அடுத்த 1000 ஆண்டுகளில் மனித இனம் எப்படி இருக்கும்?

What will the human race look like in the next 1000 years?
What will the human race look like in the next 1000 years?
Published on

மனித இனத்தின் வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் பரிணாம வளர்ச்சி, புலம்பெயர்வு, கண்டுபிடிப்புகள் மற்றும் பல போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும். நம் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பல நகரங்களை உருவாக்கி, புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக உலகையே ஆட்சி புரிகின்றனர். எனவே, எதிர்காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டு மனித இனம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பற்றி சிந்திப்பது, உண்மையிலேயே வியக்க வைக்கிறது. அதுவும் அடுத்த 1000 ஆண்டுகளில் மனித இனம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

எதிர்காலம் என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது தொழில்நுட்ப முன்னேற்றம்தான். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு, பயோ டெக்னாலஜி மற்றும் நானோ தொழில்நுட்பம் போன்ற துறைகள் பல கட்ட முன்னேற்றத்தை அடைந்திருக்கும். இந்த முன்னேற்றங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கும். நாம் வேலை செய்யும் விதத்தில் இருந்து ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதம் வரை முற்றிலுமாக மாறி இருக்கும். அந்த காலகட்டத்தில், கைகளில் ஸ்மார்ட் போன்கள் இல்லாமல் போகலாம். சிந்தனை மூலமாகவே அனைத்தையும் செயல்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் உருவாகி இருக்கலாம். 

அடுத்ததாக உலகமயமாக்கல் அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கலாம். பல நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும். இது சில சமயங்களில் மோதலுக்கும் வழி வகுக்கலாம். 

காலநிலை மாற்றம் என்பது மனித இனத்திற்கு ஒரு முக்கிய சவாலாக இருக்கும். கடல் மட்டம் உயர்வு, அதிதீவிரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் தாவரங்கள், விலங்குகளின் இழப்பு போன்ற விளைவுகள் இப்போதே அதிகமாக இருந்தாலும், ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்த நிலை மேலும் மோசமாகும். காலநிலை மாற்றத்தை தணிக்க அதன் விளைவுகளுக்கு ஏற்ப மனிதர்கள் மாறுவதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் அது மனித நாகரிகத்திற்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 

குடும்ப அமைப்புகள், மதிப்புகள் உட்பட சமூகங்கள் முற்றிலுமாக மாறி, மனிதர்களின் வாழ்க்கை முறை அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்திருக்கும். யாருக்கு தெரியும்? ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஜாதி, மத, பேதம் இல்லாமல் கூட மனிதர்கள் மாறிவிடலாம். 

இதையும் படியுங்கள்:
மனித மூளையுடன் உருவாக்கப்பட்ட ரோபோ… சீனாவின் அற்புத கண்டுபிடிப்பு!
What will the human race look like in the next 1000 years?

மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை நாம் இப்போதே கணிக்க முடியாது என்றாலும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பரிணாம வளர்ச்சியில் ஆயிரம் ஆண்டுகள் என்பது மிகக் குறுகியது என்றாலும், முக அமைப்பு நிறம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது முழுக்க முழுக்க, நம்முடைய சுற்றுச்சூழலை பொறுத்தே நிர்ணயம் செய்யப்படும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com