பிரானாக்கள் வாழும் குளத்தில் நீங்கள் விழுந்தால் என்ன ஆவீர்கள் தெரியுமா?

Piranha
What If You Fell into a Piranha Pool?

பிரனா மீன்கள் எப்படிப்பட்ட கொடூரமான மீன்கள் என்பதை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கண நேரத்தில் அவற்றின் உணவுகளைக் கூர்மையான பற்களால் கிழித்து சாப்பிடக் கூடியவை. இப்படிப்பட்ட பிரானாக்கள் வாழும் குளத்தில் நீங்கள் விழுந்தால் என்ன ஆகும் என எப்போதாவது யோசித்ததுண்டா? இதுபோன்ற ஆபத்தான சூழலில் உண்மையில் என்ன நடக்கும் என்பதை விவரிக்கிறது இந்த பதிவு. 

பிரானாக்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதை ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் அவற்றின் வேட்டையாடும் கதைகளில் சிலர் படித்து தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் இதுபோன்ற கட்டுக் கதைகளே பிரானாக்கள் மீதான தவறான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அவை உண்மையில் மாமிச உண்ணிகளாக இருந்தாலும், அவற்றின் உணவுப் பழக்கம் திரைப்படங்களில் காட்டுவது போல மிகவும் மோசமானதாக இல்லை. உண்மையிலேயே பிரானாக்கள் சிறிய மீன்கள், பூச்சிகள் மற்றும் இறந்த விலங்குகளை உண்கின்றன. 

ஒருவேளை நீங்கள் பிரானாக்கள் வாழும் குளத்தில் விழுந்தால், நீங்கள் என்ன ஆவீர்கள் என்பதை நிர்ணயிக்க பல காரணிகள் உள்ளன. முதலாவதாக பிரானாவின் வெவ்வேறு இனங்கள் மாறுபட்ட குணங்கள் மற்றும் உணவுப் பழக்கங்களைக் கொண்டிருப்பதால், நீங்கள் எந்த இன பிரானாக்கள் இருக்கும் குளத்தில் விழுகிறீர்கள் என்பதை முதலில் கவனிக்க வேண்டும். பெரும்பாலான பிரானாக்கள் கூச்ச சுபாவமுள்ளவை. நீங்கள் திடீரென குளத்தில் விழுந்தால், அதனால் ஏற்படும் இடையூறுகளில் இருந்து தப்பிக்க அவை சிதறி ஓடவே செய்யும். இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் ஒரு சில பிரானாக்கள் உங்களை உணவாக நினைத்து உங்கள் அருகே நெருங்கலாம். நெருங்கிய பிறகு முதலில் உங்களை ஆராய்ந்து அச்சுறுத்தலாகவோ அல்லது உணவாகவோ நினைத்தால் கடிக்கக்கூடும். 

பிரானா மீன்கள் பெரும்பாலும் காயமடைந்த அல்லது பலவீனமான இறையை உண்கின்றன. எனவே நீங்கள் ஏற்கனவே காயமடைந்து குளத்தில் விழுகிறீர்கள் என்றால் உங்கள் சாப்டர் க்ளோஸ் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் அவை பலசாலிகள் இல்லை என்பதால், பிரானாக்கள் உங்களைக் கடித்தாலும், நீங்கள் தப்பித்து வெளியேறலாம். 

இதையும் படியுங்கள்:
ஒருவேளை பூமி தட்டையாக இருந்தால் என்ன ஆகும்? 
Piranha

மனிதர்களைப் பிரானா தாக்கும் நிகழ்வு மிகவும் அரிதானவை. அதுவும் எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்காமல் அமேசான் நதி போன்ற பிராணாக்கள் வசிக்கும் நீரில் மக்கள் செல்லும்போது சில சந்தர்ப்பங்களில் அவற்றால் தாக்கப்படுகின்றனர். எனவே பிரானாக்கள் வாழும் குளத்தில் நீங்கள் விழுவது நினைத்துப் பார்க்க பயமாக இருந்தாலும், திரைப்படங்களில் மிகைப்படுத்தி காட்டுவது போல ஏதும் மோசமாக நடக்காது. அவை மனித உண்ணிகள் அல்ல. இருப்பினும் பிரானாக்கள் இருக்கும் தண்ணீரில் தெரிந்தே இறங்குவது ஆபத்தானதாக மாறலாம். 

நல்லவேளை நமது ஊர்களில் இத்தகைய மீன்கள் இல்லை. ஒருவேளை நீங்கள் அமேசான் காடுகளுக்கு பயணம் செய்யும் நபராக இருந்தால், கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com