டேட்டா சயின்ஸ் துறையின் எதிர்காலம் என்ன?

டேட்டா சயின்ஸ் துறையின் எதிர்காலம் என்ன?
Published on

குறிப்பிட்ட ஒரு டேட்டாவிலிருந்து அதன் தகவல்களை பிரித்தெடுப்பதற்கு புள்ளி விவர கணக்கீடுகளைப் பயன்படுத்துவதே டேட்டா சயின்ஸ் எனப்படும். 

இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாத துறையே இல்லை. தற்போதைய டிஜிட்டல் உலகில் அந்த அளவுக்கு தகவல்கள் எல்லா இடங்களிலும் பரவிக் கிடைக்கிறது. குறிப்பாக அரசாங்கம், வணிகம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கு இது மிகவும் பயனுள்ள கருவியாக இருக்கிறது. மேலும் ஃபைனான்ஸ், மார்க்கெட்டிங், ஹெல்த் கேர், ரீ டைல் உள்ளிட்ட துறைகளிலும் டேட்டா சயின்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. டேட்டாக்களை சேமித்தல், செயலாக்குதல், பகுப்பாய்வு செய்து விளக்குதல் ஆகியவற்றின் மூலமாக, சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும், இருக்கும் வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கும் இது பெரிதும் பயன்படுவதாக சொல்லப்படுகிறது. 

உதாரணமாக காப்பீடு மோசடி மற்றும் கிரெடிட் கார்டு மோசடி போன்றவற்றை கண்டறிய டேட்டா சயின்ஸ் பெரிதும் பயன்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு வணிகவியல் யுக்திகளை வகுக்கவும் இது பயன்படுகிறது. இந்த துறையில் வல்லுனர்களாக இருப்பவர்களை 'டேட்டா சயின்டிஸ்ட்' என்று அழைப்பார்கள். சிக்கலான டேட்டா தொகுப்புகளை ஆராய்ந்து அதிலிருந்து தேவையான விஷயங்களைப் பிரித்தெடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இத்துறையில் திறமையான நிபுணர்களின் பற்றாக்குறை இருப்பதால், டேட்டா சயின்டிஸ்ட்களின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. சமீப காலமாகவே எதிர்காலத்தில் வாய்ப்புகள் அதிகம் உள்ள துறைகளான செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் போன்ற துறைகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த துறைகள் சார்ந்து தமிழக கல்லூரிகளில் 8000க்கும் மேற்பட்ட இடங்கள் இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. 

கணிதம் மற்றும் எண்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள் டேட்டா சையின்ஸ் துறையை தாராளமாகத் தேர்வு செய்யலாம். டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு டேட்டா ஆர்க்கிடெக்ட்,  டேட்டா சயின்டிஸ்ட், பிசினஸ் அனலிஸ்ட், டேட்டா மைனிங் இன்ஜினியர் என ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. மேலும் சில ஆண்டுகள் அனுபவம் இருந்தாலே அதிக வருமானத்தை வாரி வழங்கும் துறையாகவும் இது இருப்பதால், இந்த துறையை மாணவர்கள் தாராளமாக தேர்வு செய்யலாம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தத் துறைக்கு உலக அளவில் மிகுந்த தேவையும் எதிர்பார்ப்பும் இருப்பதால், இதைப் படிப்பவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com