டைனோசர்களை அழித்த எரிகல் இப்போது பூமியை தாக்கினால் என்ன ஆகும்?

Asteroids that killed the dinosaurs
What if the Asteroids that killed the dinosaurs hit Earth now?
Published on

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் எரிகல் பூமியை தாக்கி டைனோசர்கள் உள்ளிட்ட பல உயிரினங்களை அழித்தது. இந்த நிகழ்வு பூமியின் வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றாகும். இதே போன்ற ஒரு நிகழ்வு 2024 இல் நடந்தால் என்ன ஆகும்? என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்தப் பதிவில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வின் விளைவுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.‌

ஒரு பெரிய எரிகல் பூமியை தாக்கும் நிகழ்வு என்பது பிரபஞ்ச சீற்றத்தின் ஒரு வெளிப்பாடாகும்.‌ கோடிக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு விண்கற்கள் மற்றும் எரிகற்கள் பூமியில் மோதி வருகின்றன. பெரும்பாலானவை வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால், அளவில் மிகப்பெரிய விண்கற்கள் பூமியை அடைந்து பேரழிவை ஏற்படுத்தும். 

டைனோசர்களை அழித்த எரிகல் யூகாட்டன் தீபகற்பத்தில் மோதியதாக கருதப்படுகிறது.‌ இதன் விளைவாக பூமி முழுவதும் கடும் வெப்பம், சுனாமி மற்றும் கடும் குளிர் ஆகியவை ஏற்பட்டன. பல உயிரினங்கள் அழிந்து உலகின் காலநிலை பெரிதும் மாறியது. 

இப்போது நடந்தால் என்ன ஆகும்? 

2024ல் அதே அளவிலான எரிகல் மீண்டும் பூமியை தாக்கினால் அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். எரிகல் பூமியை தாக்கும் தருணம் உலகெங்கிலும் பீதியை ஏற்படுத்தும். வானில் ஒரு பிரகாசமான ஒளிமயமான வெளிச்சம் தோன்றி, பின்னர் ஒரு பயங்கரமான வெடிப்புடன் பூமியில் மோதும். 

எரிகல் எங்கு மோதுகிறது என்பதைப் பொறுத்து அதன் விளைவுகள் மாறுபடும். கடலில் மோதினால் பேரலைகள் உருவாகி, கடற்கரை நகரங்கள் சேதமாகும். நிலத்தில் மோதினால் பூகம்பங்கள், எரிமலை, வெடிப்புகள், கடும் காற்று போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.‌ 

எரிகல் மோதலால் ஏற்படும் தூசி, புகை, சூரிய ஒளியைத் தடுத்து பூமியில் நீண்ட கால குளிர் ஏற்படலாம். கடும் வெப்பம், குளிர், பஞ்சம், நோய்கள் ஆகியவற்றால் பல உயிரினங்கள் அழிந்துபோகும். இதிலிருந்து மனித இனமும் தப்பிக்க முடியாது. 

இதையும் படியுங்கள்:
அடுத்த 1000 ஆண்டுகளில் மனித இனம் எப்படி இருக்கும்?
Asteroids that killed the dinosaurs

இந்த கற்பனையான ஒரு நிகழ்வு மனித இனத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. நாம் வாழும் பூமி மிகவும் மென்மையான ஒன்று. ஒரு சிறிய மாற்றம் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு நாம் வாழும் பூமியை பாதுகாக்க வேண்டியது அவசியம். தற்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் எரிகல் மோதுவதற்கு முன்பாகவே, மனிதர்களின் செயல்பாடுகள் பூமியை அழித்துவிடும் போல் உள்ளது. எனவே, மாசுபாட்டைக் குறைத்து இயற்கை வளங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும். 

இத்துடன் விண்வெளியில் இருந்து வரும் ஆபத்துக்களை கண்காணித்து அவற்றை எதிர்கொள்ள தயாரான தொழில்நுட்பங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பூமியை பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் நமது எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com