உடலில் வெண்புள்ளிகள் தோன்றுவதன் காரணம் தெரியுமா?

ஜூன் 25, உலக விட்டிலிகோ நாள்
முகத்தில் வெண்புள்ளியுடன் பெண்
முகத்தில் வெண்புள்ளியுடன் பெண்https://skinkraft.com
Published on

வ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதி உலக வெண்புள்ளி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வெண்புள்ளி இருப்பவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சமூகத்தில் புறக்கணிப்புகளை சந்திக்கிறார்கள். வெண்புள்ளி ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

விட்டிலிகோ ஒரு தொற்று நோயா?

இல்லை. விட்டிலிகோ ஒரு தொற்று நோய் அல்ல. பலர் இது ஒரு தொற்று நோய் என்று நினைத்துக் கொண்டு வெண்புள்ளி பாதிப்புள்ளவர்களை விலக்கி வைப்பதும், ஒதுக்கி வைப்பதுமாக அவர்களை மன ரீதியாக துன்புறுத்துகிறார்கள். இது ஒரு தன்னுடல் தாக்கக் கோளாறு. உலகம் முழுவதும் 70 மில்லியன் மக்களுக்கு இந்தக் கோளாறு உள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனப்பாகுபாடு இன்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். விட்டிலிகோ பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களில் இருபதில் இருந்து 35 சதவீதம் பேர் குழந்தைகள்.

விட்டிலிகோ என்று அழைக்கப்படும் வெண் புள்ளி ஏன் ஏற்படுகிறது?

ஒரு நபரின் நோய் எதிர்ப்பு அமைப்பு உடலின் செல்களை தாக்கும்போது உடலில் வெண்புள்ளி ஏற்படுகிறது. பொதுவாக, மனித உடலில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் நுழையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் அவற்றை எதிர்த்து அழித்துவிடும். நமது சருமத்துக்கு நிறத்தை அளிக்கும் மெலனோசைட் என்கிற சுரப்பியை வெள்ளை அணுக்கள் அழிப்பதால்தான் உடலில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுகின்றன. அதுவே வெண்புள்ளி அல்லது விட்டிலிகோ என்று அழைக்கப்படுகிறது.

விட்டிலிகோவும் தொழுநோயும் ஒன்றா?

இல்லை. தொழுநோய் வேறு, விட்டிலிகோ வேறு. இரண்டும் ஒன்று என்று பலர் குழப்பிக் கொள்வார்கள். தொழுநோய் என்பது கண்கள் மற்றும் சருமத்தை பாதிக்கும் ஒரு நாள்பட்ட தொற்று நோயாகும். விட்டிலிகோ என்பது தன்னுடல் தாக்க நோயாகும். சருமத்தில் உள்ள அனைத்து வெள்ளைத் திட்டுகளும் விட்டிலிகோ அல்ல. பூஞ்சைத்தொற்று, தீக்காயங்கள் தொழு நோய் போன்ற பிற சரும நிலைகள் வெள்ளைத் திட்டுகளில்தான் தொடங்கும். வெண்புள்ளி உடலின் பல்வேறு பாகங்களிலும் ஏற்படலாம். பொதுவாக, வெண்புள்ளி உடலின் ஏதாவது ஒரு இடத்தில் தோன்றி, பின் உடல் முழுவதும் பரவி வெள்ளையாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் இமேஜை உயர்த்தும் பக்குவப்பட்ட பேச்சு!
முகத்தில் வெண்புள்ளியுடன் பெண்

சிகிச்சை: வெண்புள்ளிகளுக்கு வாய் வழியாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் கிரீம்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை இருக்கிறது. மேலும், யூவி தெரபி என்ற புற ஊதா ஒளி செலுத்தப்பட்டு அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்றாவதாக, அறுவை சிகிச்சை. உடலில் வெண்புள்ளி பாதிப்பில்லாத பகுதியில் இருந்து சருமத்தை எடுத்து நிறம் இல்லாத இடத்தில் அறுவை சிகிச்சை மூலம் மாற்றுவது. இது, ‘ஸ்கின் கிராப்டிங்’ என்று அழைக்கப்படுகிறது.

சுயம்வர நிகழ்ச்சி: வெண்புள்ளி பாதித்த நபர்களுக்கு அவ்வளவு எளிதில் திருமணம் நடப்பதில்லை. சில வருடங்களாக வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்ககம் அவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு தருதல், திருமணம் செய்து வைத்தல் போன்றவற்றை நடத்தி வருகிறது. அவர்களுக்கான சுயம்வர நிகழ்ச்சி நடத்தி வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com