நீங்கள் தூங்குவதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா? 

what happens when you stop sleeping?
what happens when you stop sleeping?
Published on

தூக்கம் என்பது நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகும். இது நம் உடலும் மனமும் ரீசார்ஜ் செய்யும் நேரம். இதனால் நாம் காலையில் எழுந்திருக்கும் போது புத்துணர்ச்சியாக இருப்போம். ஆனால், ஒருவேளை நாம் தூங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டால் என்ன ஆகும் என எப்போதாவது யோசித்ததுண்டா? இந்தப் பதிவில் நாம் தூங்குவதை திடீரென நிறுத்தினால் உடலில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.  

நீங்கள் ஒரு நாள் முழுவதும் தூங்கவில்லை என்றாலே அதன் விளைவுகளை உடனடியாக அனுபவிப்பீர்கள். உங்கள் அறிவாற்றல் திறன்கள் பாதிக்கப்படும், எதிலுமே கவனம் செலுத்த முடியாது, முடிவுகளை எடுப்பது அல்லது தகவலை தகவமைப்பது கடினமாக இருக்கலாம். உங்கள் மனநிலை சீராக இருக்காது. 

நீங்கள் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் இருக்கும்போது அதன் விளைவுகள் தீவிரமடையும். உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்து, எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும். நாள்பட்ட தூக்கமின்மை உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் சில வகையான புற்று நோய்கள் போன்ற நிலைமைகளை உருவாக்கும். ஹார்மோன் சமநிலையின்மையால் உங்களுக்கு பசியின்மை, வளர்ச்சிதை மாற்றம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பெரிய அளவில் பாதிக்கப்படும். 

தூக்கமின்மை உங்களது உணர்வுகளை மோசமாக மாற்றும். மனநிலை மாற்றங்கள், அதிக கவலை மற்றும் மனச்சோர்வு போன்றவற்றின் அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கலாம். இதன் காரணமாக உங்கள் மூளையில் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பகுதி பாதித்து, எதிர்மறையான விஷயங்களுக்கு வழிவகுக்கும். 

உடலின் மறுசீரமைப்பு மற்றும் பழுதுபார்க்கும் செயல்முறைகளுக்கு தூக்கம் அவசியம். போதுமான தூக்கம் இல்லாமல் இந்த செயல்முறைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே தூக்கம் இல்லாதவர்கள் அடிக்கடி சோர்வு, தசை பலவீனம் மற்றும் காயம் மெதுவாக ஆறும் பாதிப்புகளை எதிர்கொள்ளலாம். மேலும், தூக்கமின்மையால் உங்களது ரிஃப்ளக்ஸ் விளைவு குறைவதால் விபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. 

இதையும் படியுங்கள்:
சரியாகத் தூங்க முடியவில்லையா? இந்த 7 வைட்டமின்கள் குறை உள்ளதா என்று பாருங்கள்!
what happens when you stop sleeping?

நீங்கள் அதிக நாட்கள் தூங்கவில்லை என்றால், illusion எனப்படும் மாயத்தோற்றம் மற்றும் பல்வேறு விதமான மன நோய்கள் ஏற்படலாம்.‌ இந்த அனுபவங்கள் உங்களுக்கு ஆழ்ந்த மன உளைச்சலையும், குழப்பத்தையும் தரக்கூடியவை. இத்தகைய நிலை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது முக்கியம். 

தூக்கமின்மை என்பது உங்களது உடல்நலம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே மோசமாக மாற்றிவிடும். எனவே, தினசரி உங்களது தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில் கவனமாக இருங்கள். இது உங்களது உடலையும் மனதையும் சிறப்பாக வைத்துக் கொள்ளவும், ஆரோக்கியத்தை நன்றாகப் பராமரிக்கவும் உதவுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com