நமது பூமி கருந்துளையால் உறிஞ்சப்பட்டால் என்ன ஆகும் தெரியுமா? 

Black Hole
What If Earth Were Sucked Into a Black Hole?

கருந்துளை என்பது இந்த பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் மர்மமான மற்றும் கவர்ச்சிகரமான விஷயங்களில் ஒன்றாகும். கிறிஸ்டோபர் நோலனின் Interstellar திரைப்படத்தில் கருந்துளைக்குள் பயணிப்பதை அப்படியே தத்துரூபமாகக் காட்டியிருப்பார்கள். கருந்துளைக்குள் செல்லும் பொருட்கள் ஒளியை விட அதிக வேகத்தில் பயணிப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை நமது பூமி கருந்துளையால் உறிஞ்சப்பட்டால் என்ன ஆகும் தெரியுமா? வாருங்கள் இப்பதிவில் அதுசார்ந்த சாத்தியமான உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.  

முதலில் பூமியானது ஒரு கருந்துளையை நெருங்கும்போது அது The Event Horizon என்கிற நிகழ்வை சந்திக்கும். அதாவது ஒரு அதிபயங்கர ஈர்ப்பு விசையை பூமி எதிர்கொள்ள நேரிடும். இந்த ஈர்ப்பு விசையிலிருந்து ஒளி கூட தப்ப முடியாது. இந்த எல்லையில் பூமி நுழைந்ததும், திரும்பி வெளிவர முடியாத நிலைக்கு செல்லும். 

அடுத்ததாக புவியீர்ப்பு விசையானது  Spaghettification என்ற நிகழ்வை ஏற்படுத்தும். இந்த நிகழ்வினால் பூமியானது ஒரு மெல்லிய இழை போல நீட்டி சிதைக்கப்பட்டு, கருந்துளையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தை நோக்கி முன்னேறும். இதில் பூமி கிட்டத்தட்ட துகள்களாக மாறிவிடும். 

கருந்துளையின் அதிதீவிர ஈர்ப்பு விசை காரணமாக, நேரம் கடுமையாக பாதிக்கப்படும். இதன் விளைவாக கருந்துளைக்கு வெளியே இருப்பதை விட கருந்துளைக்கு உள்ளே இருப்பனவற்றின் நேரம் குறையும். இதை Time Dilation விளைவு என்பார்கள். இதன் காரணமாகவே Interstellar திரைப்படத்தில், கருந்துளையில் பயணித்த தந்தை திரும்பி வரும்போது தன் மகளை விட வயது குறைவாக இருப்பார். 

பூமி கருந்துளையை நெருங்க நெருங்க, அதன் ஈர்ப்பு விசை மேலும் அதிகமாகும். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் திரும்ப வர முடியாத Singularity என்ற நிலைக்கு பூமி சென்றதும், புவியீர்ப்பு விசை பூமியை முற்றிலுமாக அழித்துவிடும். கருந்துளைக்குள் நுழையும்போது, பூமி வெறும் துகள்களாக மட்டுமே உள்ளே நுழையும். மேலும் பூமி கருந்துளைக்குள் நுழையத் தொடங்கிவிட்டால், அதை யாராலும் மீட்டெடுக்க முடியாது. அந்த அளவுக்கு மிக மோசமான புவிஈர்ப்பு விசையைக் கொண்டதுதான் கருந்துளை. 

இதையும் படியுங்கள்:
நீங்க ஒரு‌ 5 Seconds மார்ஸ் கிரகத்துல இருந்தா என்ன ஆகும் தெரியுமா? 
Black Hole

இந்த கருத்துக்கள் அனைத்துமே விஞ்ஞானிகளால் கற்பனையாக சொல்லப்படும் காட்சிகள்தான் என்றாலும், இது நமது பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளையின் பிரமிக்க வைக்கும் ஆற்றல் மற்றும் மர்மங்களை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. ஆனால் உண்மையிலேயே நீங்கள் நினைப்பதை விட மிகப்பெரிய ஆற்றல் மிக்கது கருந்துளை. எதிர்காலத்தில் பூமியின் அழிவு ஒரு கருந்துளையால் கூட ஏற்படலாம் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com