low air in your car tires
low air in your car tires

கார் டயர்களில் காற்று குறைவாக இருந்தால் டயர் வெடிக்குமா?

கார் டயர்களை நல்ல முறையில் பராமரிப்பதன் மூலம் விபத்துக்கள், வீண் சிரமங்கள் மற்றும் செலவுகள் வராமல் தவிர்க்க முடியும்.
Published on

இந்தியாவில் கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிக ஆசைப்பட்டு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கார் வாங்குபவர்கள் அதனை எப்படி சரிவர பராமரிப்பது என்று தெரியாமல் கோட்டை விடுகின்றனர். இதனால் காரின் ஆயுள்காலம் விரைவில் குறைந்து விடுகிறது. காரின் உள்ளே இன்ஜின் போன்ற பாகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதன் டயருக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

காரின் பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம், பெர்ஃபார்மென்ஸ் போன்றவற்றை நிர்ணயிப்பதில் டயர்கள் முக்கிய சக்தியாக விளங்குகின்றன. டயர்களை நல்ல முறையில் பராமரிப்பதன் மூலம் விபத்துக்கள், வீண் சிரமங்கள் மற்றும் செலவுகள் வராமல் தவிர்க்க முடியும். அதேபோல் டயர்களில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும்போது, டயர்கள் சீக்கிரமாக தேய்மானம் அடைதல் மற்றும் பிரேக்கிங் செயல்திறன் ஆகியவை பாதிக்கப்படும். மேலும், டயர்கள் வெடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, கார் வைத்திருப்பவர்கள் சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் டயர்கள் நீடித்து உழைப்பதற்கு உத்தரவாதம் கிடைக்கும்.

கார் டயர்களில் காற்றின் அழுத்தத்தை பராமரிப்பதற்கான சில டிப்ஸ்...

* மாதத்திற்கு ஒரு முறையாவது டயர்களில் சரியான அளவில் காற்று நிரப்புவது நல்லது. இது கார் டயர் பஞ்சர்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கும், சீரான மற்றும் தடையற்ற ஓட்டுநர் அனுபவத்தை உறுதி செய்வதற்கும் டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்று அழுத்தத்தைப் பராமரிப்பது மிக முக்கியம். பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தம் வாகனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பு, மாடல் மற்றும் டயரின் வகையை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வதற்கு முன் கார் டயர்களில் காற்றின் அழுத்தம் சரியாக உள்ளதா என்பதை அறிந்து கொள்வது நல்லது.

* டயர்களில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும்போது, கார் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து ஓட்டினால், கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதை விட, டயர்களின் ஆயுட்காலமும் வெகுவாக குறையும். உங்கள் வாகனங்களின் எரிபொருள் சிக்கனம் டயர்களில் உள்ள சரியான காற்றழுத்தத்தை பெரிதும் நம்பியுள்ளது.

இதையும் படியுங்கள்:
வாகனத்தின் டயர் நீண்ட காலம் உழைக்க பெஸ்ட் டிப்ஸ்!
low air in your car tires

* கார் டயரில் காற்றின் குறைவான அழுத்தம் காரணமாக டயர்கள் அதிக வெப்பமடைந்து வெடிக்க அதிக வாய்ப்புள்ளது.

* டயர்களை சுழற்சி முறையில் மாற்றும் போது அது டயர்களின் தேய்மானத்தை சீராக்க உதவுகிறது, இதன் மூலம் டயர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. பொதுவாக, ஒவ்வொரு 10,000 கிமீட்டருக்கும் டயர்களை சுழற்சி முறையில் மாற்றம் செய்யவும் பரிந்துரைக்கப்படுகிறது.

* காரை சாலையில் உள்ள பள்ளங்களில் ஏற்றி இறக்கினால், டயர்களில் காற்றின் அழுத்தம் குறைந்துவிடும். அதனால் நெடுந்தூர பயணங்களின்போது, அடிக்கடி டயரை கண்காணிப்பது நல்லது.

* காற்றின் அழுத்தத்தை அளவிட, காற்று நிரப்ப உதவும் கருவிகள் சந்தையில் ரூ.450 முதல் கிடைக்கிறது. அதை வாங்கி வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம். ஆயிரக்கணக்கான விலை மதிப்புடைய டயர்களை பாதுகாப்பதற்கு இந்த கருவி கண்டிப்பாக உதவும்.

* குறைந்த டயர் அழுத்தத்தைத் தவிர்க்க, தொடர்ந்து கண்காணிப்பு தேவை. நம்பகமான டயர் கேஜைப் பயன்படுத்தி, குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது, நீண்ட பயணங்களுக்கு முன், உங்கள் டயர்களில் உள்ள அழுத்தத்தை சரிபார்த்து கொள்வது நல்லது.

* கார் டயர்களை பராமரிக்க, டயர் அழுத்தத்தை தவறாமல் சரிபார்த்து, டயர்களை சுழற்சி செய்து, டயர்களின் தேய்மானத்தை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். மேலும், டயர்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், உடனடியாக பழுது பார்க்கவோ அல்லது மாற்றவோ வேண்டும்.

* சரியாக காற்று நிரப்பப்பட்ட டயர்கள் உங்கள் வாகனத்தை நன்றாகக் கையாளவும், சாலையில் நல்ல இழுவை வழங்கவும் உதவுகின்றன. குறைவாக காற்று நிரப்பப்பட்ட டயர்கள் விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கும். அதே சமயம் அதிகமாக காற்று நிரப்பப்பட்ட டயர்கள் மோசமான கையாளுதலுக்கும், வெடிப்பு அபாயத்திற்கும் வழிவகுக்கும்.

* கார் ஒடாமல் இருக்கும்போதும் டயர்களின் காற்று அழுத்தத்தைச் சரிபார்க்க வேண்டும், ஏனெனில் கார்கள் ஓடும் போது வெப்பமடையும் என்பதால் டயர்களின் அழுத்தம் அதிகரிமாக காட்டும்.

* சரியாக காற்றோட்டம் உள்ள டயர்கள் நீண்ட காலத்திற்கு உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும். குறைவாக காற்றோட்டம் உள்ள டயர்கள் எரிபொருள் சிக்கனத்தைக் குறைக்க வழிவகுக்கும் மற்றும் டயர்கள் விரைவாக தேய்மானம் அடைய வழிவகுக்கும். இதனால் டயர்களை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும், இது உங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தை காலியாக்கும்.

இதையும் படியுங்கள்:
கார் டயர்கள் ஏன் வெடிக்கின்றன? எப்படி பாதுகாப்பது?
low air in your car tires

* டயரின் மேல் இருக்கும் தேய்மான குறியீட்டை (wear indicator) அவ்வப்போது சரிபார்க்கவும். தேய்மான குறியீடு டயரின் மேற்பரப்புடன் சமமாக இருக்கும் போது, டயரை மாற்ற வேண்டிய நேரம் இது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி டயர்களில் ஏதேனும் பிளவு, விரிசல் இருந்தால், உடனடியாக பழுது பார்க்கவோ அல்லது மாற்றி விடுவதோ நல்லது. ஏனெனில் இதன் மூலம் பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com