சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய கிரகமான வியாழன் அழகான மற்றும் மர்மமான ஒன்றாகும். ஒருவேளை நீங்கள் திடீரென வியாழன் கிரகத்தில் விழுந்தால் என்ன ஆவீர்கள் என எப்போதாவது யோசித்ததுண்டா? டேய், நாங்க ஏன்டா ஜூப்பிட்டர் கிரகத்துக்கு போகணும் எனக் கேட்கிறீர்களா? கொஞ்சம் கற்பனை செஞ்சுதான் பாருங்களேன் என்ன ஆகும்னு.
முதலில் வியாழன் கிரகம் என்பது பூமியை போன்ற திடமான மேற்பரப்பு இல்லாமல் முழுவதும் ஹீலியம் மற்றும் ஆக்சிஜன் வாயுவால் நிரப்பப்பட்ட கிரகம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய வாயுக்கள் நிரம்பிய அதன் வளிமண்டலத்தை நீங்கள் அடைந்தால் அமோனியா மற்றும் மீத்தேன் உள்ளிட்ட வாயுக்களால் உருவான மேகங்கள் உங்களை அழுத்தும்.
வியாழன் கிரகம் சூரியனிலிருந்து தூரமாக இருப்பதால், அதன் வளிமண்டலத்தின் மேல் அடுக்குகள் சுமார் -145 டிகிரி செல்சியஸுக்குக் கீழே இருக்கும். இதில் முதலில் நீங்கள் உறைந்து போவீர்கள். பின்னர் அந்த கிரகத்தை நீங்கள் நெருங்கும்போது, உள்வெப்ப நிலை காரணமாக வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதை உணர்வீர்கள். இறுதியில் கிரகத்தின் மேற்பகுதியை அடைவதற்கு முன்பாகவே, நீங்கள் பஸ்பமாகி ஆவி ஆகிவிடுவீர்கள்.
ஜூப்பிட்டர் கிரகத்திற்கு திடமான நிலப்பரப்பே கிடையாது. அது ஒரு மிகப்பெரிய வாயுப் பந்து. ஒருவேளை நீங்கள் ஜூப்பிட்டர் கிரகத்தில் விழுந்தாலும், அதன் தரைப்பகுதியை அடைவதற்கு பதிலாக, அதன் அடர்த்தியான மையப் பகுதியில் நேரடியாக போய் விழுவீர்கள். வியாழனின் மையமானது பாறை, உலோகங்கள் மற்றும் ஹைட்ரஜன் சேர்மங்களின் கலவையான கனமான தனிமங்களை கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இன்று வரை அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
வியாழன் கிரகத்தில் ஒரு மனிதன் விழுவதென்பது மிகவும் ஆபத்தான பயணத்தைப் போன்றது. கடுமையான அழுத்தம், தீவிர வெப்பநிலை, திடமான மேற்பரப்பு இல்லாமல் மற்றும் அறியப்படாத ஆழம் ஆகியவை மனிதர்களின் உயிர் வாழ்வுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். தூரத்திலிருந்து வியாழன் கிரகத்தின் கம்பீரமான தோற்றத்தை நாம் ரசிக்கலாமே தவிர, அந்த கிரகத்திற்கு சென்று உயிர் பிழைக்கலாம் என்பதை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
வியாழன் கிரகத்தில் விழுபவர்களுக்கு மரணம் நிச்சயம். ஒருபோதும் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. அப்புறம், எப்போ நாம ஜுப்பிட்டர் கிரகத்துக்கு போகலாம்?