கட்டுமானத் துறையில் எஃப்எஸ்ஐ (FSI) என்பது எதைக் குறிக்கிறது?

எஃப்எஸ்ஐ என்றால் என்ன ? அதைக் கணக்கிடுவது எப்படி ? என்பதை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கட்டுமானத் துறையில் எஃப்எஸ்ஐ (FSI) என்பது எதைக் குறிக்கிறது?
Published on

கட்டுமானத் துறைகளில் உள்ளவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை எஃப்எஸ்ஐ ஆகும். எஃப்எஸ்ஐ என்றால் என்ன ? அதைக் கணக்கிடுவது எப்படி ? என்பதை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கட்டுமானத் துறையில் FSI என்பது "ஃப்ளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸ்" (Floor Space Index) என்பதைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தில் (Plot) எத்தனை சதுர அடிகள் கட்டடம் கட்டலாம் என்பதை கணக்கிட்டு அறியப் பயன்படும் ஒரு அளவே எஃப்எஸ்ஐ எனப்படுகிறது. கட்டட அனுமதி அளிக்கும் நகர்ப்புற திட்டமிடல் அமைப்பானது FSI மூலம் ஒரு நிலத்தின் கட்டுமான பரப்பளவை உறுதிசெய்து விதிகளுக்கு உட்பட்டு அது சரியாக இருக்கும்பட்சத்தில் கட்டட அனுமதியினை அளிக்கும்.

எளிதில் புரியும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் FSI என்பது ஒரு நிலப்பரப்பில் கட்டப்படக்கூடிய கட்டடத்தின் மொத்த பரப்பளவிற்கும் அந்த நிலப்பரப்பின் பரப்பளவிற்கும் உள்ள விகிதத்தைக் குறிக்கிறது.

FSI யை கணக்கிடுவதற்கு கட்டப்பட திட்டமிடப்பட்டிருக்கும் கட்டடப் பரப்பளவை மொத்த நிலப்பரப்பால் வகுக்க வேண்டும். கட்டடப் பரப்பளவானது ஒரு கட்டடத்தில் ஒருவர் கட்ட திட்டமிடப்பட்டிருக்கும் மொத்ததளங்களையும் குறிக்கும். உதாரணமாக ஒரு நிலப்பரப்பில் அதற்குரிய கட்டட அளவினை இடமிருக்கும் பட்சத்தில் ஒரே தளமாகவும் முழுவதுமாகக் கட்டிக் கொள்ளலாம். அல்லது அனுமதிக்கப்படும் பரப்பளவு கட்டடத்தினை ஒருமாடியாகவோ இரண்டு மாடியாகவோ அல்லது மூன்று மாடியாகவோ அமைத்தும் கட்டிக் கொள்ளலாம். மொத்தத்தில் அனுமதி அளிக்கப்படும் மொத்த சதுரஅடி அளவு பரப்பிற்கு மேல் கட்டக்கூடாது.

மொத்த கட்டடப்பகுதி = நிலத்தின் மொத்த பரப்பளவு x எஃப்எஸ்ஐ குறியீடு.

உதாரணமாக ஆயிரம் சதுரஅடிப் பரப்பளவில் கட்டடம் கட்ட விரும்புகிறீர்கள். நகர்ப்புற திட்டமிடல் அமைப்பு அந்த பகுதிக்கு எஃப்எஸ்ஐ இன்டெக்ஸ் 2.0 என்று நிர்ணயம் செய்திருந்தால் அந்த நிலப்பரப்பளவில் நாம் இரண்டாயிரம் சதுரஅடி அளவு கட்டுமானத்தை மேற்கொள்ளலாம்.

FSI = 1000 Sq.ft x 2.00 = 2000 Sq.ft.

எஃப்எஸ்ஐ இன்டெக்ஸ் 1.0 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் ஒருவர் இதே அளவுள்ள நிலப்பரப்பில் ஆயிரம் சதுரஅடி அளவு கட்டுமானத்தை மட்டுமே மெற்கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
கட்டுமான பணிகளில் இனி செங்கலே தேவை இல்லையா?
கட்டுமானத் துறையில் எஃப்எஸ்ஐ (FSI) என்பது எதைக் குறிக்கிறது?

FSI = 1000 Sq.ft x 1.00 = 1000 Sq.ft.

எஃப்எஸ்ஐ அளவில் Premium FSI என்ற ஒரு விஷயம் உள்ளது. பிளாட்டை ஒட்டி அகலமான பிரதான சாலை வசதி இருந்தால் இந்த பிரிமியம் FSI அளவு கணக்கிடப்படும். வழக்கமான FSIல் சாலையின் அகலம் முப்பது அடியாகும்.

ஒருவர் கட்ட இருக்கும் நிலப்பரப்பானது (Plot) நாற்பது அடி அகலமுள்ள சாலையில் அமைந்திருந்தால் அவர் வழக்கமாக அனுமதிக்கப்படும் அளவைவிட 20 சதவிகிதம் கூடுதலாக கட்டுமானம் மேற்கொள்ளலாம். சாலையின் அகலம் நாற்பது முதல் அறுபது அடியாக இருந்தால் முப்பது சதவிகிதம் கூடுதல் கட்டுமானம் மேற்கொள்ளலாம்.

FSI இண்டெக்ஸ் ஆனது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். அரசு நிர்ணயித்திருக்கும் FSI விதிகளுக்கு உட்பட்டு கட்டடம் கட்ட வேண்டிய அளவினை நிர்ணயித்து முறையாக அனுமதி பெற்று ஒருவர் கட்டடத்தைக் கட்டினால் எந்த பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருக்காது.

இதையும் படியுங்கள்:
தொடர்ந்து ஏறுமுகத்தில் சிமெண்ட் விலை, கையை பிசையும் கட்டுமானத் தொழில் நிறுவனங்கள்!
கட்டுமானத் துறையில் எஃப்எஸ்ஐ (FSI) என்பது எதைக் குறிக்கிறது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com