன்று. இவை மிகவும் வலுவான காந்தப்புலத்தைக் கொண்டிருக்கும். இந்த நட்சத்திரங்கள் மிகவும் வேகமாக சுழலும் தன்மை கொண்டவை. இவற்றின் அளவு மற்ற நட்சத்திரங்களுடன் ஒப்பிடுகையில் சிறியதாகவே இருக்கும். இந்த நட்சத்திரங்கள் அவற்றின் சுழற்சி வேகம் மற்றும் காந்தப்புலத்தின் வலிமை ஆகியவற்றைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.‌ 

இந்த நட்சத்திரங்களை ஆய்வு செய்வதன் மூலம் நாம் பிரபஞ்சத்தின் பல ரகசியங்களை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஈர்ப்பு விசை, அணுக்கரு இயற்பியல் மற்றும் ஒரு பொருளின் அடிப்படைத் தன்மை ஆகியவற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com